
துன்பத்தை மனதார ஏற்றுக் கொண்டு “இன்பத்திற்குண்டான மெய் ஒளியைப் பெற…” வழி காட்டுகின்றோம்
சந்தர்ப்பத்தால்… வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக் கொண்டு
2.இன்பத்திற்குண்டான வழியை அந்த மெய் ஞானியின்
அருள் ஒளியை நாம் ஏற்றுக் கொண்டு
3.அந்தத் துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து
உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தியும்
கொடுக்கின்றோம்.
ஆத்ம சுத்தி என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்தி விண்ணிலிருந்து
நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா
ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின்
நினைவினைச் செலுத்த வேண்டும்.
ஆத்ம சுத்தியை இவ்வாறு
எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி… மனிதனாகப் பெற்ற புனிதத் தன்மையை நாம் பெறுகின்றோம்.
சந்தர்ப்பவசத்தால்
1.எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்
2.நம்மை மறந்து… துன்பத்தை மறந்து…
3.நாம் மெய் ஒளியின் தன்மை பெற வேண்டும்
என்று தியானத்தின் வழி விண்ணின்
ஆற்றலை நாம் பெற முடியும்.
ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் மெய்
ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக் கொள்வோம்.
ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு
உழைத்தாலும்
மெய் ஒளி பெறும் அந்தச்
சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும்
1.ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்து
2.அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.
அதை நம் உடலிலே
சேர்த்துக் கொண்டு
நமக்குத் துன்பம் வரும் போது “ஈஸ்வரா…”
என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அது என் ஜீவாத்மா பெற வேண்டும் என்று நாம் எண்ணிச்
சுவாசித்து
நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம்
1.எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி
2.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே
3.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி நாம் விண்ணின் ஆற்றலை
4.மிக ஆற்றல் மிக்க நிலைகளைத் “துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும்…”
கிடைக்கலாம்.
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண
மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும் பொழுது எதிர்பாராத சலிப்போ சஞ்சலமோ பயமோ
ஆத்திரமோ கோபமோ வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்தகணம்
நாம் ஆத்ம சுத்தி செய்து அந்தத் துன்பங்களை
அகற்றிட வேண்டும்.