இராமகிருஷ்ண பரமகம்சர் தெய்வீகப் பண்புகளைப் பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும்
இராவணனைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பல வினாக்களுக்குத் தெளிவாகப் பதிலைக் கூறினார்.
1.காவியங்கள் மனிதரின் உணர்வின் தன்மை கொண்டுதான் வந்ததே தவிர
2.இதைப் போன்ற ரூபங்கள் இல்லை என்று வாதாடினார்.
3.இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பண்பு அன்றும் இல்லை.
இராமகிருஷ்ண பரமகம்சர் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஏராளமான பேர். ஆனால் அவர் கூறிய
உணர்வை மாற்றி நூல்களை வெளியிட்டதும்
1.அவருடைய உணர்வுகளைக் கேட்டறிந்தபின்
2.திரிபுகளாக மற்றவர்களால் உணர்த்தப்பட்டு
3.உண்மையின் உணர்வுகள் மறைக்கப்பட்டுவிட்டது.
தங்களுக்கு ஏற்றவாறு பக்தி மார்க்கங்களுக்கு உண்டான ஞானத்தைப் பயன்படுத்தி மதங்களுக்கு இணக்கமாகக் கருத்துக்கள் கலக்கப்பட்டு அவருடைய
உண்மையின் உணர்வுகள் வெளியாகப்பட்டது என்ற உண்மையை எமக்குக் காண்பித்தார் குருநாதர்.
இராமகிருஷ்ணர் சுற்றி வரப்படும் பொழுது அவருடன் ஒரு மந்திரவாதியும் வந்தார்.
இராமகிருஷ்ணரைப்
பற்றி அறிவதற்காக மந்திரவாதி வந்தார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர். ஆனால் அவர் பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக்
கூறுகிறார்.
இவர் அடிக்கடி மனிதரைப்
புதைக்கும் இடங்களுக்கும் எரிக்கும் இடங்களுக்கும் சென்று அங்கு வரும் மணத்தை நுகர்ந்து அதனின் உணர்வு என்ன? என்று அறிகின்றார்.
அவருக்கு இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது…? எதனை அறிகின்றார்…? எதனைப் பின்பற்றுகின்றார்…? என்று அவரைச் சூழ்ந்திருந்த பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.
மாலை நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண
பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.
அப்பொழுது “ஐயோ… இருட்டாகிவிட்டதே…, விளக்கு இல்லாமல் வந்துவிட்டோமே…” என்று ஒருவர்
சொன்னார்.
இதனால் அவர்களுடன் வந்த மந்திரவாதி ஒருவர் “ஜெய்…பவானி…” என்று தொடையைத் தட்டினார். “சலோ…” என்று சொன்னவுடன்
“ஒரு வெளிச்சம்” முன்னால் சென்றது.
இதன் உணர்வை அன்று நடந்ததை அப்படியே காண்பித்தார் குருநாதர்.
மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து, அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது
இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.
நான்… “இந்த வெளிச்சத்தை” விரும்பவில்லை,
1.என் உடலில் அக வெளிச்சமும்,
2.இருளை அகற்றி நான் செயல்படும் “முன் சிந்தனை…” என்ற
3.”இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே…” என்று சொன்னவுடன்
4.கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.
இதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக் காண்பித்தார் குருநாதர்.
இந்த உணர்வின் ஒலி அலைகள் பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும்
பொழுது இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும் போது “அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.
இப்படியான நிலையில் அந்த மந்திரவாதி இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து
விட்டாரே… என்று “ஏவல்” செய்தார்.
எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து உணவு உட்கொள்ள முடியாதபடி பல துன்பங்களை இராமகிருஷ்ண
பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.
ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது.
உண்மைகளைத் தெரிந்து கொண்டபின் மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல்
1.இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று
2.”முழுமை பெற்ற உணர்வுகளை” எண்ணினார் இராமகிருஷ்ண பரமகம்சர்
ஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம்
1.“உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்…!” உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நமக்குள் நிச்சயமாக இருந்தால்
போதும்.
2.”இந்த உடல் கழியக் கூடியது… இந்தக் கழிவின் நிலைகளுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…!” என்று பல முறை எடுத்துக் கூறியும் கேட்காமல்
3.எத்தனையோ வைத்தியரைக் கொண்டு பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இருந்தாலும் இராமகிருஷ்ண பரமகம்சர் வாழவேண்டும் என்ற நிலைகளில் அவரைத் துன்புறுத்தினர்.
இராமகிருஷ்ண பரமகம்சர் தவறேதும் செய்யவில்லை. ஆனால் மந்திரவாதி பரமகம்சர் தன்னை அவமதித்து விட்டார் என்று எண்ணி அவர் உணவு கூட உண்ண முடியாதபடி செய்தார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் இதனாலெல்லாம் நீங்கள் எனக்கு ஒன்றும் நிவர்த்திக்க முடியாது
என்று சொன்னால் யாரும் கேட்கவில்லை.
பரமகம்சர் இறந்தார். ஆனால் அவருக்குக் கேன்சர் என்றுதான் மற்றவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் எவ்வாறு ஏவல் செய்தனர் என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் நமது குருநாதர்.