ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2017

“தெய்வமணிமாலை” – சண்முகத் தூயமணி... தெய்வமணி... சைவமணி...!

“சரவணபவா... குகா...” தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக உடலான குகைக்குள் நின்று “கந்தா...” பலவற்றையும் அறிந்திடும் நிலை “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே...!” என்று இதை இராமலிங்க அடிகள் பாடியுள்ளார்,

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேளே சண்முகத் தூயமணி. சண்முகம் என்றால் உண்மையான ஐந்தாவது அறிவின் தன்மை கொண்டு தான் நுகர்கின்றோம் ஆக புலனறிவு ஐந்து.
1.தூய்மையான உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
2.அந்தத் தெய்வமணியாக என்னை ஆக்க வேண்டும் என்று
3.அவர் தெளிவாகப் பாடியுள்ளார்.
4.(அவர் பாடியதை)அர்த்தத்தை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை.

சண்முகம் என்றால் ஐந்தாவது அறிவு. சண்முகம் என்றால் வேறு விதமாக எண்ணிக் கொள்கின்றார்கள்.

சண்முகத் தூயமணி - அதாவது புலனறிவு ஐந்து. சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் இந்த மூன்றின் உணர்வின் தன்மை கொண்டு
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்தால்
2.நான்காவாது நிலை கொண்டு இருளை நீக்கிடும்
3.அந்தத் தீமைகளை நீக்கிடும் சண்முகத் தூயமணி என்று அதைப் பாடுகின்றார்.

எனக்குள் தூய்மைப்படுத்தும் அந்த உணர்வை நான் பெறவேண்டும். இந்தக் கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே... “நீ எப்படி இருக்கின்றாயோ... அதனின் உணர்வு கொண்டு... எனக்குள் அதை உருவாக்க வேண்டும்”.

“அருட்பெரும் ஜோதி” - எந்த உணர்வையும் நீ எடுக்கக்கூடிய உணர்வும்
1.அதன் வழி எனக்குள் அறிவாக இயக்கக்கூடியவனும்
2.அருள் ஒளி என்ற பேரொளியை எனக்குள் எடுத்து
3.இந்த உணர்வின் ஒளியாக அறிவிக்கும் தன்மை பெற்றவன் “நீ...” என்று உயிரிடம் ஏகி..,
4.உயிரின் இயக்கத்தைத் தெளிவாகப் பாடியுள்ளார்.

இதை நாம் புரிந்து கொண்டால் அன்று இராமலிங்க அடிகள் எவ்வாறு பாடினார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பாடல்களைப் புகழ்ந்து பாடுகின்றோம். பாடலின் “மூலத்தை...” இன்னும் நாம் காணவில்லை.

ஆனால் அதைச் சொன்னால் நாம் தேடிக் கொண்டேயிருப்போம்.

உணர்வின் உணர்வின் இயக்கங்களைத் தெளிவாக இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிந்திடல் வேண்டும்.

சண்முகத் தூயமணி – சண்முக..., ஐந்தாவது அறிவின் துணையால்
1.உயர்ந்த உணர்வு கொண்டு
2.அந்த ஒளியின் உணர்வாக எனக்குள் உருவாக்குதல் வேண்டும் என்று அவர் பாடியுள்ளார்.

அதனின் மூலக்கருத்து இது தான்,

உண்முகச் சைவமணி - மற்றொன்றைக் கொல்லாதபடி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை கொண்டு இந்தச் சைவம் என்ற நிலையில் செயல்படுத்த வேண்டும்.

 நாம் (உடல்) அசைவம். துருவ நட்சத்திரம் சைவம் அது தனக்குள் அசையும் தன்மை இல்லாது இருக்கும் இருப்பிடத்திலே தனக்குள் அந்தச் சைவ மணியாக உருவாகின்றது.

இதனை நாம் பெறவேண்டும் என்று தான் அவர் பாடல்களிலே பாடினாரே தவிர நாம் பாடுவது போன்று அல்ல. அவர் பாடல்களை நமக்குகந்த நிலைகள் கொண்டு பாடுகின்றோம்.

ஆனால் மூலத்தின் நிலைகளை விடுத்துவிட்டோம்.

இப்படித்தான் ஞானிகள் கவி ரூபமாகப் பாடியதை நாம் பாடலை உள்முகமாக நுகர்ந்து
1.நம்முடைய அறிவுகள் எதுவோ
2.நம்முடைய ஆசைகள் எதுவோ அதனுடன் கலந்த பின்
3,அந்த உணர்வின் செயலாக மாறுகின்றது.

நாம் ஒரு நல்ல மருந்தினை வீரியம் ஊட்ட வேண்டும் என்றால் அதிலே விஷத்தின் தன்மை கலந்தால் அந்த மருந்திற்கு வீரியம் ஆகின்றது. அதன் வழி ஊடுருவிச் சென்று அந்த மருந்தின் வேகத்தைக் கூட்டித் தீமை செய்யும் அணுக்களை அது அடக்குகின்றது.

இதைப் போலத்தான் விஷத்தை அடக்கிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் செலுத்தினால் “சண்முக..” அந்த உணர்வுகள் ஐந்தாவது நிலை கொண்டு அதைக் கவர்ந்து நமக்குள் நுகர்ந்தால்
1.அதைத் தூயமணியாக நமக்குள் உருவாக்கி
2.அதைச் சைவமணியாக
3.ஜீவ அணுவாக மாற்றாதபடி “சைவமாக” மாறிவிடுகின்றது.

அணு என்ற நிலைகள் வரும் பொழுது அது வேறு விதமாக மாறுகின்றது,

அந்த ஐந்தாவது அறிவினை அதைத் தூயமணியாக்கி அதை என்றும் சைவமணியாக இனிப் பிறவியில்லா நிலையாக அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் “அந்த நிலையான... ஒரு நிலையைப் பெற வேண்டும்”.

செடி கொடிகள் எப்படித் தன் உணர்வின் தன்மை ஒரு வித்தின் தன்மை அடைகின்றதோ இதே போல உணர்வைச் “சைவம்” ஆக்க வேண்டும்

நமக்குள் (மனிதனுக்குள்) இருக்கும் உயிரணுக்கள் அசைவம்.

உணர்வின் தன்மை இரண்டறக் கலந்து ஒளியின் உணர்வை எப்படிச் செடி கொடிகள் மாற்றுகின்றதோ
1.வானுலகில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அதைச் சைவமாக
2.அசைவமல்லாதபடி சைவமாக அந்தத் துருவ நட்சத்திரம் அது வாழ்கின்றது.
3.பேரொளியின் தன்மையைத் தனக்குள் உருவாக்குகின்றது.

இதைத்தான் அன்று அவர் பாடியுள்ளார்.

அதை நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் மனிதன் எவ்வாறு வாழ முடியும்? எவ்வாறு வாழ வேண்டும்? எந்த வாழ்க்கை வாழ வேண்டும்? இந்தப் பிறவிக்குப் பின் நாம் எதைப் பெறவேண்டும் என்பதைத்தான் அவர் உணர்த்தியுள்ளார்.

இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டினார்கள்.

நாம் இந்த வாழ்க்கையில் எந்தக் குணத்தை அதிகமாக நேசிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலின் கடைசி நிலை. இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த நிலை அடைவோம். 

பேரருளின் உணர்வைக் கவர்ந்து பேரொளியாக மாறி என்றுமே நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அழியா ஒளியின் சரீரம் பெற்று வாழ்ந்து வளர்வோம்.