ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2017

அகஸ்தியன் கண்டுணர்ந்த “2000 சூரியக் குடும்பத்தின் ஆற்றல்களையும்” அதனுடன் தொடர்பு கொண்டு பெறமுடியும்

எமது கண்ணின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து நமது பிரபஞ்சம் எப்படி 2000 சூரிய குடும்பத்துடன் தொடர்பு கொண்டு வாழ்கிறது?  என்றும் அதன் கலவையின் நிலைகள் இந்த உடலின் நிலைகளுக்கு உண்டு என்றும் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் நட்சத்திரங்கள் அதனுடைய தன்மையைக் கவர்ந்து நட்சத்திரங்களுக்கு எப்படி வீரிய உணர்வு வருகிறது என்று காட்டினார்.

நட்சத்திரங்கள் கவர்ந்து வெளிப்படுத்துவது தூசிகளாகப் பறக்கப்படும் பொழுது அதை சூரியனின் காந்த சக்திகள் கவருவதைக் காட்டினார்.

இவை இரண்டும் மோதும்பொழுது ஒளிக்கதிர்களாக ஓடுவதும், ஒளிக் கதிர்கள் மற்றொன்றோடு எப்படிச் சேருகின்றது என்றும் அதன் வழி மற்றதோடு சேர்ந்து, ஒன்றுடன் ஒன்று உராய்கின்றது என்று காட்டினார்.

ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது எப்படி வெப்பம் வருகின்றதோ இதைப் போன்றுதான் மின் கதிரின் உணர்வுகள் மற்றதுடன் கலந்து எவ்வாறு உருவாகின்றது? என்ற நிலைகளை குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

பின் அகண்ட அண்டத்தையும் அதன் நிலைகளை நம் பிரபஞ்சம் நுகர்வதையும்
1.பிரபஞ்சத்திற்குள் நுகர்ந்த உணர்வின் சக்தி
2.“நான் கண்ட உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்
3.உற்று நோக்கு” என்று கூறினார்.
4.இந்த  2000 சூரிய குடும்பத்தின் உணர்வுகளை உன்னால் அறிய முடியும்
5.உணர்வின் ஆற்றலை நீ பருக முடியும்
6.அதன் தொடர்பு கொண்டுதான் நீ வாழுகின்றாய்

எண்ணத்தின் வலுகொண்டு அதைப் பெறவேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது 2000  சூரிய குடும்பங்களிலிருந்து வரும் அனைத்திலும்
1.உன் நினைவின் ஆற்றல் ஊடுருவி
2.அதனுடன் கலந்து இணையும் சக்தி வருகின்றது.

அந்த இணைந்த உணர்வுகள் நீ பெறும் பொழுது உனக்குள் அறிவின் தெளிவும்இருளை அகற்றிடும் ஆற்றல் மிக்க உணர்வுகளும்நீ பெறுகின்றாய் என்று உணர்த்தினார்.

நம் சூரியன் மற்ற பிரபஞ்சத்தின் உணர்வுகளின் தன்மை கொண்டு, ஒளியாகச் சுழன்று இந்தப் பிரபஞ்சத்தை வளர்க்கின்றது.

இதைப் போன்று அகண்ட அண்டத்திலிருந்து வரும் மற்ற கோள்களின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து உணர்வின் ஒளிகள் வெளிப்பட்டு உன் உடலுக்குள் ஊடுருவும் உணர்வின் தன்மையை உன்னுடைய உயிர் இயக்குகின்றது..

மற்ற மண்டலத்திலிருந்து வருவதை சூரியன் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றதோ இதைப் போன்றுதான் உனது உடலிலும் உணர்வின் அறிவாக அறியும் சக்தியும் அதன் இயக்கத்தைத் தனக்குள் அடக்கிச் செயல்படுத்தும் நிலையும், வருகின்றது.

உனக்குள் பதிந்த நிலைகளை
1.உன்னைப் பின்பற்றுபவரிடம் பதிவாக்கும் பொழுது,
2.”எவர் இந்த உண்மையின் உணர்வைப் பின்பற்றுகின்றாரோ
3.அவரும் அகண்ட அண்டத்தையும் அறியும்  தன்மை வருகின்றது.

அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த பேரொளியைப் பெற முடியும். அந்த ஒளியின் தன்மை பெறும்பொழுது இருளென்ற நிலைகளை நீக்கி அந்த வலுவின் தன்மை  கொண்டு ஒளியின் சரீரமாக முடியும்.

அனைவரும் ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வு உனக்குள் வரும்பொழுது அவரில் வரும் தீமையின் உணர்வை அடக்கி
1.”உனக்குள் ஒளியாக்கும் உணர்வின் தன்மையை
2.வளரச் செய்யும் முறையே இது என்று குருநாதர் உபதேசித்தார்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் வரும் சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட்டு சர்வத்தையும் ஒளிமயமாக்கும் அருள் சக்தி நாம் அனைவரும் பெறுவோம்.

நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்தியில் இருந்து மீண்டு அருள் வாழ்க்கை வாழ்வோம். அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வாழ வேண்டும் என்று பிரார்த்திப்போம், தியானிப்போம்.