ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2017

இரத்தத்தின் வழி தான் நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் உணவு செல்கின்றது – அந்த இரத்தத்தை நாம் தூய்மையாக (நல்ல இரத்தமாக) வைத்திருக்க வேண்டியது “மிக மிக அவசியம்”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதனான நாம் நாம் எதை எண்ணினாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தமாக மாறி “ஜீவ அணுவாக” மாறுகின்றது.

நாம் எந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தோமோ அது ஜீவ அணுக்களாக மாறும் போது அந்த அணுக்கள் அனைத்தும் அதன் உணர்வுப்படியே அது இயக்கும்.

1.தீங்கு செய்ததும் அணுவாக வருகின்றது. அதை எண்ணும்போது நமக்குத் தீமை விளைவிக்கின்றது.
2.நல்லது செய்ததும் அணுவாக வருகின்றது. அது நமக்கு நல்லது செய்கின்றது.

ஒருவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனைப்படும் உணர்வை உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை அணுக்களாக நம் இரத்தத்தில் வளர்கின்றது.

உங்கள் கண்ணின் நினைவைக் கூர்மையாக இரத்த நாளங்களில் செலுத்தி ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் “புதுவிதமான உணர்ச்சிகள்” வரும். 

இந்த வலிமை பெறும்போது
1.உங்கள் உடலுக்குள் தீமையை இழுக்கக்கூடிய
2.உங்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் வெறுப்பு வேதனை சலிப்பு கோபம்
3.இது மாதிரி எத்தனையோ வகையான தீமையான உணர்வுகளை
4.உங்கள் உடலின் ஈர்ப்பை விட்டுத் தள்ளிவிடுகின்றது. 
5.உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது.
6.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் வலிமை பெறுகின்றது.


இப்படி இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்களுக்கு நாம் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செயல்படுத்தும் பொழுது அந்தத் தீமை என்ற நிலை உருவாகாதபடி தடுக்கின்றது.

“ஜீவ ஆன்மாக்கள்” என்றால் நாம் பிறர் மீது அன்பு கொண்டிருப்போம். அந்த அன்பு அதிகமாகிவிட்டால் இறந்தவரின் உயிர் நமது ஈர்ப்புக்குள் வந்து இரத்தத்தில் தான் தங்கும்.

ஆனால் அவர் உடலில் எந்த நோய்வாய்ப்பட்டார்களோ அந்த நிலையெல்லாம் நம் இரத்தத்தில் இருந்து உருவாக்கும். அந்த ஆன்மா இரத்தத்தில் இருந்தாலும் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

அதன் உணர்வு எதுவோ அதைத்தான் இயக்கும். இத்தகைய ஆன்மா இருந்தால் சில நேரங்களில் நம்மை அறியாமலே (பிடிவாதமாக) இயக்கும்.

அவ்வாறு இயக்கும் அந்த ஆன்மா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

அந்த ஆன்மாவிற்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கச் செய்தால் தீமையின் உணர்வைக் குறைக்கச் செய்து நமக்குள் நல்ல உணர்வின் தன்மை பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

நாள் முழுவதற்கும் நாம் உடலிலே உழைக்கின்றோம். ஒரு பத்து நிமிஷம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் வாழ்க்கையில் நம்மையறியாமல் நாம் தவறு செய்யாமலே நம்முள் புகுந்து அது பல எண்ணங்களைத் திசை திருப்பும் அல்லது நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்,

அல்லது பாசத்தாலே ஒருவருக்கு நன்மை செய்தாலும் அந்தப் பாசத்தின் உணர்வு கொண்டு ஒரு ஆத்மா நமக்குள் வந்து துன்பங்களை விளைய வைத்தாலும்
1.நாம் இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு அதை மாற்றியமைக்க முடியும்.
2.நாம் செய்த நன்மையின் தன்மையைக் காக்கவும் முடியும்.

அதே சமயம் அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தி விட்டால் பாசத்துடன் இருக்கக்கூடிய நிலைகள் நம் உடலிலே இருந்தாலும் அந்த இரு உணர்வின் தன்மை நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக மாறும்.

இவ்வாறு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை “நம் இரத்தத்தில் கலக்கச் செய்யும் பழக்கம் வந்துவிட்டால்”
1.நம் உடலில் பிணிகள் இருந்தாலும் அல்லது வந்தாலும்
2.அதை அகற்றிடும் ஆற்றல்கள் பெற்று
3.”என்றுமே...” நாம் உடல் நலத்துடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ முடியும்.

செய்து பாருங்கள். உங்கள் எண்ணம் இரத்தத்தில் கலந்து அற்புத வேலைகளைச் செய்யும்.