மடாதிபதிகளின்
நிலை எல்லாம் “குரு… சிஷ்யன்…” என்ற நிலைகளில் உடலை விட்டுச் சென்ற பின் சிஷ்யன்
உடலுக்குள் சென்றாலும் அடுத்த நிலை என்ன என்றே தெரியாதபடி இன்றும் தவித்துக்
கொண்டுள்ளார்கள்.
நமது
குருநாதர் இதைத் தெளிவாக்கியுள்ளார்.
எப்பொழுதுமே
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் நீங்கள் எல்லோரும் அதைப் பெறவேண்டும்
என்று தான் குருநாதர் எம்மைத் தியானிக்கும்படி சொன்னார். அதைத்தான் செய்து கொண்டு
வருகின்றேன்.
அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்து இதை வலுப்பெறச் செய்து
உங்களுக்குப் பெறச் செய்து நீங்கள் உயர வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
இதைப்
போலத்தான் நீங்களும் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். இதை விடுத்துவிட்டு குரு
சிஷ்யன் என்ற நிலைகளில் சொல்லிவிட்டால் நீங்கள் இந்த மனிதப் பிறவிக்குத்தான் வர
முடியும்.
அதைத்
தவிர்ப்பதற்குத்தான்
1.யாம்
சந்திக்கும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
2.அறியாது
சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்
3.மெய்ப்பொருள்
காணும் சக்தி பெறவேண்டும் என்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.
4.உங்கள்
அனைவருடைய எண்ணங்களும்
5.மகரிஷிகளின்
அருள் வட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் தியானிப்பதால்
6.உங்கள்
ஈர்ப்புக்குள் (உடலுக்குள்) நான் வர முடியாது.
காரணம்
உங்கள் உணர்வுகளை அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளுடன் இணைக்கத்தான் செய்ய
முடியும்.
“நான்
சொல்கிறேன்…” என்று நீங்கள் என்னை எண்ண வேண்டியதில்லை.
அந்த
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறவேண்டும் என்று
தான் எண்ண வேண்டும். அதை அப்படிப் பற்றினால் தான் அங்கே செல்ல முடியும்.
யாம்
உபதேசிக்கும் இந்த உணர்வுகளை… “நீங்கள் பயன்படுத்தி” அங்கே செல்ல வேண்டும்.
நீங்கள்
எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் அருள் மகரிஷிகளுடன் ஒன்ற வேண்டும் இந்த
வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் சக்திகள் நீங்கள் பெறவேண்டும் என்று
தான் நான் தவமிருக்கின்றேன்.
1.நான்
எண்ணுவது போல் நீங்கள் எண்ணினால்
2.நீங்களும்
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் போகலாம்.
ஒரு
தொழிலுக்குச் செல்கின்றீர்கள் என்றால் அங்கே சென்றவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
பெறவேண்டும் என் பார்வை நலமாக இருக்க வேண்டும் என்று உங்களை எண்ணும்படிச்
சொல்கின்றேன்.
அப்பொழுது
உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று எண்ணினால்
1.சதா
உங்களை நான் தியானிக்கும் பொழுது
2.நீங்கள்
அங்கிருந்து…, “எடுத்தால் தானே…” - அது நடக்கும்.
3.சாமி
தான் காப்பாற்றுவார் என்று என்னை எண்ணிக் கொண்டிருந்தால்
4.உங்களை
நீங்கள் மறந்துவிடுகின்றீர்கள் அல்லவா.
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும்
அது படரவேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.
நாம்
பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள்
வரவேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் அது கிடைக்கும்.
அதற்கு
உபாயமும் அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று யாம்
தியானிக்கின்றோம்.
டி.வி
ரேடியோ இவைகளில் ஒலி பரப்பச் செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேசனிலிருந்து எதை ஒலி
பரப்புச் செய்கின்றார்களோ அதை எடுக்கவேண்டும் என்றால் அந்த ஸ்டேசனை வைத்தால் தான்
அதைப் பெற முடியும்.
இதைப்
போன்றுதான்
1.உலகில்
உங்கள் ஆசையின் நிலைகளை இங்கே வைத்து
2.அந்த
“ஆசை” என்கிற ஸ்டேசனை வைத்துக் கொண்டிருந்தால்
3.“சாமி
செய்வார்...” என்றால் சாமி எப்படிச் செய்வார்…!
யாம்
சொன்ன உணர்வின் வழிப்படி நீங்கள் செய்தால் இதே உணர்வின் அலை வரிசை இங்கே
இருக்கின்றது. அதை எடுத்தால் உங்களுக்குள் அந்த உணர்வுகள் வேலை செய்யும்.
இல்லை
என்றால் நாம் இந்த மண்ணுலகின் பற்றைத்தான் வளர்க்க முடியுமே தவிர விண்ணுலகப் பற்றை
எடுக்க முடியாது. எதிலுமே அந்த விண்ணுலகப் பற்றுதல் வந்து கொண்டேயிருக்க வேண்டும்.
ஏனென்றால்
எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள்
பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படரவேண்டும்.
நாங்கள்
செல்லும் இடங்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். நாங்கள்
பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.
1.இந்த
உணர்வுகள் இது உங்களுக்குள் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
2.உங்கள்
வாழ்க்கைக்கு நல்ல வழியையும் அது காட்டும்.
3.நீங்கள்
இந்த நிலையிலிருக்கும்போது உங்களுக்கு நல்ல வரவேற்பும் (செல்லும் இடங்களில்)
இருக்கும்.
4.அங்கே
அவர்கள் அறியாமல் தீமைகள் இருந்தாலும் அது மாறி
5.அந்த
அருள் ஞானத்தின் நிலைகளில் உங்களுக்குள் வளரவும் செய்யும்.
சாமி
(உபதேசித்த) சொன்ன உணர்வை நாம் பெற்றால் அந்த ஆற்றல்களை நாம் பெறமுடியும் என்ற
இந்த நம்பிக்கை “என்று உங்களுக்குள் வளர்கின்றதோ… அன்று தான் நீங்கள் இந்த
மண்ணுலகில் வரும் தீமைகளை அகற்றுகின்றீர்கள்”. அந்த மெய் உணர்வின் தன்மையைப்
பெறுகின்றீர்கள்.
அதையெல்லாம்
நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். தவமிருக்கின்றேன். அந்த
உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டுள்ளது. அதை நீங்கள் எளிதில் பெறலாம்.