ஒரு நண்பனிடத்தில் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றால் அவர் நன்மை செய்தார் என்று எண்ணும் பொழுது அவருக்கு “விக்கல்…” பாய்கின்றது. அதே சமயம் துரோகம் செய்தார் என்று எண்ணினால் அங்கே “புரையோடுகின்றது”.
இதைப் போன்றுதான் அருள் உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து உடலுக்குள் பதிவாக்கி மீண்டும்
அந்த உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உணர்வினைப் பாய்ச்சும்போது,
2.இந்த உணர்வுகள் நம் நினைவாற்றல்களை
3.அந்த அணுக்களில் உள் செலுத்துகின்றது.
உதாரணமாக உடலில் வேதனைப்படுகின்றோம் என்றால் நம் கண்ணின் நினைவுகள் அந்த வேதனைப்படும் இடங்களுக்கே செல்கின்றது.
1.அந்த உணர்வினை நமக்குள் நுகரச் செய்கின்றது.
2.அதைக் குறி வைத்துப் பார்க்கும்படியும்
செய்கின்றது.
இதைப் போன்றுதான் நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களும் பெறவேண்டும்
என்ற நினைவினை
1.உள் முகமாகப் பாய்ச்சும்
பொழுது,
2.அந்த உணர்வுகள் அந்த அணுக்களில் நேரடியாக இணைக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கும் உணர்வுகள் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்கள்
பெற்ற உணர்வுகள் அது தீமையை நுகரும் உணர்வுகளை மாற்றி…, “அந்த மகரிஷிகளின் உணர்வை நுகரும் ஆற்றலாக…” மாற்றிக் கொண்டே இருக்கும்.
இப்பொழுது செடிகளுக்கு நாம் உரமிடும்போது அது நீருடன் கலந்து அது மரத்துடன் ஆவியாக
மாற்றி அதனுடன் இணைந்துவிட்டால்ன்எதன் உரத்தை நாம் இணைத்தோமோ அந்த உரத்தின் வலிமை கொண்டு தன் சத்தைக் காற்றில் இருப்பதைக் கவர்ந்து அந்த மரத்தைச்
செழிப்பாக வளர்க்கின்றது.
அதைப் போல நமக்குள் இருக்கும் அணுக்களில் எத்தனையோ விதமான பகைமை உணர்வுகள் சலிப்பு
உணர்வுகள் வேதனை உணர்வுகள் இப்படி அறியாமல் சேர்த்துக் கொண்ட பல உணர்வின் அணுக்கள் உண்டு.
அது எதன் வழிகளில் எந்தெந்த குணங்களில் உருவானதோ அந்த உணர்வின் தன்மை கொண்டு
அந்த அணுக்கள் இரைக்காக ஏங்கும்.
அவ்வாறு ஏங்கும் பொழுதுதான் நாம் அதை நுகர்ந்து நம்மை அறியாமல் மனக்கலக்கங்களும் வெறுப்பும் வேதனையும் என்ற நிலைகள் உருவாகி அதற்குத்தக்க
நம் உடலின் இயக்கமும் செயல்களும் உருவாகின்றது.
இதை மாற்றியமைப்பதற்கே நம் குரு காட்டிய அருள் வழியில் செடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று அதிகாலை நேரத்தில் இதைப் போன்று அருள் ஒளியை நம் உடலை உருவாக்கிய
அனைத்து அணுக்களுக்கும் பாய்ச்சுவதற்காக துருவ தியானம் இருக்கச் சொல்கின்றோம்.
இவ்வாறு தியானிப்பதனால் நம்முடைய நினைவின்
ஆற்றல் நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களிலும் ஊடுருவி அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியைப் பெற முடிகின்றது.
நாம் ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானம் செய்வதனால் காலையிலிருந்து இரவு வரையிலும்
பலருடன் பல உணர்வுடன் தொடர்பு கொள்ளும் நாம் அத்தகைய உணர்ச்சிகள் நமக்குள் வளர்ச்சியடையாது தடுக்க முடிகின்றது.
அவ்வாறு தியானித்தபின் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
நம் குழந்தைகளும் நம் குடும்பத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் அந்த துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் அனைவரது உடல்களிலும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும். பின்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைத்துக் குடும்பங்களிலும் படர வேண்டும்
என்று எண்ண வேண்டும்.
எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அவர்கள்
வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள், சாப வினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம
வினைகள் அனைத்தும் அகல வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் மன பலம்
பெற்று, தொழில் வளம் பெருகி செல்வம் பெருகி செல்வாக்கு சொல்வாக்கு பெற்று அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து மகிழ்ந்து
மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.
அனைத்து குடும்பங்களிலும், வாழ்ந்து வரும் குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக கல்வியில்
ஞானிகளாக உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக வளர வேண்டும் என்று இந்த
உணர்வை நாம் ஏங்கி என்ணுதல் வேண்டும்.
இதைப் போன்று நம் நினைவினைப் பாய்ச்சும் பொழுது இந்த உணர்வின் சக்தி வளர்ந்து,
1.நம் பார்வை குழந்தைகளை நலமாக்கவும்,
2.நம் பார்வை நண்பர்களை உயர்வாக்கவும்,
3.நண்பர்கள் பார்வை நம்மிடையே மதித்து நடக்கும் உணர்வுகளாகவும்
4.நம்மை அறியாது வரும் இருளை அகற்றும் சக்தியாகவும் அனைவரும் பெறுகின்றோம்.
நமது குரு காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகளின் அருள் சக்தியை நாம் பெற்று அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்ந்து நமது எல்லையான கடைசி எல்லை என்ற
பிறவா நிலை அடைதலே இந்த தியானத்தின் நோக்கம்.
அனைவரும் அருள் ஒளி பெறுக…!
அனைவரும் அருள் ஞானம் பெறுக…!
அனைவரும் இந்த வாழ்க்கையில் இருள் நீக்கும் சக்தி பெறுக…!
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா...!