கேள்வி:-
ஞானகுருவின் உபதேசத்தை ஒட்டுக் கேட்பது போல் கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளீர்கள்.இன்று உபதேசங்களை ஒலி நாடாக்களிள் கேட்கும் போதும் நேரடியாக அமர்ந்து கேட்ட பலன் கிடைக்குமா.முடிந்த அளவு அமைதியான இடத்தில் அமர்ந்து தான் உபதேசம் கேட்க வேண்டுமா..?
பதில்:-
சாமிகள் தன் உபதேசத்தை ஒட்டுக் கேட்பது போல் ஏன்
கேட்கச் சொல்கிறார் என்றால் நம் கவனம் முழுவதும் அவர் என்னவெல்லாம் சொல்கிறார் என்ற
முழுமையான நினைவு அதாவது
1.அவரின் நினைவு தான் நமக்கு இருக்க வேண்டும்,
2.நம் நினைவு கொண்டு அவர் உபதேசத்தைக் கேட்டால்
நம் உணர்வு கலந்தே பதிவாகும். அதனால் அந்த அளவுக்கு அதிலே மூலத்தை (உண்மைகளை) நாம்
உணர்வது கடினம்.
ஆகையினால் மனம் மகிழ்ச்சியாகவோ அமைதியாக இருக்கும்
பொழுதோ குரு உணர்வை ஆழமாகப் பதிவாக்க முடியாது. கேட்கலாம். ஆனால் அடுத்த கணம் மறைந்துவிடும்.
இன்னும் ஒரு தடவை இரண்டு தடவை கேட்கலாம் என்று ஆசைப்பட்டால்
நல்ல தூக்கம் தான் வரும்.
நம் வாழ்க்கையில் நம் சந்தர்ப்பம் எப்பொழுதெல்லாம்
நமக்குப் பிடிக்காத நிலைகளில் எதிர் நிலைகளாகச் சந்திக்கின்றோமோ
1.அந்த நேரங்களில் தான் அதிகமாகச் சாமிகளின் உபதேசத்தைப்
பதிவாக்க வேண்டும்.
2.படிப்பதை விட முடிந்தால் அவருடைய audio உபதேசத்தைக்
கேட்க வேண்டும்.
3.கொதிப்பின் நிலைகளில் இருக்கும் நம் உணர்வின்
அழுத்தத்தை அப்படியே ஆற்றலாக்கி அவர் சொல்வதைக் கூர்மையாகக் கேட்க வேண்டும்.
4.விழுங்கிவிடுவது போல் அதை உள் வாங்க வேண்டும்.
5.அப்பொழுது தான் அது ஆழமாகப் பதிவாகும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல தடவை சாமிகளை அடித்து
உதைத்துப் புரியாத பாஷைகள் மூலமாகத்தான் மெய் (குரு உணர்வை) அவருக்குக் கொடுத்தார்.
சாமி அடி வாங்கினார் என்று சாதாரணமாக நாம் சொல்கிறோம்.
நம்மை இப்படி யாராவது அடித்தால் சும்மா இருப்போமா..?! அடி வாங்கிய சாமிகளுக்கு குருநாதர்
மேல் எவ்வளவு கோப்ம் இருக்கும்…? என்று எண்ணிப் பாருங்கள்.
அந்த உணர்வின் வலு கொண்டு தான் குரு உணர்வை சாமிகளும்
பெற முடிந்தது. குருநாதரும் கொடுக்க முடிந்தது. நம்முடைய வாழ்க்கையில் பிரச்னைகளுக்குப்
பஞ்சமில்லை.
1.பிரச்னை வரும் பொழுதெல்லாம் உபதேசம் கேட்டால்
2.குரு உணர்வுகள் நமக்குள் நன்கு பதிவாகும்.
என்னுடைய அனுபவம் நான் நல்ல உணர்வு கொண்டு சாமிகள்
பேசிய 2 நிமிட உபதேசத்தை type செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் அரை மணி நேரம் என்றால்
ஒருவர் மீது கோபம் வந்த பின் அதே 2 நிமிட உபதேசத்தை என்னால் பத்து நிமிடத்தில்
type செய்ய முடிகிறது.
1.விஷம் தான் அண்டத்தின் இயக்கம்.
2.அந்த விஷத்தையே ஒளியாக மாற்றும் பருவம் தான்
3.மகரிஷிகள் காட்டிய வழியில் நாம் செல்லும் இந்த
மெய் ஞானப் பாதை…!
கீழ்க்கண்ட LINK மூலம் சாமிகளின் AUDIO உபதேசங்களைக்
கேட்கலாம்.