
“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்
யாம் எல்லா இடங்களுக்கும் சுற்றி அனுபவங்கள் பெற்ற பிற்பாடு
தான்
1.இந்தச் சக்தியை உங்கள் அனைவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…?
என்று தெரிந்து கொண்டேன்.
2.குரு வழியில் இப்பொழுது அதைக்
கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
ஆனால் எம்மைப் போற்ற வேண்டும் என்று யாம்
விரும்பினால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அடேயப்பா… எங்கள் சாமி
பெரியவர்…! என்று சொல்ல வைக்கலாம்… இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால் எதற்கு வரும்…?
இப்பொழுதும் கூட்டங்கள் வருகின்றது… ஆனால் அதை நான் கழித்து
விட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையான
நிலைகள் பெற வேண்டும் என்று விரும்புவர் இதிலே தங்கி
இருப்பார்கள்.
உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் குறைத்தே தான் இருக்கும்.
1.அருள் வழியில் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று
விரும்புவர்களுக்கு
2.அந்தச் சத்தை ஏற்றிக் கொடுத்து கொண்டே இருப்பேன்.
முழுமையாக இந்த உடலுக்கு வேண்டும்… தன் வாழ்க்கைக்குக் தான்
வேண்டும் என்று எண்ணி வருபவர்களை நான் “சிறிது
சிறிதாகக் கழித்து விட்டு விடுவேன்…”
இந்த உடலை வைத்துத் தான் நாம் உயர்ந்த
சக்தி பெற வேண்டும்… அருள் ஞானத்தைப் பெற வேண்டும். நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால்
மற்றவரையும் பெறச் செய்யலாம். நீங்கள் வளர்ந்தால் தானே…!
நான் ஒருவன் என்ன செய்ய முடியும். என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. நான் நினைக்கலாம் யானையைப்
பண்ணலாம் பூனையைச் செய்யலாம் என்று.
அப்படிச் சொன்னால் “அது வெறும் திமிர்தான்…! அப்படி ஒன்றும் செய்ய முடியாது…”
ஒரு நெல்லை எடுத்துப் பல நெல்களாக அதை விளைய வைத்து எல்லோரையும் பெறச் செய்யலாம்.
1.இந்த அடிப்படையில் வலுவைக் கொடுத்துத்தான்
எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க முடியும்.
2.குரு எனக்குக் கொடுத்தது அது தான்…
அதைத் தான் உங்களையும் செய்யச் சொல்கிறேன்.
நான் அதைச் செய்கிறேன் என்று “அந்த நான்” வந்து விட்டால் அதற்குப்பின் வளர்ச்சி இல்லை…
தீர்ந்துவிடும்…!
நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும். மகரிஷிகளின்
அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் உங்கள் பார்வை அனைவரையும்
நல்லவராக்க வேண்டும்… என்ற இந்த
எண்ணத்தை நான் எப்பொழுது கொண்டு வருகின்றேனோ
1.நீங்களும் வளர்கின்றீர்கள் நானும் வளர்கின்றேன்.
2.உலகத்தையும் வளர்க்க முடிகின்றது… நானும் அந்த வளர்ச்சி பெற முடியும்.
சூரியன் எதனின் துணை இல்லாதபடி தான் மட்டும் சக்தி பெற வேண்டும்
என்றால் முடியாது. 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்திலிருந்து வருவதை எடுத்து இங்கே கொடுக்கவில்லை
என்றால் சூரியன் இயங்க முடியாது.
பிற மண்டலங்களின் சக்தி வரவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்திற்கும் சக்தி இல்லை. அண்டத்தில் இருப்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள்
சேர்க்கப்பட்டுப் பிண்டத்திற்குள்ளும் இருக்கின்றது.
1.உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விட்டால்
அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்…
2.என்றும் பதினாறு என்று வளர்ச்சி அடையும்… அது வேகாநிலை…
எதிலுமே வேகாது.
3.2000 சூரியக் குடும்பத்தை முதலில்
வட்டமிடும். பின் அதைக் கடந்து அகண்ட அண்டத்திற்கும் செல்லும்.
4.அப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகச் செல்லும்.
இருண்ட உலகமாக இருப்பது ஒளியின் சிகரமாக அகண்ட அண்டம் விளையும். அது எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.
அனைத்தும் ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்குப்
பின் மனித இனங்களைச் சீக்கிரமாக மாற்றும் நிலை
வரும். ஒளியின் சுடராக ஒளிக்குள்
எல்லாமே ஒளியாகும்.
இப்படி எத்தனையோ ஆண்டுகள் நாம் வளர்ச்சி
பெற வேண்டும்.