1.வாழ்க்கையின் நிலைகளில் அனைத்தையும் பெற்றாலும்
2.துன்பத்தை நுகர்ந்து நோயின் தன்மையோ மற்ற நிலைகளோ வந்துவிட்டால்
3.மற்றதெல்லாம் இருந்து எதற்கு? என்ற வெறுப்பின் நிலைகளே வருகின்றது.
4.அப்போது வருவதற்குள் இப்பொழுதே கூட அது வரலாம்.
நஞ்சினை நுகர்ந்து நல்ல குணத்தைச் செயலாக்கும் நிலையை அழித்து அசுர உணர்வாகவே
இயக்கிக் கொண்டிருக்கும் இது போன்று நிலைகளிலிருந்து நாம் தப்புதல் வேண்டும்.
அருள் ஒளி பெற வேண்டும். எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் இந்த உடலின் இச்சையை வீழ்த்தி
விட்டு ஏகாந்தமாக வாழ முடியும்.
எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உருவாக்கி உணர்வின் ஒளியின் சரீரமாக
மாற்றிவிட்டால் பிறவியில்லா நிலைகள் அடைகின்றோம்.
ஆகவே இதில் ஒன்றும்
கடினமில்லை.
இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று விஞ்ஞானத்தின் தன்மை பெற்றாலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பக்தி மார்க்கத்தில் இந்தத் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மக்களை நான் காக்கிறேன் என்று தெளிவுப்படுத்தினாலும், தன்னையும் மக்களையும் காக்கும்
நிலை
இல்லாமல்தான்
உள்ளது.
1.தன்னையே காக்கும் நிலைகள் இல்லை என்றால்
2.மக்களைக் காப்பது எவ்வாறு?
தான் நுகரும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் தன்மையை உயிர், அணுவாக மாற்றி அதே உணர்வின் தன்மையை நிச்சயம் இயக்கும்.
“உயிரிடமிருந்து தப்ப முடியாது…” என்ற நிலையை யாரும் சிந்திப்பதில்லை. அன்று அகஸ்தியன் இதைத்
தெளிவாகச் சொல்லி உள்ளான்.
தீமைகளை அகற்றும் உணர்வுகளைப்பற்றி நீங்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.
குருநாதர் எமக்கு அர்த்தமாகவில்லை என்றாலும் உற்று நோக்கும்படி செய்து இந்த உணர்வைப் பதிவாக்கினார்.
அதை நினைவவாக்கி இந்த வாழ்க்கையில் அவர் சென்ற பாதையில் செல்லும் பொழுது
இந்த உண்மையின் உணர்வை அறிய முடிந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் கலந்து கொண்டிருக்கும்
உணர்வின் ஆற்றலை யாம் பெற முடிந்தது
ஆகவே
1.தீமைகளை உருவாக்கும் நிலைகளில் இருந்து,
2.தீமைகளை அகற்றிய அருள்ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.
அகஸ்தியன் தனக்குள் பெற்ற உணர்வினை சந்தர்ப்பத்தால் வியாசகன் பெற்றான். அவன் கற்றுணர்ந்த உணர்வை வெளிப்படுத்தினான். இதுவும் உண்டு, அதுவும் உண்டு.
அவர்கள் சென்ற பாதையில்
நாம் சென்றோம் என்றால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளுடன் நாம் ஒன்ற
முடியும்.
மனிதனாகப் பிறந்தபின் இனிப் பிறவி இல்லை என்ற நிலை அடைதல் வேண்டும். அருள் ஒளியின் சுடரில் இணைந்து ஆனந்த வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.