ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2017

“திறமைசாலிகளாக… சக்திவான்களாக… அனுபவம் மிக்கவர்களாக…” நீங்கள் மாற முடியும்

புத்தகத்தைப் படித்துவிட்டு ஒரு இயந்திரத்தில் அமிலத்தைக் கலந்து துணிக்குச் சாயத்தைக் கொடுக்கின்றோம்.

படித்தவர்கள் இந்த அளவுகோலில் திராவகத்தை ஊற்றினால் நூல் கெட்டுப் போய்விடும் என்று அந்த அளவுகோலை நினைத்திடுவார்கள்.

அளவுகோல் தெரியாதவர்கள் இந்த திராவகத்தை ஊற்றிவிட்டார்கள் என்றால் நூலோடு கலந்து சாயத்தைக் கெட்டிச் சாயமாகக் கொண்டு போய்விடும். சிறிது நாளைக்கு இந்தச் சாயம் இருக்கும். பின் துணி கிழிந்து போய்விடும்.

அந்த அமிலத்தின் அளவுகோல் குறைவாக இருந்தால், இதை இழுத்து வைக்கக்கூடிய நிலைகள் குறைந்துவிடும். தண்ணீருக்குள் போட்டவுடனே இந்தச் சாயம் போய்விடும்.

சாயம் ஒன்றுதான். ஆனால் அமிலத்தின் அளவுகோல் இதனுடன் இணைந்திருக்கும் போது
1.எது அதிகமோ,
2.எது குறைவோ,
3.அதற்குத் தகுந்த நிலைகளைச் செய்யும்.

அவர்கள் படித்த உணர்வு கொண்டு அவர்கள் அறிவுக்கெட்டிய நிலைகள் கொண்டு நிதானிக்கின்றார்கள். ஒருவர் போடுவதைப் பார்த்த உடனே இவர் துணியின் அளவுகோலைப் பார்க்கின்றார்.

நூல் எந்த அளவிற்குப் போடுகின்றார்களோ அதற்குத்தகுந்த நிலைகளைப் போடுகின்றார்கள். அது பழக்கத்திற்கு வரும் வரையிலும் சரியாக வராது.

படித்தவர்கள் அளவுகோல்படி கெட்டியாக இருக்கவேண்டுமென்று எண்ணிச் செய்தால் துணி இத்துப் போய்விடும் என்று தெரியாது.

அதே சமயத்தில், பெயர் வாங்கவேண்டும் என்று அளவுகோலை அதிகப்படுத்திவிட்டால் துணி போய்விடும். கெட்டிச் சாயம் என்று துணி வாங்குவோம் துணி போய்விடும்.

இந்த மாதிரி நமது குருநாதர் தெளிந்த நிலை பெற்றவர். அந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்யப்படும்போது
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை இங்கே சேர்த்து
2.அந்தந்தப் பக்குவ நிலைக்கு
3.குருவாக நின்று வழி நடத்தும்.

நம் குருநாதர் கண்டுணர்ந்த மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும்போது… ஒவ்வொரு நிமிடத்திலும்… “அது அளவுகோல் கொடுக்கும்”.

ஒரு கம்ப்யூட்டரில் சீராகப் பதிவு செய்யும்போது ஒவ்வொரு நிமிடத்திலும் அது அளவுகோல் கொடுக்கும்.

அதே போன்று ஒரு எல்லை வரும்போது ஒரே நிமிடத்தில் உணர்வின் அழுத்தத்திற்குத் தக்கவாறு பல நிலைகளை நாம் பதிவு செய்ததை கம்ப்யூட்டர் இயக்கித் தெளிவாக்குகின்றது.

இதைப் போலத்தான் மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அந்தத் தீமையின் நிலைகளை ஒவ்வொரு நொடிக்கும் இது மாற்றி நமக்குள் அந்த ஒவ்வொரு உணர்வுகளும் கிளர்ந்தெழும்.

ஏனென்றால் இந்த ஆன்மாவில் பல நிலைகள் உண்டு.

அந்த உணர்வின் தன்மை வரும்போது அந்த மகரிஷியின் அருள் சக்தியால்
1.இது ஒவ்வொன்றையும் பிளந்து
2.நமக்கு ஒவ்வொரு ஞானத்தையும் கொடுக்கும்.

தியானவழியில் இருப்பவர்கள் இதை அனுபவத்தில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கடும் சிக்கலாக இருக்கும்போது, ஆன்மாவில் வந்துவிடும். ஆத்மசுத்தி செய்து கொண்டிருக்கும்போது, அந்த உணர்வின் தன்மை வசப்படும்போது உடனுக்குடன் அதை மாற்றித் தெளிவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்கின்றேன் இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கிறது என்றால்…, “அதை நீக்குவதற்குத்தான்” இதை எடுக்கின்றோம்.

வீட்டைக் கூட்டுகின்றோம். கூட்டியபின் ரோட்டில் இருக்கின்ற தூசி இங்கே வந்துவிடும்.

அதில் நாற்றமான பொருளும் கலந்திருக்கும். இந்த வெயிலின் உணர்வுகள் தாக்கப்படும்போது அது தூசியாக மாறும். அது வசப்படும்போது மோதி உள்ளுக்குள் வந்துவிடும்.

எவ்வளவோ சுத்தப்படுத்தியிருக்கின்றேன். இந்த மாதிரி நாற்றமாக இருக்கின்றதே என்று கூறுவதுபோல காற்றிலிருந்து நாம் அந்த
1.மற்றவர்களுடைய நிலையை எண்ணும்போது
2.ஆன்மாவில் இந்த தூசி படத்தான் செய்கின்றது.
3.இதை உடனுக்குடன் நாம் நீக்க வேண்டும்.

தீமைகள் எதைக் கண்டுணர்ந்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா” என்று அவனிடமே வேண்ட வேண்டும். இதுதான் ஆக்ஞை என்பது. நமக்குள், உயிர்தான் எண்ணியதை உருவாக்குகின்றது. இதுதான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்பது.

தீங்கு செய்து கொண்டே இருக்கின்றான் என்று இந்த உணர்வைப் பதிவு செய்துவிட்டால் இந்தத் தீங்கின் நினைவே நமக்குள் உருவாகும்.

அப்பொழுது “ஈஸ்வரா” என்று உடனே இதை இடைமறிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் பதிவு செய்திருக்கின்றோம். நமது உயிரை ஈஸ்வரா என்று வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.தீங்கு செய்வோருடைய உணர்வுகள் பதிவானதை விட்டுவிட்டோம் என்றால் உள்ளுக்குள் போய்விடும்.
2.கண்ணோடு பார்த்தது ஆன்மாவாக மாறிவிடும்.
3.நாம் சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது.
4.உணர்வுகள் உடலுக்குள் படருகின்றது
5.இதை நிறுத்த வேண்டும்.

அதற்குப் பழக்கம் வேண்டும். இல்லையென்றால் அதை நிறுத்த முடியாது.