
மரண பயம் எதிலே வருகின்றது…?
சகோதர தத்துவம் நமக்குள் எதிலே இருக்க வேண்டும்…?
1.நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் எனக்குள் அந்தச் சகோதர
தத்துவம் வளர்கின்றது.
2.உங்கள் குடும்பம் வளம் பெற வேண்டும் என்று எண்ணினால் எனக்குள் இருக்கும்
3.நல்ல குணமும் எதிர் குணங்களும் நலம் பெறுகின்றது.
4.ஏனென்றால் எனக்குள் எல்லாமே அந்த அணுக்கள் ஒரு குடும்பமாகத் தான்
வாழ்கின்றது
5.”நீங்கள்… நான்…” எல்லோரும்
சேர்த்து இந்த உடலில் ஒரு குடும்பமாக வாழ்கின்றது.
6.ஒரு உலகமாக வாழும்… ஒரு ஊராக வளர்கின்றது.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் யார் பிரிந்து இருக்கின்றோம்…? யாரும் யாரை விட்டுப் பிரிந்து இல்லை. ஒரு வேளை
சாபமிட்டால் அங்கே இருவருடைய உணர்வும் ஒன்றாகி விடுகின்றது.
நட்பாகின்றது அல்லது பகைமையாகி விடுகின்றது. பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால்
பகைமையைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது. நட்பின் தன்மை
வரப்படும் பொழுது அந்த நட்பே நமக்குள் பெருகுகின்றது.
பகைமை உணர்வுகள் நமக்குள் வளரும் பொழுது தான்… ஐயோ மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது
உடல் வலிக்கின்றது முதுகு வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்று வருகின்றது.
இந்த உணர்வுகள் வர வர
1.நாம் கோபப்பட்டால் தான் அதற்குச் சாப்பாடு கிடைக்கும்.
2.அல்லது என்னை இப்படிப் பேசினார்களே என்று வேதனைப்பட்டால் அந்த வேதனையான
அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.
நீங்கள் சும்மா இருந்து பாருங்கள் இனம் புரியாதபடி வேதனைகள் வரும்… அறியாத கோபம் வரும்… நமக்குள் பகைவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
அந்த நேரத்திலே பகைமை உருவாக்கப்படும் பொழுது புறத்திலேயும் பகைவர்களை உருவாக்கி
விடுகிறது. அப்பொழுது “மரண பயம்” என்ற நிலை வருகின்றது.
மரண பயம் எதிலே வருகின்றது…? மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு…
1.நமக்கு ஏதும் கிடைக்காமல் போய்விடுமோ…?
2.நம் ஆசை நிறைவேறாமல் போய்விடுமா…?
3.அதல பாதாளத்திற்குப் போய் விடுவோமா…?
4.நம் குடும்பம் சிரமப்பட்டுவிடுமோ…? என்றெல்லாம்
எண்ணும் பொழுது மரண பயம் வந்து விடுகின்றது.
மரண பயம் வந்து விட்டால் மனிதனைக் காக்கும் நிலை இழக்கப்படுகின்றது. பயத்தால் துடிப்பு நிலை அதிகரிக்கிறது…! எதை எண்ணுகின்றோமோ அதனின் வளர்ச்சி இங்கே வருகின்றது.
ஒவ்வொரு குணங்களுக்குள்ளும் மரண பயம் பட்டால் அது மடிந்து விடுகின்றது… செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.
ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி விடுங்கள். உடனே அந்த நல்ல குணங்களுக்கு நாம் சொன்னது தப்பாகி விட்டதோ…! என்று பட…பட… என்று இங்கே
துடிப்பாகும். நல்ல குணங்கள் மடியும் தருணம் வந்து விடுகின்றது.
என்ன சொல்வாரோ…! ஏது
சொல்வாரோ…? இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது இந்த உணர்வுகள்
அதிகரித்து விட்டால் மடிந்து விடுகின்றது. இந்த உணர்வின்
தன்மை வரப்படும் பொழுது நம் நல்ல குணங்களைக் காண முடியுமா…?
1.நல்ல குணங்கள் மடிந்து மரண பயத்தை ஊட்டுகின்றது.
2.மனிதனையே மரணமடையச் செய்யும் நிலை உருவாக்கி விடுகின்றது.
3.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
4.மகரிஷிகளின் அருளை நாம் பெறுதல் வேண்டும்
5.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தி பெற
வேண்டும்.
எமது அருளாசிகள்.