ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2017

“நன்மைகள் செய்யக்கூடிய துணிவு உங்களுக்குக் கொடுக்கின்றோம்...!”

நன்மைகள் செய்ய வேண்டும் என்றால் “துணிவு” வேண்டும்.

அங்கே பாருங்கள்... நான் அவனுக்கு எவ்வளவோ உதவி செய்தேன்... “என்னை இப்படியெல்லாம் பேசுகின்றான்...!” என்று சொன்னால் நாம் செய்தது எல்லாம் போய்விட்டது. வேதனையைத் தான் விலைக்கு வாங்குகின்றோம் என்று அர்த்தம்.

நமக்குப் பிடிக்காதவர்கள் இருந்தார்கள் என்றால் இவனுக்கெல்லாம் எப்படி உதவி செய்வது என்று வரும்...!

ஆனால் துணிவுடன் நாம் நன்மை செய்தோம் என்றால் அவனுக்குள் என்ன ஆகிறது?
1.நாம் அவனை அன்று திட்டினோம்
2.இன்றைக்குப் பாருங்கள் நமக்கு உதவி செய்துவிட்டார்.
3.இத்தகைய பண்பினை மாற்ற உதவும்.

அதனால் தான் இந்தத் துணிவு.., நன்மைகள் பல செய்யத் துணிவோம் என்று சொல்வது.

நமக்கு வேண்டியவர்களுக்கு நாம் தாரளமாக எல்லாமே செய்வோம்.

ஆனால் ஏமாற்றுபவர்கள் என்ன செய்வார்கள்...? போற்றித் துதிப்பார்கள்.
1.நாம் கொடுத்துவிடுவோம்.
2.நம்மை ஏமாற்றி நமக்கு நன்மைகள் வருவதற்குப் பதில் தீமைகளையே செய்வார்கள்.
3.ஆகவே நாம் ஏமாற்றுபவர் கையில் சிக்கக்கூடாது.

ஒருவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகின்றார். அவர் நமக்கு எதிரியாக இருந்தாலும் அவருக்கு நன்மைகளைச் செய்தோம் என்றால் தேடி வருவார்.

அவர் தான் செய்த நமக்குச் செய்த தவறை உணர்கின்றார். நாம் செய்த நன்மை அந்த நல்ல பண்பு அங்கே வளர்கின்றது.

வியாசகர் பல உயிர்களைக் கொன்றாலும் எந்த மீனைக் கொன்று இவன் வாழ்ந்தானோ அதே மீன் புயலால் சிக்கிய இவனைக் காக்கப்படும் பொழுதுதான் தான் செய்த தவறை உணர்கின்றான்.

நாம் எந்த மீனைக் கொன்றோமோ அது தன்னை மீட்டியதே என்று எண்ணும் பொழுது தான் அவன் தன்னைக் காத்திட்ட உணர்வு கொண்டு அகண்ட அண்டத்தையும் அறிந்த அகஸ்தியர் உணர்வைக் கவர நேர்ந்தது.

நம் உடலின் இயக்கமும் உயிரின் மாற்றங்களும் என்ற நிலைகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வை வியாசகன் தெளிவுபடுத்துகின்றான்.

வியாசகர் கல்வி கற்றவர் அல்ல. அவருடைய சந்தர்ப்பம் அதை நுகரச் செய்கின்றது.

ஆகவே ஒருவர் பகைமை கொண்ட உணர்வு கொண்டு இருப்பினும் “அவனுக்கு நன்மை செய்தால்... அந்த நன்மையின் தன்மை... “நமக்குப் பதில்” வரும்.

விஷம் என்ற உணர்வுகள் இருந்தால் விஷத்திற்குள் பட்டுவிடும். இந்த நன்மை பயன் தராது.

இதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து நாம் செயல்படுதல் வேண்டும் என்று “விநாயகர் தத்துவத்தில்” தெளிவாகக் கூறப்படுகின்றது.

ஆகவே நாம் நன்மைகள் பல செய்யத் துணிவோம்.