ஒரு சமயம்
குருநாதர் “கோடி...கோடி கோடி...கோடி கோடி...” என்றார்.
ஏன் சாமி கோடி
கோடி கோடி... கோடி ஏட உந்தி...? என்று (தெலுங்கிலே) கேட்பேன். கோடி என்றால்
தெலுங்கிலே கோழி என்று நான் சொல்வேன்.
“டேய்.., கோடி
கோடி... காரம் கோடி... புளிப்பு கோடி... கசப்பு கோடி... அந்த கோடி... இந்த
கோடி...” என்று அவர் சொல்லிக் கொண்டிருப்பார்.
1.வான்வீதியில்
பல கோடி உணர்வுகள் சேர்த்து
2.ஒரு உணர்வின்
தன்மை எப்படி இயக்குகிறது என்ற நிலையை அப்படிச் சொல்கிறார்.
இப்படி அங்கே
சேரும் உணர்வுகள் பல கோடி கோடி கோடி கோடியாக நமக்குள் உணார்வுகள் சேர்க்கப்பட்டு
1.ஒரு உணர்வின்
தன்மை அணுவின் இயக்க நிலையாக
2.இந்த
உணர்வுகள் “இயக்கும் தன்மை எவ்வாறு பிறக்கிறது?” என்று உணர்த்துகின்றார்.
கோடி கோடி கோடி
கோடி என்று சொல்லிவிட்டு “டம்..” என்று எம்மை அடிப்பார்.
அடித்தவுடன்
என்னுடைய நினைவெல்லாம் வான் வீதியில் செல்லும்.
ஒவ்வொரு
கோள்களும் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி எப்படிக் கலவையாகின்றது?
அணுக்களின் தன்மை மாற்றமாகி மற்ற கோள்களுக்குப் போகும் பொழுது இந்த உணர்வின்
நிலைகள் மாறுகிறது.
இவை எல்லாம்
கடந்து நம் பூமிக்குள் வந்த பின் கல் மண் மற்ற உலோகங்களையும் எப்படி
உருவாக்குகிறது” என்பதைத் தெளிவாக்குகின்றார்.
இப்படி... புழுவிலிருந்து
மனிதனாக வரும் வரையிலும் தீமைகளிலிருந்து நாம் விடுபடும் உணர்வை நுகர்ந்து நுகர்ந்து
நுகர்ந்து எத்தனையோ உடல்களைப் பெற்றோம்.
நம்மைக்
காட்டிலும் வலிமையான உடல்களைப் பார்க்கின்றோம். அதிலிருந்து தப்பிக்கும் உணர்வைக்
கூட்டுகின்றோம். தப்பமுடியவில்லை எனும் பொழுது அது நம்மைக் கொல்கிறது என்ற அறிவின்
தன்மை அந்த உயிர் உருவாக்குகின்றது.
அந்த உணர்வின்
தன்மை அடைந்த பின் கொன்று அதற்குள் இரையானாலும் அந்த உணர்வின் தன்மை இந்த (நம்)
உயிரிலே கலந்துதான் செல்லும்.
இப்படிப்
பலவற்றிலும் உயிர் “ஓ...” என்று இயங்கினாலும் “ஓமுக்குள் ஓ...ம்..., “ஓமுக்குள்
ஓ...ம்...”
1. நாம்
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுவிலும்
2.நம் உடலில்
உள்ள அணுக்களுக்கு அடுக்கடுக்காக அடுக்கடுக்காக
3.ஒன்றுக்குள்
ஒன்று ஒன்றுக்குள் ஒன்று ஒன்றுக்குள் ஒன்றாக... கலவையாகி
4.அதாவது ஒரு குழம்பு
வைக்கும் போது எப்படிச் சுவைகள் மாற்றமாகின்றதோ அதைப் போல
5.நமக்குள்
உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி உணர்வின் ஒலிகளை அமைத்து
6.அந்த உணர்வின்
தன்மை ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
அதைத்தான்
“ஓமுக்குள் ஓ...ம்...” “ஓமுக்குள் ஓ...ம்” என்று தெளிவான நிலைகளைக் குருநாதர்
காட்டுகின்றார்.
நம் உடலிலுள்ள
அணுக்கள் நாம் எத்தனை வகையான உடல்களில் சேர்த்தோமோ அவை எல்லாம் நம்
சந்தர்ப்பத்தால் எடுத்தால் “ஓமுக்குள் ஓ...ம்..., என்று அந்த உணர்வின் இயக்கமாகி
அதனதன் உணர்வைப் பிரித்து எடுத்துக் கொள்ளும்.
வேம்பும்
ரோஜாப்பூவும் விஷச் செடியும் மூன்றும் கலந்து கருவேப்பிலையாக மாறுகிறது என்றால் அந்த
உணர்வின் மணத்திற்கொப்ப இதிலே கசப்பும் இருக்கின்றது. துவர்ப்பும் இருக்கின்றது...
நறுமணமும் இருக்கின்றது... அரிப்பும் இருக்கின்றது.
அதனின்
உணர்வுகள் மாறுவது போல சுவைகள் மாறுவது போல் நம் உடலில் உள்ள அணுக்களும் இதே போல
ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு ஒவ்வொரு அணுக்களும் நாம் எத்தனை கோடிச் சரீரங்களைப்
பெற்றோமோ இதெல்லாம் உள்ளடங்கிவிடும்.
பிறகு
மேலெழுந்தவாரியாக மாற்றும் நிலைகள் கொண்டு இதைக் கணங்களுக்கு அதிபதியாகி அடக்கி
அதன் உணர்வின் தன்மை கொண்டு நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. இதே போல
1.நாம் எடுத்துக்
கொண்ட இந்தக் கணக்கின் தன்மை கூடியபின்
2.உடல்களை
மாற்றும்.
3.உணர்வுகளை
மாற்றும்
4.எண்ணங்களை
மாற்றும்
5.ஒலிகளை
மாற்றும் நிலைகளும் மாறுகின்றது.
இவை எல்லாம்
இந்த இயற்கையின் சில நியதிகள்.
நாம் எத்தனையோ
கோடிச் சரீரங்களைக் கடந்து “ஓமுக்குள் ஓ...ம்..., “ஓமுக்குள் ஓ...ம்...,
“ஓமுக்குள் ஓ...ம்..., என்று இங்கே படுகின்றது.
நாம் எப்படி
மனிதனாகப் படிப்படியாக வந்தோம் என்பதை சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.
அடுத்த நிலையாக
அருள் உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் “ஓமுக்குள் ஓ...ம்..., “ஓமுக்குள்
ஓ...ம்..., “ஓமுக்குள் ஓ...ம்..., என்ற நிலையில் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு
ஒளியின் உடலாக அமைத்துவிடும்.