
நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்
இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் அதிலே ஒரு நண்பன் தவறு
செய்தாலும் அதைப் பற்றி நாம்
சொல்லப்படும் பொழுது… “கூட இருக்கும் அந்த நண்பன்” அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
காரணம்…
1.அவருடைய உணர்வு அவனுக்குள் அது முன் பகுதியில் வலுவாகச் சேர்ந்திருக்கப்படும் பொழுது
2.நம் உணர்வை நுகர்ந்தவுடனே குற்றப்
பெருக்குகளைக் கூட்டி நம்மைத் தான்
குற்றவாளியாகச் சொல்லச் செய்யும்.
அப்போது நாம் நுகர்ந்த உணர்வு… அவன் உணர்வை வலு சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வுகள்
அதை ஏற்பதில்லை. இருந்தாலும் நம் ரத்தங்களில் இதைப் போன்ற உணர்வுகள்
இணைந்து விடுகின்றது.
இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களுக்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
ஒடுங்குகின்றது.
1.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தி இழக்கின்றது.
2.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் பொழுது ஒடுங்குகிறது… அதை ஏற்றுக்
கொள்வதில்லை.
ஏற்கவில்லை என்றாலும் உணர்வின் அழுத்தம் அதிகமாகும் பொழுது… கூட கொஞ்ச நேரம் நிலைநிறுத்தி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.
நாம் எப்படிச் சுவாசத்தின் மூலம் “மூச்சு
விடுகின்றோமோ…” அதே மாதிரி
1.அந்த இயக்கத் தொடருக்கு பிரணவம்… அந்த
இயக்கம் வேண்டும் என்றால்
2.உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் வாயு
உண்டாகின்றது… அதனுடைய அழுத்தம் உண்டாகிறது.
சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனைகள் வருகிறது…? எந்தெந்தப் பொருளை அதிகமாகப் போடுகின்றோமோ அந்த மாதிரி
வாசனைகள் அதிலிருந்து வருகின்றது.
அது போலத் தான்
1.உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்கள்
நெளிகிறது… உடலில் மாறுபட்ட உணர்ச்சிகள்
தோன்றும்... இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
2.நம் உயிர் எலெக்ட்ரிக்காக இருக்கிறது. நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்காக
எதிர்நிலையான அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.
இப்படி எதன் உணர்வை நாம் சந்திக்கும்
சந்தர்ப்பம் ஆகின்றதோ… ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில்
நம் ரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பல விதமான அணுக்களின் மாற்றங்கள் ஆவதும்
நிகழ்கிறது.
நல்லவரிடம் பேசப்படும் பொழுது அதற்குத்த நிலையில் அமைதியாகிறது. ஆனால்
அடுத்து ஒரு சண்டை போடுபவர்… வெறுப்பாகத் தாக்குபவர்… திட்டிப் பேசியவர்களின் உணர்வை நுகர்ந்தால்
1.மிகவும் இக்கட்டான நிலைகள் ஆகி இந்த
உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் முறையாகின்றது.
2.நம் உடலிலே சலனங்களும் சஞ்சலங்களும் ஏற்படுகிரது.
ஆக… நல்ல அணுக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும்
பொழுது உடல் சோர்வடைகின்றது… உணர்ச்சிகள் மாறுவதையும்
பார்க்கலாம்.
எந்த உணர்ச்சியின் தன்மையைக் கூட்டுகின்றோமோ… கண் வழி எந்த
உணர்வை அதிகமாக்குகின்றமோ… கண்கள்
நுகர்ந்து உயிரிலே மீண்டும் அநத உணர்ச்சிகள் அதிகமாக ரத்த நாளங்களில்
சேர்க்கப்படுகின்றது.
1.அதனால் பதட்டமும்
பயமும்
வருகின்றது…
அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிச்
சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றார்களோ என்று…!
2.சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு
இந்தப் பதட்டம் வரும்.
நல்லதைச் சொல்லத் துணிவு வந்தாலும் அவர்களைச்
சிந்திக்கும்படிச் செய்யும் பதிலைச் சொல்லத் தெரியாது. அப்போது நம்மை அறியாதபடி பகைமை உணர்ச்சிகள் உடலிலே வந்து விடுகின்றது.
இது அனைத்துமே இரத்தங்களில் தான் முதலில்
கலக்கின்றது.
நாம் நுகரும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவி அதன் வழியே நம்மை வாழச் செய்து… அந்த உணர்வுகளே நம்மை ஆளுகின்றது என்பதை நாம்
தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு என்ன செய்ய
வேண்டும்…?
1.நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்.
2.நம் உடல் முழுவதும் இந்த உணர்ச்சிகளைப்
பரவச் செய்யப்படும் பொழுது
3.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு
நிம்மதியும் சாந்தமும் இயக்க முடிகின்றது.
அந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உயிர் உடலுக்குள் பரவச் செய்து தீமையான உணர்வுகளை அமைதிப்படச் செய்கின்றது.
ஆனால் “சாதாரண மனிதனின் உணர்வை வைத்து...” அதை அமைதிப்படுத்த முடியாது.
உங்களுக்குள் பதிவு செய்த அந்த மகரிஷிகள் உணர்வை எண்ணி
எடுத்து ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் எங்கள்
ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் கண்ணின் நினைவு உடலுக்குள்
செலுத்த வேண்டும்.
அப்பொழுது…
1.ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை
என்ற அந்த வித்திலே (தீமையான வித்தில்) இணைக்கப்படும் பொழுது
2.கொஞ்சம் கொஞ்சமாக இதனுடைய வலு கூடும் பொழுது அதை அடக்கக் கூடிய சக்தியாக அது மாறுகின்றது.