ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2017

அதிர்ச்சி, எதிர்பாராத நிலைகளால் ஏற்படும் இருதயக் கோளாறுகளைத் தடுத்து இருதயத்தைச் சீராக இயக்கச் செய்யுங்கள் – “மன பலம் மன வலு” கொடுக்கின்றோம்

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்?

திடீரென்று ஒரு சுழிக் காற்று வருகின்றது. எதிர்பாராது ஒரு விஷத் தன்மையை நுகர்ந்து விடுகின்றோம் சிறு மூளை பாகம் சென்று விட்டால் என்ன ஆககின்றது?

1.நமக்குள் இரத்தத்தை வடிகட்டும் அந்த உணர்வின் உறுப்புகளை நிறுத்தி விடுகின்றது.
2.அல்லது அந்தச் சுவாசப் பையிலே இத்தகைய இயக்கச் சக்திகள் வந்தால் “ஹார்ட் அட்டாக்…” (HEART ATTACK).

ஹார்ட் அட்டாக்கிலே பல விதம் உண்டு.

உறுப்புகளை இயக்கும் அந்தச் சிறு மூளை பாகம் தாக்கிவிட்டால் இந்த உறுப்புகள் அப்படியே நின்றுவிடும்.

எப்படி ஒரு வாத நோய் வந்தால் கை கால்கள் மற்றும் அங்கங்கள் ஒரு பக்கம் செயலிழந்து விடுகின்றதோ இதைப் போல நுண்ணிய அலைகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் இயக்கங்களில்
1.சிறு மூளைப் பாகங்களில் அந்த உணர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதை இயக்காது தடைப்படுத்தி விட்டால் ஹார்ட் அட்டாக்.
3.டாக்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

இருதயத்தில் இருக்கும் மூன்று வால்வுகளில் அதில் அடைப்பு ஏற்படும் பொழுது வலி வந்து செல்லும். நெஞ்சு வலி என்பார்கள்

ஆனால் ஹார்ட் அட்டாக் என்பது உணர்வின் தன்மை எடுத்தவுடன் இயக்கவில்லை என்றால் விரிந்ததைச் சுருக்காது அதே மாதிரி சுருங்குவது விரியாது. அதற்கப்புறம் விரிய முடியாது போய்விட்டால் மூச்சு இழுக்கும் சக்தி வராது. மடிந்துவிடுவார்கள். இது வேறு.

ஹார்ட் அட்டாக் இத்தனை விதமான நிலைகளில் வருகின்றது.

வால்வின் தன்மை அடைக்கப்படும் பொழுது இரத்த நாளங்களில் சுருக்கி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் இரத்தங்கள் அது செல்லாது அடைபட்டால் இது விரிவடையும்.

அப்பொழுது வலியும் அதனால் வேதனையும் ஆகும். விரிவடையும் பொழுது போகும் பாகம் “வாய்வின் தன்மை அதிகரித்து” வெப்பத்தின் தன்மை கூடுகின்றது.

வாயுவின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அப்படியே மூச்சுத் திணறலாகி இறக்கும் தன்மை வந்துவிடும்.

இரத்தத்தில் கொஞ்ச நாள் ஆகிவிட்டதென்றால் துடிப்பின் தன்மை ஆனபின் இரத்தத்தின் தன்மை ஆவியாக மாறும். அந்த ஆவியின் தன்மை ஆனபின் மற்ற பாகம் இழுக்காது.

இதைப் போல இதனின் உணர்வுகள் இப்படிப் பலவிதமான நிலைகளில் உடலுக்குள் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற என்ன வைத்திருக்கின்றோம்…!

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை “அடிக்கடி…அடிக்கடி எடுத்து”
2.அதை நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துப் பழகுதல் வேண்டும்.
3.கூடுமான வரை நஞ்சான உணர்வுகள் நம் உடலுக்குள் விளையாது தடைப்படுத்திக் கொள்ளலாம்.

திடீரென்று வந்தது என்றால் நாம் எல்லோரும் தியானம் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டு போவது அல்ல.

இனி விஞ்ஞான விஷத்தின் தன்மையால் கதிரியக்கங்கள் பரவினால் அது நமக்குள் புகாத வண்ணம் பாதுகாத்துப் பழக வேண்டும். அந்தச் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்று தான் உபதேசிக்கின்றோம்.

உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி எல்லோருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் அருள் ஒளி படரவேண்டும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் நீங்கள் எண்ணி எடுத்தால் எளிதில் நீங்கள் பெற முடியும்.
2.ஏனென்றால் யாம் தியானிக்கும் பொழுது நீங்களும் உட்கார்ந்து எடுத்தீர்கள் என்றால்
3.உங்களுக்கும் அந்தத் தொடர்பு கிடைத்து
4.அந்த நினைவைக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவும்.

காலம் குறுகியதாக இருப்பதால் குருநாதர் காட்டிய அருள் வழியில் அமைதிப்படுத்தி எல்லோருக்கும் அந்த அருள் ஒளி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணுங்கள்.
1.என் சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்
2.என் இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும் என்று
3.உங்கள் எண்ணத்தை வலுப்படுத்தி எண்ணினால்
4.உங்கள் நினைவால் அதையெல்லாம் மாற்ற முடியும்.
5.இதை மாற்றும் பழக்கத்திற்கு வரும் போது
6.இனி வரும் எந்த விஷத்தன்மை வந்தாலும் அதை மாற்றியமைக்கும் வல்லமை பெறுகின்றீர்கள்.
7.மன பலமும் மன வலிமையும் கிடைக்கும்.

சாமி காப்பாற்றும் சாமியார் காப்பாற்றுவார் மந்திரம் காப்பாற்றும் யந்திரம் காப்பாற்றும் ஜோதிடம் காப்பாற்றும் என்றால் “ஒன்றும் காப்பாற்றாது”.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.