“கிருஷ்ணா… கிருஷ்ணா…” என்பார்கள். ஹரே கிருஷ்ணா ஹரே இராம், ஹரே கிருஷ்ணா ஹரே இராம் என்று சொல்கிறோம். அந்த இராமன் யார்? ஹரே கிருஷ்ணா யார்?
நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். (அவரைப் பற்றி) அந்தக் கண்ணின் நினைவுகள் வரும், அது ஹரே கிருஷ்ணா. அவரைப்
பற்றி நான் தெரிந்து கொள்கிறேன் என்று சொல்வோம்.
முதலில் ஹரே கிருஷ்ணா அடுத்து ஹரே இராம். உன்னை நான் பார்க்கிறேன் அப்பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் இரண்டாவது அந்த எண்ணமாக வருகிறது,
அப்போது அந்த எண்ணத்தின் செயலாக ஹரே கிருஷ்ணா ஹரே ராம்.
ஹரே கிருஷ்ணா ஹரே இராம்,
ஹரே இராம் ஹரே கிருஷ்ணா.
நாம் இதைப் பார்ப்பது கண்களின் தன்மை கொண்டு தான் பார்க்கின்றோம். இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?
“ஹரே இராம்… ஹரே கிருஷ்ணா… ஹரே இராமா… ஹரே கிருஷ்ணா…” என்று
பாடல்கள் பாடுகின்றார்கள்.
ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிக்
கோபிப்பவரின் எண்ணங்களை எண்ணும் பொழுது அந்த எண்ணத்தின் தன்மையை
1.நாம் கண் கொண்டு பார்க்கின்றோம்.
2.கண்களால் பார்த்தபின் ஹரே கிருஷ்ணா… அதாவது அவன் தவறு
செய்வதை “நாம் பார்க்கும்போது ஹரே கிருஷ்ணா”
3.அதே உணர்வுகள் நம் உயிரிலே படும் பொழுது அதே (கோபிக்கும்)
எண்ணம் வருகின்றது “ஹரே இராமா…”
4.ஆகவே அந்தக் கோபிக்கும் எண்ணம் நம் உடலுக்குள் உருவாகின்றது.
நம் உடலுக்குள் உருவான பின் ஹரே இராமா ஹரே கிருஷ்ணா…
நமக்குள் அந்த எண்ணம் வரும் பொழுது நாம் கண் கொண்டு பார்த்து…
“எனக்கு இவன் தீமை செய்தவன்…” என்று அதை உணர்த்துகின்றோம்.
எண்ணங்களை “இராமன்” என்றும் கண்களைக் “கண்ணன்” என்றும்
நம் காவியத் தொகுப்புகளில் இது தெளிவாகக் காட்டப்படுகின்றது.
நாம் எதை எண்ணினாலும் “எப்படி எண்ண வேண்டும்?” என்பதைத்
தெளிவாக்குவதற்காக ஞானிகள் நமக்கு இப்படி உணர்த்தியுள்ளார்கள்.
நாம் எண்ணும் எண்ணங்களே நமக்குள் கடவுளாக இருக்கின்றது.
1.நாம் எதை எண்ண வேண்டும்?
2.நமக்குள் எதை உருவாக்க வேண்டும்?
3.எந்தத் தீமைகளை அகற்ற வேண்டும்?
4.அசுர சக்திகள் புகாதபடி நாம் எப்படி அகற்ற வேண்டும்?
என்று காட்டியுள்ளார்கள்.
இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் மகரிஷிகளின் அருள்
உணர்வுகளை நமக்குள் உருவாக்க முடியும்.
அவ்வாறு உருவாக்கிவிட்டால் நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக
உருவாகி அது நமக்குள் கடவுளாக நின்று தீமையை அகற்றும் வல்லமையான அணுக்களாக உடலுக்குள்
உருவாகின்றது.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அருள் உணர்வை விளைய
வைத்து இணைபிரியாத நிலைகள் கொண்டு இதை உருவாக்கிவிட்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின்
2.இனி அடுத்துப் பிறவியில்லா நிலைகள் கொண்டு
3.”என்றும் ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ” இது உதவும்.
அருள் ஞானியின் உணர்வுகள் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது, இது அர்ச்சுணனாகி வலிமையாகிறது. நம் கண்கள் அங்கு விண்ணுக்கு அழைத்துச் செல்கிறது.
1.எதை வலுவாக எண்ணி எடுத்ததோ
2.அந்தக் கூர்மை நம்மை வலுவாக அழைத்துச் செல்கிறது.
3.இது மகாபாரதத்திலும் கீதா உபதேசத்திலும் தெளிவாக உள்ளது. யாம் எதையும் புதிதாகச்
சொல்லவில்லை.
அவர்கள் சொன்னதைத்தான் யாம் திருப்பி விளக்கமாகச் சொல்கின்றோம்.