நாம்
சுவாசிக்கும் உணர்வின் தன்மை புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே பட்டவுடன் அந்த
நாதங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வின் அலைகள் கொண்டு தான் நாம்
பேசுகின்றோம். அந்த உணர்வின் நாதங்கள் தான் நம்மை (உடலை) இயக்குகின்றது.
நீரை
வெப்பமாக்கிக் கொதிக்கச் செய்யும் பொழுது சப்தங்கள் வருகின்றது.
இதே
போன்று நம் உயிரின் துடிப்பான வெப்பத்திற்குள் நாம் சுவாசிக்கும் உணர்வுகள்
பட்டவுடன் இந்த உணர்வின் ஆற்றல் நாதங்களாக இயக்குகின்றது.
1.நாம்
எத்தகைய குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ
2.அது
நமக்குள் நாத ஒலிகளாக எழுப்பி
3.அந்தத்
தொனிக்குத் தக்கவாறு நம் உடலை இயக்குகின்றது.
ஒருவர்
கோபமாகப் பேசுகின்றார் என்று காதிலே கேட்டவுடன் செவிப்புலன் இயக்கி அந்த
உணர்ச்சிகள் தூண்டுகின்றன. அதே போன்று ஒரு மகிழ்ச்சியான சொல்களைச் சொல்லும் பொழுது
செவிப்புலனில் ஈர்க்கப்பட்டவுடன் அந்த உணர்வுகள் நம்மை மகிழச் செய்கின்றன.
ஏனென்றால்
அந்த உணர்வின் அலைகள் நமக்குள் அவ்வாறு இயக்குகின்றன.
“சப்தரிஷி”
(சப்த+ரிஷி) – உயர்ந்த ஆற்றல்மிக்க நாதத்தின் நிலைகள் கொண்டு உள்ளடக்கி ஒளியின்
சரீரமாகப் பெற்ற அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு அணுவின் தன்மை தான் “நாரதன்” என்று
பெயர் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
அவருக்கு
வீணையைக் கையில் கொடுத்து மனிதனுடைய ரூபத்தைப் போட்டுக் காட்டினார்கள்.
சப்தரிஷி
மண்டலத்திலிருந்து வரக்கூடிய அந்த ஒளியான அணு நாரதன் என்பது
1.அது
எத்தகைய ஆற்றல் பெற்றதோ
2.அந்த
உணர்வின் நிலைகள் கொண்டு விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் “மெய் உணர்வு”.
சுமார்
3000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலால்
சிக்கப்பட்டுக் கடலில் வீழ்ந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.
அப்பொழுது
தான் காக்கப்பட வேண்டும் என்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின்
எண்ணத்துடன் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே உணர்வு கொண்ட மீனின் (டால்பின்)
உணர்ச்சிகள் தூண்டி இவன் எண்ணத்திற்குப் பக்கபலமாக இருந்து இவனைக்
கரைசேர்க்கின்றது.
கரை
சேர்க்கும்போது இவனுடைய எண்ணத்தின் துடிப்பின் நிலைகளும் மீன் இவனைக் காத்த
உணர்வும் இந்த இரண்டு உணர்வுகளும் வியாசர் உணர்வுக்குள் சேர்த்தவுடனே
1.”பயம்
கலந்த… தான் தப்பித்துவிட்டோம்…” என்ற ஆற்றல்மிக்க அந்த உணர்வின் சக்தி இவனுக்குள்
கூடி
2.இந்த
உணர்வலைகள் தன் புலனறிவான கண்ணுக்குள் பாய்ந்து
3.எந்த
மீனைக் கொன்று புசித்தோமோ அந்த மீனே தன்னைக் காத்தது என்ற
4.அளவு
கடந்த ஏக்கத்தின் தன்மை கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது
5.அந்த
உணர்வின் ஆற்றலுக்குள் சிக்கியது தான்
6.சப்தரிஷி
மண்டலங்களின் ஒளியான அணு (நாரதன்).
அது
ஒரு சந்தர்ப்பம். அதற்கு முன் மீனவனுக்கு ஒன்றும் தெரியாது.
சப்தரிஷி
மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இவர் உடலிலே புகப்பட்டு இந்த
உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டு இவர் சுவாசித்த உணர்வின் தன்மை இவர் உயிரிலே
படுகின்றது.
உயிரிலே
படும் பொழுது சப்தரிஷி மண்டலமாக இயங்கிய அந்த உணர்வின் ஆற்றல் விண்ணுலகை எப்படித்
தனக்குள் கண்டறிந்ததோ
1.அந்தப்
பேருண்மையினுடைய தன்மைகள் அனைத்தும்
2.இந்த
வியாசனான “ஒன்றும் தெரியாத” அந்த மீனவருடைய உடலில் தென்படுகின்றது.
இந்த
உணர்வுகளின் சுவாசத்தாலேதான் பேரண்டத்தின் பெரு நிலையினுடைய நிலைகளை விண்ணுலகின்
ஆற்றலை “நாராயணா…” என்றும் “விஷ்ணு…” என்றும் அழைத்தார்
பேரண்டத்தில்
ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று இணைந்து அந்த ஆற்றல் பெற்றது. வலுவானது
வலுவற்ற அணுவிற்குள் மோதியவுடனே அது தனக்குள் கவர்ந்து சென்று தனது ஆற்றலைப்
பெருக்கி இப்படித்தான் பிரபஞ்சமே வளர்ந்தது.
ஒன்றுக்குள்
ஒன்று சென்று ஒன்றின் தன்மை வளர்ந்து அவ்வாறு வளர்ந்து வந்த அணுக்கள் தான்
பேரண்டத்தின் இயக்க நிலைகள் என்பதை வியாசர் கண்டறிந்தார்.
இயற்கையில்
ஒரு அணுவின் தோற்றமும் அந்த உயிரணுவின் தோற்றத்திற்குள் கண்ணனாகத் தோன்றி
1.அந்தக்
கண் ஒவ்வொரு மனிதனுக்கும் கீதா உபதேசம்
2.ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு நிமிடமும் எப்படிச் செய்கின்றது என்பதை
3.மகாபாரதம்
என்றும் அதற்குள் கீதா உபதேசம் என்றும் வெளிப்படுத்தினார்.
கண்ணால்
பார்த்து நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை
இயக்குகின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக்கினார்.
வியாசர்
படித்துணர்ந்து கற்றுணர்ந்து வரவில்லை.
சப்தரிஷி
மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியான உணர்வே இன்று நாம் அழைக்கும் மெய்ஞானியான
“வியாசக பகவான்” அன்று ஒன்றுமறியாத மீனவனுடைய உடலுக்குள் புகுந்து இந்த
ஆற்றல்மிக்க நிலைகளைச் செய்தது.