நீங்கள் நல்லது அனைத்தையும் சேர்த்து வைத்திருந்தால் நல்லதைப் பேசுகிறீர்கள்.
கோபமாகப் பேசி அதை வளர்த்திருந்தால் ஆத்திரப்பட்டு வேதனையுடன் பேசுகின்றீர்கள். ஆனால்
1.ஞானிகள் தன் வாழ்க்கையில் வந்த அத்தனையும் உயிரின் துணை கொண்டு சுட்டுப் பொசுக்கி
விட்டு
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற்றவர்கள் - கடுமையான (எம) அக்னி… நெருப்பு…!
3.உயிர் உள்ளே இருந்து எதையுமே பொசுக்குகிறது (அதாவது கெட்டது எதுவும் தன்னை
அணுகாதபடி ஒளிச் சரீரம் பெற்றவர்கள்)
4.அதைத்தான் பெரு வீடு பெரு நிலை… “சப்தரிஷி மண்டலம்…!” என்று சொல்வது
5.மனிதன் நட்சத்திரமான நிலை அது.
என்னவெல்லாம் நாம் சந்தோஷப்படுகிறோமோ அந்தச் சந்தோஷமெல்லாம் அங்கே அதற்குள்
இருக்கிறது. சொர்க்க பூமி என்பது அது தான் அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள்ளே பெரிய
உலகமே இருக்கிறது.
சூரியனை அருகிலே பார்க்கும் போது எவ்வளவு பெரியதாக இருக்கிறது…? நீங்கள் சப்தரிஷி
மண்டலத்தைத் தூரத்தில் பார்க்கும் போது கண்ணுக்குச் சிறியதாகத் தெரிகிறது இல்லையா…?
அது எத்தனை கோடி மைலுக்கு அந்தப் பக்கம் இருக்கிறது…? அப்பொழுது எவ்வளவு பெரியதாக
இருக்கும்…! காலையில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறீர்கள் அல்லவா…! அதிலிருந்து
வந்தது தான் எல்லாமே…!
அந்த நட்சத்திரத்தின் அலைகளைப் பற்றுடன் பற்றிப் நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.
துருவ நட்சத்திரத்தின் அலைகளை எடுத்துக் கொண்டு விண்ணுக்குப் போக மிகவும் சுருக்கமான
வழி… அவ்வளவு தான்…!
இதை நல்லது என்று முடிவு பண்ணிவிட்டீர்கள் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை
வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த மெய் வழியைப் பெற வேண்டும் என்ற அந்த எண்ணத்திலேயே இருங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தியை உங்கள் எண்ணத்தின் மூலமாக எடுத்துக் கொள்வதற்காகத்தான்
பௌர்ணமி தியானம் என்று கொடுக்கிறோம்.
1.பாதை வேண்டுமல்லவா..?
2.ரூட் இல்லாமல் எதிலும் போக முடியாது.
உதாரணத்திற்குக் காடாக இருக்கிறது. ரோடு போட்டால் தான் சரியாக வரும். அதனால்
தான் அந்த மெய் வழியில் உங்களுக்கு ரூட்டைப்
போட்டுக் கொடுத்திருக்கிறோம்.
அந்த ரூட்டில் போனால் சிக்கலில்லாமல் போகலாம். இல்லை…! குறுக்கு வழியில் போகலாம்
என்று நினைத்தீர்கள் என்றால் பின்னாடி சிக்கிக் கொள்வீர்கள். சொல்வது புரிகிறதா…?
விமானம் என்ன செய்கிறது..? மேலே தான் பறக்கிறது. ரூட் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
அதில் ஒரு பாயிண்ட் மாறினாலும் ஒருத்தருக்கொருத்தர் மோதிக் கொள்கிறார்கள்.
விமானம் மேலேதான் போகிறது. ஆனாலும் அந்த பாதையில் சரியாகத்தான் அவன் போயாக வேண்டும்.
மனிதனும் கோள் தான். சூரியனும் கோள்தான். கோள் நட்சத்திரமாக மாறி இருக்கிறது.
அந்த நட்சத்திரம் சூரியனாக மாறி இருக்கிறது.
1.இப்போது நாம் கோளாக இருக்கிறோம்.
2.நட்சத்திர நிலைக்குப் போக வேண்டும்.
3.நட்சத்திர நிலைக்குப் போன பிறகு சூரியனாக ஆகிறோம்.
4.சிருஷ்டிக்கும் தன்மை பின்னாடி வருகிறது.
எந்த எதிர்ப்பும் இல்லாதபடித் தீமைகளைக் கருக்கிப் (அகற்றி) போய்க் கொண்டே இருக்க
வேண்டும்.
1.உடலை விட்டு நாம் வெளியில் போய் விட்டால்
2.மீண்டும் எந்த உடலும் நம்மை இழுத்து விடக் கூடாது.
அப்படி இழுத்து விட்டால் அந்த உடலுக்குள் போய்க் கூட்டை அமைந்துவிடும். நம்
உணர்வு முழுவதும் மாறிவிடும். அப்புறம் அதிலிருந்து சம்பாதித்து வர வேண்டும் என்றால்
உடல் பெற்று விட்டால் போய்விடும். “அதற்கு முன்… நாம் ஒளிச் சரீரம் பெற்று நட்சத்திரமாக
ஆகிவிட வேண்டும்…!”
அதனால் தான் அந்த ரூட் மார்க்கத்தைப் போட்டுக் கொடுக்கிறோம். ஏனென்றால் அந்த
வழியில் குருநாதர் அது எப்படி எப்படிப் போகவேண்டும் என்று ரூட்டை வகுத்துக் கொடுத்தார்.
இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?
எனக்குக் குருநாதர் கொடுத்தார் என்றல் இதற்கு முன் நட்சத்திரமாக அவர் போய் இருக்கிறார்.
அந்த நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய ஒளிதான் இங்கே இருக்கக்கூடிய இன்னொரு சரீரத்திலிருந்து
பாய்ச்சி வேலை செய்து கொண்டிருக்கிறது.
அதாவது அபிராமிப்பட்டரின் உடலில் இருந்த ஆத்மா தான் ஈஸ்வரப்பட்டாவின் உடலுக்குள்
வருகிறார்.
1.அவருடைய அலையின் தொடர் வரிசையில் நம் எல்லோருக்கும்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குப் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.