ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2017

சைவ சித்தாந்தப்படி “சித்தி” - விளக்கம்

இன்றைக்குக் கனியை எடுத்துக் கொண்டால் சிவம் அதற்குள் இருக்கக்கூடிய சுவை சக்தி.

ஒரு மிளகாயை எடுத்துக் கொண்டால் சிவம். அதற்குள் இருக்கும் காரம் சக்தி. மிளகாயைத் தனித்து வாயில் இட்டால் வெறுப்பின் தன்மைகளை ஊட்டுகின்றது.

சிவ சக்தி என்ற நிலைகளில் இயக்குகின்றது. அதாவது சக்திதான் சிவமாகி சிவத்திற்குள் சக்தியாக அது எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையைச்
1.”சைவ சித்தாந்தத்தில்” பேருண்மைகளை உணர்த்துகின்றார்கள்.
2.எதைத் தனக்குள் நுகர்ந்து கொண்டதோ
3.அந்தச் “சித்த சக்தியின் தன்மையை” அங்கே உருவாக்குகின்றது.

சித்து வேறு. சித்தி வேறு.

மனிதனுக்குள் சித்து என்ற நிலைகளில் செய்து பல அற்புதங்கள் செய்வது சித்து. பல மனிதனின் உணர்வுகளை நாம் மீண்டும் மீண்டும் எண்ணி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் சித்து.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் சக்தியை மீண்டும் நாம் இயக்கப்படும் பொழுது “சித்துக்கள்” பல அற்புதங்களைக் காட்டலாம்.

ஆனால் சித்தி என்பது மகரிஷிகளின் உணர்வுகளையும் தாவர உணர்வின் ஒலிகளையும் நமக்குள் சித்தித்து உணர்வின் தன்மை அவர்கள் எப்படி ஒளியாகச் சென்றார்களோ அதன் வழி செய்வதே சித்தி.

சித்து புத்தி என்று சிலர் சித்தாந்தங்களைச் சொல்வார்கள். இதையெல்லாம் பேருண்மையின் நிலைகள் காலத்தால் மறைந்துவிட்டது.

இதனின் உண்மையை உணர்த்துவதற்குத்தான் இங்கே விநாயகரை வைத்து இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்துப் பார்? என்று காட்டியுள்ளார்கள்.

நாம் பல கோடிச் சரீரங்களில் எடுத்து இன்று மனிதனை உருவாக்கியது இந்த உயிர். உயிருடன் உணர்ந்து உயிருடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் நாம். உயிரின் தன்மையை அறியும் பக்குவம் பெற்றது மனிதன்.

1.மனித நிலைகளிலிருந்து இப்பொழுது எதை வினையாக்க வேண்டும்?
2.எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்?
3.இதைக் கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டி நம்மைச் சிந்திக்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமை தீமை என்று எண்ணினால் அந்தத் தீமையின் விளைவே வரும்.

மனிதனின் வாழ்க்கையில் தீமையை வென்ற அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்தால் அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கினால் அது வினைக்கு நாயகனாகப் “பிறவியில்லா பெரு நிலை” அடைய முடிகின்றது.

ஆகவே விநாயகரை வணங்கப்படும் பொழுது அதனின் மூலக் கருத்தை மறந்திடலாகாது.