ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2017

மோட்ச நீர் வேண்டும் என்றும் அது “அர்ச்சுனனுக்குத்தான் தெரியும்” என்கிறார் பீஷ்மர் – விளக்கம்

தன் தாத்தாவைத் தாக்கும் நிலைகளில் நான் இல்லை என்று அர்ச்சுனன் கூறுகின்றார். அவருடைய வித்தைகள் இருக்கப்படும் பொழுது எப்படி நான் தாக்குவேன்? என்று கூறுகின்றார்.

குரு பீஷ்மர் மானசீகமாகநான் செய்த பிழைகளுக்கு இப்படி இருக்கும் பொழுது
1.உன்னுடைய வலுதான்
2.நீ செய்த தர்மத்தின் தன்மைகள் என்னை ஊடுருவி…”
3.”எனக்குள் இருக்கும் தீமைகள் நீங்க வேண்டும்” என்று அர்ச்சுனனிடம் கூறுகின்றார்.

குரு பீஷ்மர் பேடியிடத்தில் தன்னுடைய வீரத்தைக் காட்டுவது இல்லை. ஆகையால் பேடியை எதிர்க்கும் சக்தி அவருக்கில்லை. பேடியான உணர்வு கொள்ளும் பொழுது குரு அவர்களை எதிர்க்க மாட்டார்.

இதைத்தான் மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.வலு பெற்ற குரு (தனது வலிமையை)
2.பேடியினுடைய நிலைகளைப் பற்றித் தன் எண்ணத்தில்
3.”எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் காட்டுகின்றனர்.

குரு அவர் செய்த பிழையின் தன்மை கொண்டு பேடியால்தான் குருவைத் தாக்க முடிகின்றது.
1.குரு கௌரவர்கள் பக்கம் தீமையின் உணர்வுடன் சென்றதனால்
2.”பேடியால் தாக்கும் நிலை வருகின்றது.

அர்ச்சுனன் தன் வலிமை கொண்டு தன்னை அறியாது சேர்ந்த தீமைகளில் இருந்து விடுபட்டு அவருடைய உணர்வுகள் மெய் வழி செல்ல வேண்டும் என்றுதான் மகாபாரதத்தில் காட்டப்பட்டது.

குரு தாக்கப்பட்ட உணர்வு கொண்டு தாகம் எடுக்கின்றது..” என்று சொல்லுகின்றார்.

எல்லோரும் ஓடிப் போய் நீரைக் கொண்டு வருகின்றனர்.

“இந்த நீரை” நான் விரும்பவில்லை என்கிறார்.

1.“மோட்சம் என்ற நிலைகள் இருக்கின்றது.
2.அதனை வானத்தில் ஏகி
3.மோட்ச நீர் என்ற நிலைகளில் அதைக் கொண்டு வந்தால்
4.எனக்குள் இருக்கும் பாவங்கள் போகும்…” என்கின்றார்.

அர்ச்சுனனுக்குத் தெரியும்… எனக்கு எது கொடுக்க வேண்டும் என்று…” என்பதைச் சூட்சுமமாகக் காட்டப்படுகின்றது.

குரு எதை விரும்புகின்றாரோ அதன் தன்மை கொண்டு குருவின் ஆணைப்படி தீமையின் பக்கம் தீயவர்களால் சார்புடைய உணர்வு வரும்போது தனது குருவிற்கும் இது எப்படி வந்தது…!” என்று காட்டப்பட்டது.

மடியும் தருணம் வடக்கு நிலை கொண்ட உத்ராயாணம் வரும் பொழுதுதான் தனது ஆன்மா பிரிய வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

உத்ராயாணம் என்றால் (வடக்கு) துருவத்தால் கவரும் நிலை கொண்டு தன் ஆன்மா பிரிய வேண்டுமென்று சொன்னது.

அதன் நிலை கொண்டுதான் அர்ச்சுனன் தன் குருவை தீமையிலிருந்து விடுபடச் செய்தான் என்று தெளிவாக்கப்பட்டது.

காவியத் தொகுப்புகளைத் தவறான வழிகளைக் காட்டித் தவறின் வழிகளில்தான் அழைத்துச் செல்கின்றனர்.

மகாபாரதப் போரில் உலகில் உள்ள உணர்வின் தன்மைகளை நுகரும் அறிவு கொண்ட நாம்
1.ஒவ்வொன்றும், நம் உடலுக்குள் புகுந்து
2.உணர்வின் செயலாக்கம் அதனதன் வலிமை கொண்டு
3.”நம்மைத் திசை திருப்பும் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது?” என்று
4.வியாசர் மகாபாரதத்தில் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

(கண்ணன் – கண்கள்; பீஷ்மர் – உயிர்; அர்ச்சுனன் – நல்லது காக்கப்படவேண்டும் என்ற “கூர்மையான எண்ணம்”)