ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2017

ஒலிக்கொப்ப உணர்வும்... உணர்வுக்கொப்ப ஒலியும்... உணர்வுக்கொப்ப ரூபமும்... பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

வேதங்கள் என்றாலே “நாதங்கள்...” என்று பொருள். உணர்வின் ஒலிகள் - அந்த ஒலிகளின் உணர்வுக்கொப்ப ரூபங்கள் அடைந்தது என்பதைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

அது தான் சைவ சித்தாந்தம்.

1.சைவம் என்பது தாவர இனங்கள்.
2.அசைவில்லாத நிலைகள் கொண்டது.
3.அதை உயிரணு நுகரப்படும் பொழுது வேதாந்தம் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

இயக்க உணர்வின் தன்மை கொண்டு
1.ஒலிகளால் உணர்வுகள் வளர்வதும்
2.உணர்ச்சிக்கொப்ப அந்த ஒலிகள் எழுப்புவதும்
3.உணர்வுக்கொப்ப உடலானது என்றும் “சைவ சித்தாந்தம்” தெளிவாகக் கூறுகின்றது.

வியாசகரால் உருவாக்கப்பட்ட வேதங்கள் என்ற நிலைகளில் இருந்தாலும் அந்த ஒலியின் “ஓசைகளைத்தான் இன்று ஓதுகின்றனர்” பலர்.

ஆனால் ஓதும் (ஒலியின்) உணர்வின் தன்மையை நாம் அறிய முடியாத நிலைகளில் சாங்கிய சாஸ்திரங்களில் இணைக்கப்பட்டு அதன் உணர்வு கொண்டு வளர்க்கப்பட்டுவிட்டது.

சாங்கிய சாஸ்திரங்கள் செய்வதைக் கண்ணுற்றுப் பார்த்து எந்த உணர்வின் ஒலிகளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகின்றது.

வளர்ச்சி அடைந்த பின் இதைப் போல் இன்னொரு மனிதன் உணர்வின் ஒலிகளை எழுப்பினால் இந்த உணர்வின் வலு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா
1.அவன் ஈர்ப்புக்குள் தான் செல்லும்
2.அந்த எல்லைக்குள் தான் சுழற்சியாகும்.

பின் அந்த உடலுக்குள் சென்றபின் அந்த உடலிலே கலந்த நஞ்சின் உணர்வுகள் அதிகரித்து அந்த உடலை வீழ்த்திவிட்டு உடலை விட்டு வெளி வந்த பின் “தேய்பிறையாக” இதனின் உணர்வுகள் மாறுபடும்.

சாங்கிய சாஸ்திரங்களின் வழியில் இன்று வாழும் மக்கள் தன் எல்லையை அடைய முடியாது “மனித உடலே எல்லை…” என்ற நிலைகளில் சுழன்று கொண்டுள்ளனர்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களால் வியாசகர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகள் காலத்தால் மறைக்கப்பட்டுவிட்டது.

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் அன்று ஞானிகள் கூறினார்கள்.
1.உருவம்.., திடப் பொருள் என்பது “ரிக்”
2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”.
  
ஆகவே மனித உடல் பெற்று விண்ணின் ஆற்றலை உணர்ந்த அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை உயிருடன் சேர்த்து ஒளியாக்கித் தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி கணவன் மனைவியாக இணைந்து உருப்பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்தோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான உணர்வைச் சந்தர்ப்பத்தால் பெற்றுத்தான் மீணவனான வியாசகனும் ஒளியின் தன்மை பெற்றான்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை நாம் பெறுவதற்காக வியாசகர் உணர்த்தியிருந்தாலும் பிற்காலத்தில் வந்த மக்கள் அரசன் என்ற போர்வையில் ஆண்டவனின் உணர்வுகள் எனக்கே சொந்தம் என்று வந்துவிட்டனர்.

அதனின் வழிகளில் மக்களைத் தன் பக்கம் ஈர்க்க மந்திர ஒலிகளாக மாற்றி அதன் அடிப்படையில் ஞானிகள் கொடுத்த காவியப் படைப்புகளை மாற்றி உருவமாக்கி விட்டனர்.

அவ்வாறு இவர்கள் உருவமாக்கியபின் அதற்கு ஜீவனூட்ட பல சத்துகள் இடப்பட்டு அதன் வழி மந்திரங்களை ஓதி அந்த மந்திரங்களை ஓதும் பொழுது அந்த மந்திரத்தால் உருவாகும் சக்தியைத்தான் இவர்களால் நுகர முடிந்தது.

வியாசகர் கொடுத்த வேதங்களில் உள்ள மூலங்களும் அதனின் உண்மைகளையும் நுகர முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள் அரசர்கள்.

இன்றும் அதன் வழியில் தான் நாமும் விடாப்பிடியாக கடவுள் எங்கேயோ இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான் என்று நமக்குள் உள் நின்று இயக்கும் சக்தியை மறந்து தேடிக் கொண்டேயுள்ளோம்.

உயிரே கடவுள் உடலே ஆலயம். நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்ச்சிகளாக மாறி உமிழ்நீராக மாறி அணுவாக மாறும் கருவாகிப் பின் உடலாக உருவாகிக் கொண்டேயுள்ளது.

1.எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான்
2.”அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது என்பதே
3.வேதங்களில் காட்டப்பட்ட உண்மை.