ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2017

“புகழுக்காக…” ஏங்கினால் ஏமாற்றம் அடைவோம் – “இன்னல்…” கண்டு கலங்கினால் நமக்கு நாமே தண்டனை கொடுத்தது போல் ஆகிவிடும்

ஒருவரைப் புகழ்ந்து கூறும் பொழுது தவறுகள் நிச்சயம் வருகின்றது. ஆகவே
1.புகழ் கண்டு மயங்காதே!
2.புகழாரம் பாடாதே!
3.புகழ்ந்துரைக்க எண்ணாதே…!

ஒருவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிவிட்டால் புகழ்ந்து பாடிய உணர்வுகள் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும்.

புகழைத் தேடி நாம் சென்றால் அந்தப் புகழின் ஏக்கத்தில் இருப்போம். நாம் ஏமாற்றத்தில்தான் சிக்குவோம். நாம் புகழுக்காகச் செல்லுகின்றோமென்றால், நம் வாழ்க்கை நிச்சயம் தடைப்படும்.

1.இன்னல் கண்டு கலங்காதே..!
2.இகழ்ந்துரைக்க எண்ணாதே…!
3.இகழ்ச்சி கண்டு பதறாதே…!

நாம் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் பிறரை இகழ்ந்துரைக்கும் எண்ணங்களைத் தவிர்த்தல் வேண்டும். ஒருவருடைய நிலைகளில் இன்னல்கள் வருகின்றதென்றால் அதைக் கண்டு இகழ்ந்துரைப்பது தவறு.

ஒருவர் இன்னலில் சிக்கும் பொழுது அந்த இன்னலிலிருந்து “அவர் மீள வேண்டும் ஈஸ்வராஎன்று அருள் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த இன்னலில் இருந்து மீள வேண்டும் என்றால் அந்த உயர்வு நமக்குள் கிடைக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் பிறரை இகழ்ந்துரைப்பதும் இன்னல் கண்டு கலங்குவதும் நமக்கு நாமே தண்டனை கொடுப்பது போன்றதாகும்.

எத்தகைய இன்னல்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிப்
1.பிறர் சொல்லால் பிறர் பார்வையால்
2.நமக்குள் வரும் தீமைகளைத் தவிர்த்துப் பழக வேண்டும்.

ஒருவன் தீங்கு செய்கிறான் என்றால் அந்தத் தீங்கின் தன்மை பற்று கொண்டால் அதுவே குருவாகின்றது. அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும் பொழுது அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது. 

1.தீமையை அகற்றிடும் நிலைகளை குருவாக ஏற்றுக் கொண்டால்
2.“தீமையை அடக்கிடும் குருஎன்ற நிலைகள் அடைகின்றது.

இன்றைய செயல் நாளைய நிலைகளாக அடைகின்றது. ஆகவே நாம் எதனின் நிலைகளை வளர்க்கின்றோமோ அதுவே நமக்குள் குருவாகின்றது.

ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால் அந்த வேதனை உணர்வே நமக்குள் உருவாகின்றது. அதுவே குருவாகி நரகலோகத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்குகின்றது.

திருடன் என்ற நிலைகள் வந்தால் அதுவே குருவாகி திருடன் என்ற நிலைகள் அடைந்து பிறருடைய துன்பங்களை அறியாது தவறு செய்யும் நிலைகளே வருகின்றன.

அதுவும் குருதான்.

மனிதனின் வாழ்க்கையில் நம் குரு காட்டிய அருள் வழியில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற நிலைகளில்
1.நாம் எந்த குருவைப் பின்பற்றுகின்றோமோ
2.அந்த “குரு உபதேசித்த உணர்வைத் தனக்குள் எடுத்தால்
3.தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற சக்திகளை ஊட்டும்.

அரும் பெறும் உணர்வை நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம். மெய்ப்பொருள் என்ற நிலைகளை உருவாக்குவோம்.

அனைத்து உலக மக்களின் உயிரையும் ஈசனாக மதிப்போம். அனைத்து உலக மக்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று தவம்  இருப்போம்.

பிறவி இல்லா நிலை பெற வேண்டுமென்றால் துருவ தியானத்தில் பெறும் அந்த அருள் ஒளியைக் கூட்டி இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களைத் தவிர்க்க வேண்டும்.