ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2017

“கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே” – இராமலிங்க அடிகள்

கந்த சஷ்டி எல்லா முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது.

அதை நாம் வேடிக்கை பார்க்கச் செல்கின்றோம். எப்படி?

முருகனைப் பற்றிய காவியங்களை மனதில் வைத்துக் கொள்கின்றோம். கந்தன் அசுரனைக் கொல்லப் புறப்படுகின்றான் என்ற நிலை தான் நமக்குத் தெரிகின்றது.

ஆனால் அந்தக் கந்த புராணத்தின் உண்மையின் நிலைகளை நாம் அறிவதில்லை.

அதை இராமலிங்க அடிகள்…, “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே…” என்று பாடல்களைப் பாடியுள்ளார்.

1.பல கோடிச் சரீரங்களில் பல அணுக்களால் உருவாக்கப்பட்டு
2.அவை அனைத்தும் எனக்குள் கூர்மையாக இருந்து
3.எனக்கு முன் தெளிவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரை - அதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள இந்த உயிரைக் “கந்தவேளே…” என்று அவர் பாடுகின்றார்.

தீமைகள் எனக்குள் நாடாது நன்மைகள் செய்யும் பல உணர்வுகள் என்னிலே தோன்ற வேண்டும் என்று தன் உயிரை வேண்டுகின்றார்.

தீமையான உணர்வுகளைத் தனக்குள் நுகராது “நல்ல உணர்வுகளை நாம் எவ்வாறு நுகர வேண்டும்…” என்று இராமலிங்க அடிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்.

நம் வாழ்க்கையில் யார் எதிரிகளாக இருந்தாலும்
1.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும்
2.அவர்கள் குடும்பங்கள் வளம் பெறவேண்டும்
3.அருள் ஞானியின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும்
4.அவர்கள் நல்ல ஒழுக்கங்கள் பெறவேண்டும்
5.நல் நிலைகள் அடைய வேண்டும்
6.எங்கள் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
7.எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும் என்று இந்த உணர்வினை எண்ணி
8.பகைமை உணர்வுகள் எதுவும் நமக்குள் வராதபடி வளராதபடி கந்த சஷ்டி
9."சம்ஹாரம்" செய்ய வேண்டும்

ஆக அன்றைய நாள் இவ்வாறு எண்ணுவது தான் உண்மையான விரதம்.

தீமைகளை எண்ணாது நாம் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ அந்த அனைத்துக் குடும்பங்களும் எல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை ஒவ்வொருவரும் எண்ணும்படி செய்வதற்கே கந்தர் சஷ்டி என்று இத்தகைய விழாக்களை அன்று ஏற்படுத்தினார்கள் ஞானிகள்