ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2017

“தியானம்…” என்பது நல்ல சக்திகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்ப்பது தான் – மிகவும் எளிதானது

தியானத்தில் உட்கார்ந்ததும் இது முடியவில்லைஅது முடியவில்லைஉட்கார முடியவில்லை என்று எண்ணிக்கொண்டே உட்கார்ந்தால் இதுதான் வளரும்.

1.தியானமிருக்கிறேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை
2.தியானமிருக்கிறேன் என் நோய் போகவில்லை
3.தியானமிருக்கிறேன் என் தொழில் நன்றாக நடக்கவில்லை என்று தவறான எண்ணத்திற்குக் கொண்டு செல்லாமல்
4.எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள்.

தியானமிருக்கிறேன் தொழில் நடக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டு வரப்படும்போது நீங்கள் தேட வேண்டியது இல்லை.
 
இந்தத் தியானத்தின் நிலைகள் நாம் எடுக்கின்றோமென்றால் இந்த உணர்வு வியாபாரம் மற்ற எல்லாம் தானாகவே வரும். நமக்கு வேண்டியது அது. அதை எடுக்கப்படும்போது இந்த உடல் பற்றின் நிலைகளில் மாற்றம் வரும்.

1.தொழில் இல்லை என்றால் இந்த உடலின் நிலைகள் வளராது
2.இந்த உடல் இல்லை என்றால் ஞானமும் பெற முடியாது.
3.ஆகவே இதைப்போன்று நாளை நாம் இருப்பதற்கு அது வேண்டும்.

இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டுமென்றால் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

யார் எந்தத் தீமை செய்தாலும் அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.
1.தீமை செய்கிறான் தீமை செய்கிறான் என்றால்
2.நம்மைத் தீமை செய்ய வைக்கும்.

அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க வேண்டும். இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். குறைகளைக் கூறுவதற்குப் பதில் நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும் நிலைகளுக்குக் கொண்டுவர வேண்டும்.

இது ஒருதலைப்பட்சமாக நமக்குள் வரப்படும் போது நம் இயக்கத்தில் வரப்படும் போது மற்றவர்களும் இதைச் சிந்திக்க வேண்டும்.

1.சிலர் விடாப்பிடியாக இருப்பார்கள்.
2.அதைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை.
3.அவர்கள் நிலை எதுவோ மீண்டும் நாம் முயற்சிக்கிறோம்.

தவறு செய்கிறார் என்றால் சரி. அவருடைய விதி அதுவாக இருக்குமோ என்ற நிலைகளில் நாம் அகற்றிட வேண்டும்.
1.அதைக் கவர்ந்திடக் கூடாது.
2.அவருடைய விதி அதுவாக இருக்கும்.

அது அதிகமாக இருந்தால் மீட்டுவதற்கு நாம் முயற்சி செய்யக் கூடாது. துடைப்பதற்கு “அவர் தான்” முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் அதன் வழியில் செய்த பிழைகள் அது அரசனாக இருந்து அதன் வழிக்கே கொண்டு செல்லும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து அதை வலுவாக்கி இதைத் தனக்குள் தணிய வைக்க வேண்டும்.

தவறு நாமும் செய்யவில்லை. அவரும் செய்யவில்லை. நமக்குள் உட்புகுந்த தீமைகளே அந்தத் தவறுகளைச் செய்கின்றது. ஆகவே அதை அடக்க வேண்டும்.

எதை வைத்து…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் புகுத்தி அந்தத் தீமையை ஒடுக்க வேண்டும். உங்களால் முடியும்.

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே வரவேண்டும். இவ்வாறு நாம் ஒளியாக்கிக் கொண்டோமென்றால் நாம் அங்கே “சப்தரிஷி மண்டலம்” செல்வது உறுதி.