நான்
எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டவன். தவ வலிமை கொண்டவன் அனைத்தையும்
அறிந்துணர்ந்தவன் கூடு பாயும் வித்தைகளை எல்லாம் தெரிந்தவன் என்ற நிலையில் அன்றைய
அரசர் காலங்களில் நிறையப் பேர் உண்டு.
1.பிறருடைய
எண்ணங்களைத் தன் மந்திரத்தால் அறிந்துணர்ந்து
2.இன்னொரு
உடலுக்குள் புகுந்து அந்த உடலுக்குள் நின்று
3.பலருடைய
ஆற்றல்களையும் சக்திகளையும் பெற முடியும் என்று இருந்தவர்கள் பலர்.
அந்த
அளவிற்குச் சென்றாலும் ஒரு உடலுக்குள் ஊடுருவி பாம்பு உடலிலோ மற்ற மனிதனின் உடலிலோ
சென்றாலும் இந்த உடலில் வாழப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பத்திற்கோப்ப கடினமான
நிலைகள் வந்தவுடன் என்ன ஆகின்றது?
இப்பொழுது
சாதாரண மனிதன் தான் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு அதே
நிலைகளில் ஏங்கியிருந்தால் இங்கே செல்லும்.
முதலிலே
கூடுவிட்டுக் கூடு பாய்ந்துவிடலாம். ஆனால் அதிலிருந்து புகுந்த உடலில் அவன்
எடுத்துக் கொண்ட அசுத்த நிலைகள் மறுபடியும் கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் அந்தச்
சக்திகள் இழந்துவிடுகின்றது.
மறு
கூட்டினுடைய நிலைகள் கொண்டு எந்த உடலைப் பெறுகின்றதோ அந்த உடலின் உணர்வின் சக்தி
கலக்கப்பட்டு அந்த உணர்வின் ஆன்மா தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகத்தான் ஆகின்றது.
அப்படித்
தேய்ந்துதான் இன்றும் பல வித்தைகளைச் செய்கின்றது. இன்று நாம் பார்க்கலாம்.
1.பலர்
அருளாடுகின்றார்கள்...,
2.பல
சித்தர்கள் இவர் உடலிலிருந்து செயல்படுகின்றார்கள் என்று சொல்வார்கள்.
இந்த
உடலிலிருந்து செயல்பட்டாலும் இந்த உடலுக்கொப்ப ஆசைகள் தூண்டப்பட்டு இன்றைய
வாழ்க்கைக்குக் காலத்தை வேண்டுமென்றால் தள்ளலாம்.
அதே
சமயம் “அறிதல்…” என்ற நிலைகளில் முன் கூட்டியே மற்றவைகளையும் மற்றவர்களைப்
பற்றியும் அளந்தறிந்து
1.அவர்கள்
துன்பத்தையோ நோய்களைப் பற்றியோ
2.அறிந்துணர்ந்து
அவர்களால் சொல்லவும் முடியும்.
அப்படிச்
சொல்வார்களேயானால் அவர்களுடைய உணர்வுகள் அனைத்தும் இவர் உடலில் சேர்ந்து அந்தத்
தீமையான உணர்வின் சத்துகள் இவர் உடலுக்குள் விளையத் தொடங்கும்.
சொல்லும்
நிலைகள் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
அதே
சமயத்தில் பலருடைய துன்பத்தின் நிலைகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு நஞ்சான நிலைகள்
கொண்டு அடுத்து நஞ்சான உடல்களாக மாறும் நிலைகள் தான் வரும். மனிதனாகக் கூட
மீண்டும் பிறக்க முடியாது.
மந்திரத்தால்
மக்கள் மத்தியிலே நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்றும் அந்தத் தாய்
செய்கின்றது… இந்தத் தாய் செய்கின்றது…, என்றும் சொல்வார்கள்.
அந்தத்
தாய்… என்பது எது?
எடுத்துக்
கொண்ட உணர்வின் சக்தியைத்தான் தாய் என்கிறார்கள். அந்தச் சக்தியின் தொடர்
வரிசையின் நிலைகள் ஒரு மனிதனுக்குள் எந்த நிலைகள் வளர்த்துக் கொள்கின்றனரோ அந்தச்
சக்திகள் செயல்படுகின்றன.
சாமியார்
செய்வார் மந்திரம் செய்யும் ஜோதிடம் செய்யும் இயந்திரம் செய்யும் இந்தச் சக்தி
செய்யும் அந்தச் சக்தி செய்யும் என்றால்
1.“எந்தச்
சக்தியும் செய்யாது”.
2.அவர்கள்
மனித ஆசையில் எடுத்துக் கொண்ட சக்தி
3.இந்த
மனித உடலில் சிறிது நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
4.அடுத்த
கணம் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
ஒவ்வொரு
மனிதனும் அவரவர் ஆசைக்கொப்ப எத்தனையோ மந்திரங்களைச் சொல்கின்றார்கள்.
இந்த
மனித உடலில்
1.ஒவ்வொருவருடைய
ஆசை விருப்பு வெறுப்பினுடைய நிலைகள் வெளிப்பட்டு
2.அதனின்
நிலைக்கோப்ப எந்தெந்தத் தெய்வங்களை எண்ணுகின்றனரோ
3.அந்த
உணர்வின் அலைகளைத்தான் இயக்கச் செய்ய முடியும்.
4.அந்த
நிலைகளில் தான் வாழ்க்கை அமைந்திருக்கும்.
இன்னும்
அந்த நிலைகளில் தான் நாமும் இருக்கின்றோம். இதைச் செய்தால் சரியாகுமா அங்கே போனால்
சரியாகுமா தர்மம் செய்தால் சரியாகுமா என்று அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம்.
யாரோ
எவரோ தான் செய்வார்கள்… நம்மால் எப்படி முடியும்…! “எல்லாம் அவன் செயல்” என்று இப்படித்தான்
எண்ணம் உள்ளது.
நாம்
நுகர்வதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அதைத்தான் உருவாக்குகின்றது. அவனன்றி
அணுவும் அசையாது… உள் நின்று இயக்கும் நம் உயிர் தான் கடவுள் என்று விநாயகர்
தத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்பொழுது
நீ எதை வினையாக்கிக் கொண்டிருக்கின்றாய்? ஆனால் நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்
என்று அங்கே தெளிவாகவே “கேள்விக் குறி…” போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
இதைப்
போன்ற உண்மைகளைத் தெரிந்த பின் நாம் எடுக்க வேண்டிய சக்தி எது என்பதை நாம் உணர்தல்
வேண்டும்.
இந்த உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய
வேண்டும். “அது தான் ஞானிகள் நமக்குக் காட்டியது”.