ஒரு மத யானையை மாவுத்தன் அடக்குவது தன் மதி கொண்டு
தான்.
மனித உணர்வின் எண்ணம் (நம்முடைய எண்ணம்)
1.தன் ஞானத்தைக் கொண்டு தன் ஆத்மா விழிப்புறும்
மதி அறிந்தாலும்
2.தன் உணர்வின் எண்ணத்தை நியாயப்படுத்தும் செயல்
கொண்டு
3.பிறரின் உணர்வுகள் செயல்படும் எண்ணத்தை – “தன்
எண்ணம் கொண்டு பார்க்கும் பொழுது..!”
4.பிறிதொருவரின் செயலைக் குற்றமாகக் குறையாக எண்ணி
5.தன்னையே நியாயப்படுத்தும் பொழுது
6.இப்பிரபஞ்சத்தில் பரவியுள்ள பகுத்தறிவின் ஞானம்
நமக்குள் வளர்ச்சி பெற்றதாக வந்த நிலையில்
7.அந்த ஞானத்தை நாம் விரயப்படுத்துவதால் ஆத்மாவின்
விழிப்பு (தன்னை அறியும் நிலை) உறங்கி விடுகின்றது.
பிறிதொருவரின் உணர்வு மோதும் பொழுது தன்னை உயர்த்தி
பிறிதொருவரைக் குறைக்கும் எண்ணத்தை எடுத்தோமானால் தன் உணர்வில் முதலில் மோதுவது குறை
கொண்ட ஒலித் தன்மைதான்,
ஞானத்தின் செயலானது ஒவ்வொரு அணுவுமே மூச்சலையிலிருந்து
வெளிப்படும் சுவாசக் காற்றானது
1.சாதாரண மனிதனுக்கு உள் இழுப்பது நல்ல காற்றும்
வெளிப்படுவது தீய காற்றாகவும் இருக்கின்றது. – இது இயல்பு
2.ஆனால் தன்னை உணரும் மெய் ஞானியின் மூச்சுக் காற்றோ
உள் இழுக்கும் காற்றுக்கு மேல் அவன் வெளிப்படுத்தும் சுவாசக் காற்று பரிசுத்த ஒளியாகப்
பரவக்கூடிய தன்மை உண்டு.
தீமையை நன்மையாக்கும் சூட்சும உயிர் தான் மனித உயிராத்மா
(மனித உயிரும் + ஆத்மாவும்). ஆதிசக்தியின் படைப்பால் பலன் கொண்ட நிலையில் படைக்கப்பட்ட
உயர்ந்த படைப்பு தான் அந்த மனித உயிராத்மா. அண்டத்தையே ஆளுகின்ற சக்தி அந்தப் படைப்புக்குத்
தான் உண்டு.
அந்தப் படைப்பின் பலனைப் பெற வேண்டும் என்றால் மாமகரிஷிகளின்
அருள் ஒளி சக்தி கொண்டு ஆத்மாவும் உயிரும் இணையும் வலுக் கொண்ட விழிப்பு நிலையாக
1.மெய் ஞானத்தில் பெறும் தியானத்தின் முறையால்
2.தன்னைத் தானே உணரும் விழிப்பு ஒவ்வொருவருக்கும்
வேண்டும்.