
ஆலயத்தை உருவாக்கிய ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?
மனிதன் தனது வாழ்க்கையில் ஆறாவது அறிவை வைத்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்.
நம் கண்களின் இயக்கங்களைப் பற்றி அன்று வியாசகர் தெளிவாகக்
கொடுத்துள்ளார்.
1.கண்களால் காணும் உணர்வுகளைப் பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதை இயக்கிச் செயலாக்குவதும்
4.அதன் உணர்ச்சிகள் நம்மை எப்படி உருவாக்குகிறது…?
என்பதையும் அறியச் செய்தார்.
தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து அந்தச் சிலையின் குணங்களை நாம்
எடுக்கும் பொழுது… இந்தத் தெய்வ
குணம் நாங்கள் பெற வேண்டும்… இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத்
தெய்வ குணம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி எண்ணும் பொழுது நாம் அதுவாகவே ஆகின்றோம்.
1.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது
2.நம் சொல் பிறரைப் பண்படுத்தும் நிலையும் உருவாக்குகின்றது.
ஆக இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் தெளிவாக்கி நீ எதை
எப்படி வளர்க்க வேண்டும்…? எதன்
வழிகளிலே இந்த வாழ்க்கை வாழ வேண்டும்…? என்று காட்டுகின்றார்கள்.
யாகம் என்றால் என்ன…?
நமது உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது உடல் முழுவதும் படர்கின்றது.
1.நம் மூச்சு வழி சொல் வழி கூடி இந்த உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
2.கேட்போர் உணர்வுகளை மகிழச் செய்கின்றது
ஆனால் யாகத் தீயிலே பல நல்ல பொருள்களைப் போட்டவுடன் கருகிப் புகை மண்டலமாக
வெளி வருகின்றது. நம் கண்ணிலேயும்
படுகின்றது சுவாசித்தால் நெடியும் வருகின்றது.
இந்த யாக மண்டலத்தில் என்ன இருக்கின்றது…? புறநிலையைக் காட்டி அதனை அகநிலைகளுக்கு ஊட்ட முடியாது.
நம்முடைய கண்கள் புறக்கண் உயிர் அகக்கண். நாம் புறக்கண்ணால் பார்ப்பதும் உயிரிலே உராயப்படும் பொழுது அகக்கண்ணாக
அது உள் நின்று நம்மை இயக்குகின்றது என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் இது
துவைதம்… அதாவது உருவம்.
1.சமஸ்கிருதத்தில் துவைதம் - இது உருவம்
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்
3.அருவத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி.
4.துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்… தனக்குள் மறைந்து இயக்கும் என்று உணர்த்துகின்றார்கள்.
கண்ணிலே ஒரு பாம்பைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்ச்சி “ஐயோ… பாம்பு…!” என்று இயக்குகின்றது. ஒரு அழகான பொருளைப்
பார்த்தோம் என்றால் “ஆஹாஹா…” என்று
மகிழ்ச்சி அடைகின்றோம்.
பொருள் துவைதம் உருவம் உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம். உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சி. அந்த உணர்வின் தன்மை உணர்ச்சியை ஊட்டும். உயிர்
அந்த அணுவாக மாற்றுகின்றது.
ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வம் அது உருவம்… அந்த உயர்ந்த குணங்களை உன் உடலாக்கு.
ஆனால் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து உருவாக்கினால் உடல்
நலிகின்றது… “சைவ சித்தாந்தப்படி…!” ஏனென்றால் அதன் வழிகளில் தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டது.
அந்தத் தெய்வச் சிலைக்குப் போடப்பட்டிருக்கும் வைர கிரீடத்தைப் பார்க்கப்படும்
பொழுது அது எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல் ஜொலிக்க வேண்டும். அதாவது என் சொல்லைக் கேட்போருக்கெல்லாம்
சந்தோசம் வர வேண்டும்.
தங்கம் எப்படி மாங்காது இருக்கின்றதோ என் மனம் எப்பொழுதும் அவ்வாறு மங்காது
இருத்தல் வேண்டும். இந்த ஆலயம்
வருவோர் அனைவரும் தங்கத்தைப் போன்று மங்காத மனம் பெற வேண்டும்.
1.நீங்களும் நினைக்கின்றீர்கள்… நானும் எண்ணுகின்றேன்
2.இருவருமே உயருகின்றோம்.
சாமி மீது போட்டிருக்கும் மலர் எதற்கு…?
நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த மணம் தான் இங்கே வரும். ஆகவே அந்த மலரைப் போன்ற நாங்கள் மணம்
பெற வேண்டும் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நாம்
எண்ணுதல் வேண்டும்.
மகரிஷிகள் எவ்வாறு தங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளை அகற்றி மகிழ்ச்சி பெறச்
செய்தார்களோ
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இந்த
உடலான ஆலயத்தில் சேர்க்க வேண்டும்
2.மகரிஷிகள் அல்லாது நறுமணத்தைக் காக்க முடியாது
3.அதை இணை சேர்க்கவில்லை என்றால் நம் வாழ்க்கையில் நன்மைகள் பெற முடியாது.
ஆலயத்தை உருவாக்கியது ரிஷிகள்…! ஆனால் அந்த ரிஷிகளைப் பற்றி யாராவது சொல்கின்றார்களா…?