ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2017

பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள் – குருநாதர் பைத்தியம் போன்று இருந்துதான் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்

எமது குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார். எமக்குப் பல இம்சைகளையும் கொடுத்தார். இந்த இம்சை உனக்குள் எப்படி எல்லாம் வருகின்றது? உன்னை எப்படி அது இயக்குகிறது?

ஒவ்வொரு உணர்வின் தன்மை தன்னை அறியாமல் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாசத்தால் உடலுக்குள் விஷமான அணுக்கள் எப்படி வளர்கின்றது. அதே சமயத்தில் கேட்டோர் உள்ளங்களில் அது எப்படி இயக்கச் செய்கின்றது?

அந்த உணர்வின் காந்தப் புலன்கள் கவர்ந்து நம்மைச் சுழன்று நிம்மதியற்ற நிலைகள் கொண்டு மீண்டும் ஆரம்ப நிலைகள் கொண்டு எப்படித் திருப்புகின்றது?

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் வழிகளை அன்று அந்த மெய்ஞானிகள் காட்டினார்கள். அதைத்தான் குருநாதர் பைத்தியம் போல் இருந்து அனுபவபூர்வமாகக் காட்டினார்.

பைத்தியக்காரர் போல் தான் நானும் இருந்து கொண்டு வருகின்றேன். (அவர் சொன்ன வழிகளில் தான்) முதலில் நான் வெறும் ஒரு துண்டும் வேஷ்டியும் மட்டும் தான் போட்டிருந்தேன்.

நீங்கள் வேறு விதமாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்புறம் தான் வெள்ளைச் சட்டையைப் போட்டது.

ஒவ்வொரு நிமிடத்திலும் நமது நிலைகளில் பிறருடைய தீமைகளின் நிலைகளைக் கேட்காது விட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது நமக்கு எதற்கு இந்த வம்பு என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளை சரி என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்..,” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.., இது என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அதே சமயத்தில் அவன் திட்டும்போது நாம் காது கொடுத்துக் கேட்காது சென்றால் “பைத்தியம்” என்று நம்மைச் சொல்வார்கள்.

தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
1.ஒருவரைச் சரி இல்லை என்று கேட்டவுடனே
2.அவனை உதைத்தோம்… என்றால்
3.அப்பொழுது “மனிதன்” என்று சொல்வார்கள்.

இந்தத் தியான வழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான் என்று சொல்லிவிட்டு
1.சூடு சுரணை எதுவும் இல்லை,
2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.

ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை. தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.

ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.

ஆகவே எம்மைத் தேடி வருபவர்கள் உங்களால் எனக்கு ஏதாவது “நல்லதாக வழி இருக்கின்றதா…” என்று கேட்டால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு
1.”சக்கரம்… தகடு…” மாதிரி எதுவும் கொடுப்பீர்களா என்று தான் கேட்கின்றார்கள்.
2.மந்திரம் சொல்வீர்களா? ஜோதிடம் சொல்வீர்களா?
3.நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வீர்களா?
4.எனக்கு எப்பொழுது நல்ல நேரம் வருகின்றது என்று பார்த்துச் சொல்லுங்கள்.

இதைத்தான் கேட்டுப் பழகியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இனி வரும் காலங்களில் சிந்திக்க நேரம் இருக்குமா என்று சொல்ல முடியாது.

மெய் ஞானிகள் பெற்ற தீமையை வென்ற அருள் சக்திகளை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். யாம் சொல்லும் அருள் ஞான உபதேசங்களை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். சுவாசித்து உங்கள் உடலுக்குள் இணையுங்கள்.

அந்த உயர்வான எண்ணத்தை எடுத்து நீங்கள் விடும் மூச்சலைகள் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும்.

நீங்கள் பேசும் பேச்சு என்பது “செய்யும் தொழிலே தெய்வம்” போல் என் மூச்சுப் பட்டால் மற்றவர்களின் துன்பங்கள் போய்விட்டது என்ற நிலைக்கு வளர வேண்டும்.

இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.