
விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்
விஞ்ஞான
அறிவில் இன்று
எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறது. கற்றறிந்த உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்தறிந்து அந்தந்த உணர்வுக்குத்தக்க “எத்தனையோ நுண்ணிய நிலைகளில்
செயல்படுத்தித் தான் புதிதாகக் கண்டு பிடிக்கின்றார்கள்…”
இதைப் போன்று
தான்
1.ஒவ்வொரு
நிலைகளிலும் மனிதன் எப்படி இயங்குகின்றான்…?
2.ஆதியிலே காட்டு விலங்குகளுடன் மனிதன் எப்படி வாழ்ந்தான்…?
3.அவன் விண்ணின்
ஆற்றலை எப்படி எடுத்தான்…?
4.அன்று
அகஸ்தியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலைப்
பெற்றான்…?
5.அவனுடைய வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…?
இதை
எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையில் பரவும் நிலைகள்
கொண்டு நாம் அந்தப் பேராற்றல்களை நுகர்ந்தால் அந்த உணர்வினை உயிர் அணுவாக மாற்றுகின்றது.
கருத்தன்மை
அடைந்து அணுத் தன்மை அடைந்தால் அந்த அணுவாக உருப்பெற்ற பின் அது உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
1.எந்த
உயிரால் உணர்வுகள் நுகர்ந்து இந்த அணுவின் தன்மை பெற்றதோ
2.இந்த
உணர்வின் எல்லை கடந்து அங்கே விண்ணுக்கே செல்கின்றது.
உயிருடன்
ஒன்றிய பின் எந்தக் கண்களால் கவர்ந்து தன் உடலுக்குள் கவரும் சக்தி பெற்றதோ அதே கண்ணுக்கு
மீண்டும் ஆணை இடும் பொழுது கண்ணின் காந்தப் புலனறிவு இந்த பூமியில் படர்ந்திருக்கும் சக்திகளை பரவி இருப்பதை நமக்கு முன் குவித்து ஆன்மாவாக்குகிறது.
அதிலிருந்து சுவாசித்து உயிரிலிருக்கும் காந்தப் புலனில் பட்டபின்
உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவைக் கொடுத்து… அந்த உணர்வினை வளர்க்கவும்… அதை இயக்கவும் செய்கின்றது.
இயற்கை
இவ்வாறு தான் இயக்குகின்றது.
இதைத்தான்
குருநாதர்
1.உன்னை
நீ அறிந்து பார்…! நீ இயக்குகின்றாயா…? நுகர்ந்த உணர்வு உன்னை இயக்குகின்றதா…?
2.எதை
எண்ணி நீ நுகர்கின்றாயோ அதன் உணர்வு தான் உன்னை
இயக்குகின்றது.
3.ஆகவே நீ எதை நுகர வேண்டும்…?
சந்தர்ப்பத்திலே
பகைமையான உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் தாக்குகின்றது. உடலிலிருக்கும் நல்ல அணுக்களைச் சரியாக இயக்க விடுவதில்லை.
தீமையான
அணுக்கள் உருவாகி விட்டால் இதனுடைய பெருக்கம் அதிகமாகும் பொழுது நல்ல அணுக்கள்
சுருக்கம் அடைகின்றது.
நல்ல அணுக்கள் குறையப்படும் பொழுது தீய அணுக்கள் வலிமை பெறுகின்றது.
அது வலிமை
பெற்றால் அதனுடைய செயலாக்கங்கள் எதுவோ அதனுடைய அமிலங்கள் உடலில் படரப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட தசையின்
பாகங்களைக் கரைத்து விடுகின்றது.
அப்படிக் கரைந்து விட்டால் அதனால் உடல் உறுப்புகள் எப்படிக்
குறைகின்றது…? அந்த உணர்ச்சிகள் வரும் பொழுது
1.வேதனை
என்ற சோக ஒலிகளைக் அலைகளை கேட்டால்
2.அந்த
அதிர்வே நமக்குள்ளாகி… அதன் உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.
அந்த அணுக்களை அதிகமாக
வளர்த்து விட்டால் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்தி விடுகிறது. மனிதனைச்
சீர்குலையைச் செய்து உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.
அத்தகைய தீமைகளை மாற்றுவதற்குத்
தான் உன்னை நான் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தேன். இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…?
என்பதை நீ அறிந்து கொள்ள…!
அதிலிருந்து
மீள எண்ணியவர்கள் எத்தனையோ பேர். அதிலே தோல்வி அடைந்தவரும் பலர்.
1.ஆனாலும் அதிலே முழுமை பெற்று விண் சென்ற துருவ நட்சத்திரத்தின்
ஆற்றலைப் பெறுவதற்கே உனக்குள் இந்த உண்மைகளை உணர்த்துகின்றேன்
2.எல்லாரையும்
நீ அதைப் பெறச் செய்…! என்றார் குருநாதர்.