ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2017

வசிஷ்டர் பிரம்ம குரு – "நாம் கவர்ந்து கொள்ள வேண்டிய சக்தி" அது நம்மைக் காக்கும் சக்தியாக இருக்க வேண்டும் தீமையை நீக்கும் உணர்வுகளை நமக்குள் பிரம்மம் ஆக்க வேண்டும்

இன்றைய விஞ்ஞான அறிவால் உலகில் நச்சுத்தன்மைகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இனி “நாம் யார்...?” என்று ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத நிலை வரும் வாய்ப்புகள் இருக்கின்றது. (ஏற்கனவே 2004 டிசம்பரில் இப்படித்தான் நடந்தது)

அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்காவது நாம் தியானம் எடுத்தாக வேண்டும்.  இல்லை என்றால் நம்மை நாம் அறிய முடியாது. என் குழந்தை யார்...! என் பிள்ளை யார்...! என்பதை அறியவே முடியாது.

அத்தகைய சூழ்நிலை ஏற்கனவே வந்தாகிவிட்டது.

அணுக்கதிரியக்க நிலையும் கடும் விஷக் கதிரியக்கங்களும் கெமிக்கல் கலந்த குண்டுகளையும் நீரிலும் காற்றிலும் உணவுப் பொருள்களிலும் பல வகையிலும் தூவுகின்றனர்.

இதை போன்ற நிலை வரும் பொழுது மனிதனுடைய சிந்தனை இழக்கும் பொழுது நீங்கள் யாரைத் தேடி எவரிடம் முறையிடப் போகின்றீர்கள்? எந்தக் கடவுள் உங்களைக் காப்பாற்றப் போகிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உயிரே கடவுள். உங்கள் எண்ணமே இறைவனாகின்றது. இறையின் உணர்வு செயலாக்கப்படும் பொழுது
1.காக்கும் உணர்வு பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் இறையாக்குங்கள்
3.அந்த உணர்வைச் செயலாக்குங்கள்
4.வாழ்க்கையில் உங்கள் சிந்தனையைச் சீர்படுத்துங்கள்.
5.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள்.

சும்மா சாமியைப் பார்த்தேன்... சாமியாரைப் பார்த்தேன்... கடவுளைக் கும்பிட்டேன்... அதைச் செய்தேன் இதைச் செய்தேன்..., என்று சொல்லலாம்... எந்தக் கடவுள்...!

நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுதுதான் கடவுளாகின்றது. உணர்வின் தன்மை இறையாகிவிட்டால் உணர்வைச் செயலாக்கும் பொழுது அந்தக் குணமே நமக்குள் தெய்வமாகச் செயல்படுத்துகின்றது.

நம் சாஸ்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.

உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்குமே தவிர...,
1.எண்ணத்தை வைத்துக் காக்கும் உணர்வை எண்ணினால்
2.”உயிர் காக்கின்றது”.
3.அது தான் வசிஷ்டர் பிரம்ம குரு.

வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்ம குரு. தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது நம் உடலிலே “தீமையை நீக்கிடும் உணர்வுகள் பிரம்மமாகின்றது”.

அந்தச் சக்திக்குப் பெயர் அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காக இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள் ஞானிகள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நமக்குள் பிரம்ம குருவாகி “அருந்ததி” தீமையை நீக்கிய அந்தச் சக்தி (அது) நமக்குள் உள் நின்று இயக்கும்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி நம் உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையும் அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்ற நிலைகளைத் தெளிவாக்கப்படுகின்றது.

இதை உங்கள் மனதில் வைத்து இந்த உடலுக்கு முக்கிய தத்துவம் கொடுக்காதபடி உங்கள் உயிருடன் ஒன்றியே வாழுங்கள்.

அதைப் போல ஒளியின் அறிவாக நமக்குள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவை ஊட்டுங்கள். இருளை நீக்கும் அருளைப் பெருக்குங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அனைத்தும் ஒளியாகும்.
2.உணர்வுகள் ஒளியின் தன்மை பெற்றுவிட்டால் எத்தகைய விஷத் தன்மை வந்தாலும் அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்த்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பேரொளியாக வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.