தீமை என்ற
நிலையைத் தெரிந்து கொள்ளும் நிலையாக இருப்பது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா,
தீமைகளை
நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம் அதை வழி நடத்தி அதன் உண்மையின்
உணர்வை அறிவதற்காக இதைச் சொல்கின்றேன்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்களால்
வானை நோக்கிப் பார்த்து
2.ஏக்க
உணர்வுடன் இருக்க வேண்டும்.
அதே
உணர்வுடன் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது நாம் கண்ணால்
பார்த்து உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர முடிகின்றது.
உதாரணமாக
வேதனைப்படுவோரைக் கண்களால் உற்றுப் பார்க்கின்றோம். அந்த வேதனையான உணர்வை உயிரின்
காந்தம் இழுத்து நமக்குள் அறியச் செய்கின்றது.
1.கண்ணால்
பார்க்கின்றோம்.
2.உயிரால்
உணர்கின்றோம்.
இதே போல
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று
1.கண்ணின்
நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
2.அது
வலிமையாகி விடுகின்றது.
வேதனைப்பட்டோர்களுக்கு
அதை விசாரித்து நாம் உதவியும் செய்கின்றோம். வேதனை நமக்குள் வராமல் தடுக்க அடுத்து
நாம் எண்ண செய்ய வேண்டும்?
அடுத்த
கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்துப் புருவ
மத்தியில் எண்ணித் தடுக்க வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.ஆறாவது
அறிவின் துணை கொண்டு
2.கட்டளையிட
வேண்டும் – அது தான் சேனாதிபதி.
அதே
சமயத்தில் தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் முதலில் சிறிதளவு போய்விட்டது. அது
உடலுக்குள் புகாது அந்தத் தீமையான உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.
அதற்காகத்தான்
கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்வது. ஏனென்றால்
வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது கண்ணின் நினைவு வேதனைப்படுபவர் மீது தான்
இருக்கும். அதைத்தான் உயிர் கவரும்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ
மத்தியில் இணைக்கும் பொழுது இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடைப்படுத்தப்படுகின்றது.
புருவ மத்தியில்
தடைப்படுத்திய பின் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை
உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி
ஆணையிட வேண்டும். ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது கார்த்திகேயா. இவ்வாறு
உடலிலுள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.
நாம்
எண்ணியபடி அந்தத் தீமைகள் வராதபடி தடுக்கும் நிலைக்குத் தயாராகின்றது. இந்த
உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலில் சேர்க்கப்படுகின்றது.
1.துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துத் தீயதை நுகராது தடுத்த பின்
2.விஷத்தை
அடக்கும் சக்தியாக அமைந்துவிடுகின்றது
3.நாம்
நுகர்ந்த தீமைகள் சிறுத்து விடுகின்றது.
4.துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது அது குறைக்கப்படுகின்றது.
ஒரு
தீயவனைப் பார்க்கும் பொழுதோ நோயாளியைப் பார்க்கும் பொழுதோ கண்ணின் கரு விழி
“ருக்மணி” ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாக்குகின்றது. பதிவான பின் தான்
அது நுகரும் தன்மை பெறுகிறது.
அடுத்த
கணம் அதைத் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
எடுத்துக் கொண்டால்
1.கருவிழி
ருக்மணி நம் உடலுக்குள் பதிவாக்கிய
2.அந்த
உணர்வுகளுக்கு (நோயாளி/தீயவன்) அருகிலேயே பதிவாக்குகின்றது.
3.துருவ
நட்சத்திரம் அதைக்காட்டிலும் வலிமையானது.
4.மற்றவர்கள்
உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… நிறுத்திவிடுகின்றோம்….!
அடுத்து
அந்த நோயாளி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
1.அவர்
உடல் நலம் பெற வேண்டும்.
2.அவர்
அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இந்த
உணர்வுகளைப் பதிவு செய்து (RECORD) விடவேண்டும்.
4.இதற்கு
மத்தியில் அவருடைய வேதனை என்ற நிலைகள் அடங்கி விடுகின்றது.
இப்படிப்
பழகிக் கொண்டால் தீமைகள் என்று தெரிந்தாலே உங்கள் கண்ணின் நினைவு
1.புருவ
மத்தியிலிருக்கும் உயிருக்கும்
2.விண்ணிலிருக்கும்
துருவ நட்சத்திரத்திற்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்
தீமைகளை
நுகர்வதற்குப் பதில் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வந்து கொண்டேயிருக்கும். செய்து
உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.