ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2017

இயக்கச் சக்தி என்பது என்ன? இயக்கத்திற்கு மூலம் எது? என்று தெரிந்து கொள்ளுங்கள் - ஆக்கபூர்வமாக அதை மாற்றினால் நாம் மெய் ஞானி ஆகலாம்

உங்களையறியாமல் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன ஆசைப் படுகிறீர்கள்?

நல்லதுதான் செய்கிறோம் என்று சொன்னாலும் கூடத் துன்பத்தை விளைய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே துன்பம் வந்து சேர்ந்தால் நல்லது உள்ளே போய்விடும்.

பாலைப் பாதுகாப்பாக நன்றாகக் காய்ச்சி வைத்திருப்போம். ஒரு துளி விஷம் கலந்துவிட்டால் தெரியாமல் சாப்பிட்டால் இறந்துவிடுவோம்.

இதைப் போல நமக்குத் தெரிந்து கெட்டதாக ஆவதல்ல. ஆனால் கெட்டது அனைத்துமே நம்மை இயக்குகின்றது.

1.சூரியனும் விஷத்திலேதான் சிக்கியிருக்கிறது.
2.ஒரு அணுவும் விஷத்தில்தான் இருக்கின்றது.
3.எம்மை இப்பொழுது பேசத் தூண்டுவதும் விஷம்தான்.

அந்த உணர்ச்சி இல்லையென்றால் உங்களிடம் வராது.

இந்த விஷமே உங்களிடம் தாக்கவில்லை என்றால் உணர்ச்சியைத் தூண்டவே செய்யாது. விஷம் இல்லாத மண் மாதிரி இருக்கும்.

தேவாங்கு விஷம் குறைவாக உள்ளது. ஒன்றும் செய்யாது, அமைதியாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் ஒன்றுமே செய்யாது. ஆற்றலே இருக்காது அமைதியாகவே இருக்கும்.

அது மாதிரி யார் உடலில் விஷம் கம்மியாக இருக்கின்றதோ இந்த மாதிரி மந்தமாக இருப்பார்கள். அவர்களிடம் எந்த மாற்றமும் இருக்காது.

சாதாரணமாக விஷம் கம்மியாக இருப்பவர் ஒருவரிடம் ஒரு வேலையைச் சொன்னால், “இது எதற்கு…! அது எதற்கு? என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

இன்னொருவர் இந்த விஷம் கொஞ்சம் கூட இருந்தால் துடி துடிப்பார். “பைத்தியக்காரத்தனமாக இவன் உட்கார்ந்து கொண்டே சாப்பிடுகிறானே என்பார்.

சோம்பேறித்தனமானவர் “இவன் என்னடா இப்படி ஆய்..ஆய்.. என்று பறந்து கொண்டிருக்கின்றான்?” என்பார். இவருடைய உணர்வுக்கு இதைச் சொல்வார்.

இவனைப் பற்றி அவர் சொல்வார். “சும்மாவே இருந்து கொண்டு சாப்பிடுகிறானே” என்று இவருடைய வேகம் பேசும். அவனைச் சோம்பேறிப்பயல்என்பார். இவனுடைய உணர்வின் வேகம் இவ்வாறு சொல்லும்.

அவன் உணர்வுஇவன் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறான்? என்று இருக்கும்.

இவை இரண்டும் எதிர்மறை. இந்த உணர்வுகள் இப்படித்தான் வேலை செய்யும். அந்தந்த உணர்வின் தன்மை செயல்படுவது போல விஷத்தின் தன்மை நாம் பேசுவதிலும் உண்டு.

உலகமே விஷத்திற்குள் கவர்ந்ததுதான். மிளகாய்க்குள் காரமிருக்கிறது. அளவாகக் குழம்பில் போட்டால் குழம்பு ருசியாக இருக்கும். அதிகமாகப் போட்டால் என்னவாகும்?

இதே மாதிரித்தான் விஷத்தின் அளவு எது எதிலே கூடியிருக்கின்றதோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்த உணரச்சியைத் தூண்டச் செய்வதும் அதற்குள் எந்த அளவுக்கு விஷம் இருக்கின்றதோ அந்த அளவுக்குத் தக்கவாறுதான் சொல்லின் ஆற்றலும் வரும்.

ரோஜாப் பூவிற்குள்ளும் விஷம் உண்டு. நல்ல நறுமணத்தை வேகமான நிலைகளில் கொண்டு செல்ல விஷம் தேவை. விஷம் இல்லை என்றால் ரோஜாப் பூவிற்கு வேலை இல்லை. மணம் இருக்காது.

ஆனால் அதிகமாக மணம் சேர்ந்துவிட்டாலோ அதிக வாசனையை நுகர்ந்து பாருங்கள். தலைவலி வந்துவிடும். இந்த விஷத்தின் தன்மை வேலை செய்யும். அதிகமான மணத்தைக் கூட்டிவிட்டால் மயக்கம் வந்துவிடும்.

சிலருக்குப் பலவீனமான எண்ணம் இருக்கும். மணம் பிடிக்காது. இவர்கள் உடலில் இருக்கக்கூடியது அந்த விஷத்தை ஏற்றுக் கொள்ளாத தன்மை.

மற்ற உடலிலிருந்து, விஷமான தன்மை வந்தால், ரோஜாப்பூ மணத்தை ஏற்றுக் கொள்ளாத நிலை வந்தால், வாழ்க்கையில் எப்பொழுது பார்த்தாலும் விரக்தியாக இருக்கும்.

“என்ன வாழ்க்கை என்ன இது? என்ன இது? என்று சோர்ந்து சோர்ந்து, அந்த உணர்வை எடுத்திருப்பார்கள்.

அவர்களிடம் நல்ல வாசனை ஏதாவது இருந்தால் அதற்குள் இருக்கும் விஷம் தூண்டும். அதில் பட்டவுடன் இவர்களுக்குத் தலைவலி வரும். மயக்கம் வரும் எங்கேயோ ஓடிப் போய்விடுவோமா… என்ற எண்ணம் வரும்.

இந்த நல்ல வாசனைக்குள் உள்ள விஷம் இந்த மணத்தை இங்கே சகிக்க விடாதபடி தனக்குள் தூண்டியவுடன், உடனே மயக்கம் வரும். சோர்வடையச் செய்யும். அங்கே உட்காரவிடாது. எல்லாம் வந்துவிடும்.

ஏனென்றால், இதைப் போன்று ஒன்றுக்கொன்று இந்த உணர்வின் ஆற்றல்கள் உண்டு. இதையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

1.அருள் ஞானிகளின் உணர்வை நாம் இணைத்து
2.அந்த விஷத் தன்மைகளை ஒளியாக மாற்றி
3.ஆக்கபூர்வமான ஆற்றல்களாக இயக்கி
4.மனிதனுக்கு அடுத்த நிலையான வேகா நிலை அடைய முடியும்.
5.மெய்ஞானத்தின் வீரியத்தின் தன்மை இது தான் 

இயக்கத்திற்கு மூலமான விஷத்தை ஆக்கபூர்வமான சக்திகளாக.., பேராற்றல்களாகத் தனக்குள் மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”