ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2017

துருவத்தின் வழியாக வரும் ஆற்றலை எண்ணி அதிகாலையில் தியானித்தால் உங்கள் உடலிலிருந்து “பளீர்..பளீர்…” என்று வெளிச்சம் வருவதைக் காணலாம்

1.நான் தியானம் பண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என் வீட்டுக்காரர் இப்படித் திட்டுகின்றார்.
2.நானும் தியானம் பண்ணிக்கொண்டே இருக்கின்றேன் கொடுத்த கடன்காரன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான் என்று விட்டுவிட்டால் என்னாகும்? இது சவாரி பண்ணிவிடும்.
3.தியானம் பண்ணிக்கொண்டேயிருக்கின்றேன் நோய் வந்துவிட்டது என்று நினைத்தால் இதை விட்டுவிட்டு அதை எடுத்துக் கொள்கிறீர்கள்.

கெட்டதுக்குத்தான் நீங்கள் சக்தி வளர்க்கின்றீர்கள். எதற்கு ஜீவன் ஊட்டுக்கின்றீர்கள்? நம் எண்ணங்கள் எதில் வருகின்றது?

நம்முள் உள்ள அணுக்கள் பசியைத் தூண்டும் பொழுது நல்லதை எடுக்க விடாமல் தடுக்கின்றது. அந்த மாதிரி தடுக்கின்ற நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆன்மாவைச் சுத்தப்படுத்திப் பழகவேண்டும்.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்.

எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை நல்ல உரமாகக் கொடுத்து அந்த ஞானத்தை நாம் பெருக்க வேண்டும்.

தீமையான உணர்வு நமக்குள் போகாமல் தடுக்க முடியும். இப்படிச் சுத்தப்படுத்த வேண்டும்.

ரோட்டிலே ஒருவன் யாரையோ கோபமாகப் பேசுகின்றான். “நடு ரோட்டில் இந்த மாதிரிப் பேசுகின்றானேஎன்ற உணர்வு வந்தவுடனே உயிரில் பட்டவுடனே நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவை உயிருக்குப் புருவ மத்தியில் கொண்டு போகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடலில் படரவேண்டும் எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே இதைத் தள்ளிவிட்டு விடுகிறது. இங்கே அடைத்து வலுக்கூட்டி ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

துணியில் அழுக்குப் பட்டால் சோப்பு போட்டவுடன் நுரை உள்ளுக்குள் போய் அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது.

சோப்புப் போடாமல் என்னதான் துவைத்தாலும் இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.

ஆகவே காலையில் எழுந்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

பின் தன் கணவருக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணி அவர் உடல் முழுவதும் படரவேண்டும் அவர் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதேபோல ஆண்களும் தன் மனைவி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர்/மனைவி ஜீவான்மா பெற வேண்டும். நாங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும். வாழ்க்கையில் இருளை அகற்றும், அந்த அருள்சக்தி பெற வேண்டும் என்று இரண்டு பேரும் அதிக நேரம் இல்லையென்றாலும், கொஞ்ச நேரமாவது எண்ண வேண்டும்.

ராத்திரியிலே விழிப்பு வரும்பொழுதும் இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.

தியானத்திலே இருக்கிறவர்களுக்கு, காலை 4 மணியில் இருந்து 6 மணி வரை இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம். உங்களைறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே அந்த அருள் சக்திகளை நுகருங்கள்.

இந்த மாதிரி எண்ணுபொழுது பார்த்தால் உங்கள் உடலில்பளீர்.., பளீர்…,” என்று வெளிச்சம் வரும். ஏனெனில் அது நுகரப்படும் பொழுது இது பட்டவுடன் மோதி அந்த இருள் நீக்கி வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.

சூரியன் தன் உடலில் எடுத்துக் கொண்ட பாதரசத்தால் தன் அருகில் வந்தவுடன் மோதி பளீர்…” என்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தை கொடுக்கிறது.

அதே மாதிரி நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது
1.நம் மூச்சலைகள் பட்டவுடன்
2.நம் உடலில் எடுத்து கொண்ட சக்தி தீமை என்ற நிலையில் மோதியவுடனே அது விலகிப் போகும்.
3.உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும். மகிழ்ச்சி ஏற்படும்.

இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும். அப்படிச் செய்தால் யாம் பதிவு செய்கின்ற ஞான வித்திற்கு அப்பொழுதுநீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்…” என்று அர்த்தம்.