ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2017

“முருகன் வீரபத்திரன்” – தீமைகளை வென்றிடும் ஞானமும் வலிமை மிக்க எண்ணமும் நாம் பெறவேண்டும்

மனிதனுக்குள் விளைந்த சக்தி ஆறாவது அறிவு மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு.

நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும் மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால் நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.

அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில் அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான்.

அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது இவர் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவருக்குள் அலைகளாக வருகின்றது.

இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள்.

அதற்காகத்தான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ஒரு பக்கம் முருகனும் இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும் காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.
1.வலுவான எண்ணங்கள் கொண்டு
2.நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும்.
இந்தத் தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா…!

முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன…? கோவிலில் ஒரு பக்கம் முருகன் மறு அக்கம் வீரபத்திரசாமி.

ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு தனக்கு இணையாக வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு எதற்குமே அஞ்சா நெஞ்சன் துணை கொண்டு வெல்ல வேண்டும்.

உயர்ந்த நிலைகள் எதுவோ அதைத்தான் கோலமாமகரிஷி கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு என்று தெளிவாகக் காட்டினார்.

கொல்லூரில் பார்த்தால் அதுதான் இருக்கும்.

அரசனாக இருக்கும்போது அவர் பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.

தவம் என்பது உயிர். யாகம் என்பது உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது அசுர குணங்கள் தனக்குள் வராது தடுக்க முடியும் என்பதுதான் அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்.

உணர்ந்தபின் அதை நீக்கிவிடுதல் வேண்டும்.

1.அதாவது தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
2.ஆனால் தெரிந்த உணர்வுகளை உடலிலே இணைத்திடக் கூடாது
3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி
4.நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கப்பூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. இருந்தாலும் மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு அந்தச் சக்தியை நீக்க முடியும்.

இதைப் பயன்படுத்தவேண்டும்.

கோலமாமகரிஷி அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெறவேண்டும் என்று எண்ணினார். இன்னொரு சரீரம் வேண்டியதில்லை என்ற வலுவான எண்ணத்தை அவர் எடுத்துக் கொண்டார்.

என்றும் அந்தச் சப்தரிஷிகளுடன் இணைந்திடல் வேண்டும் என்று தன் எல்லையை வகுத்துக் கொண்டார். தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து விண்ணுலகம் சென்றார்.

மிகக் குறுகிய காலங்களில்தான் அவர் அந்த எல்லையை அடைந்தார். இவையெல்லாம் 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி.

கோலமாமகரிஷி அவர் வளர்த்த அந்தச் சக்தி நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து நமக்குள் இணைப்போம்.

“வலுவான எண்ணம் கொண்டு…” தனக்குள் வந்த கடுமையான சாப வினைகளையும் தீய வினைகளையும் “அவர் அகற்றியது போல்” நாமும் அகற்றுவோம்.