நாம்
எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் நம் உயிர் ஓ...ம் நமச்சிவாய.. ஓ...ம் நமச்சிவாய..
ஓ...ம் நமச்சிவாய.. என்று உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது.
அதைத்
தான் “பார்வதி பஜே… நமச்சிவாய” என்பது.
நாம்
நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்துடன் கலந்து நம்
உடலாக உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.
இது
தான் “ஓ...” பிரணவம் “ம்...” பிரம்மம் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக்
கூறுகின்றது. அதன் வழியில்
1.நாம்
எண்ணும் பார்க்கும் நுகர்ந்து அறியும் அனைத்தையும்
2.சதாசிவமாக
ஆக்கிக் கொண்டேயுள்ளது நம் உயிர்.
3.அதாவது சதா நம்
உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது என்று பொருள்படும்படி நம் ஞானியர்கள்
கூறியுள்ளார்கள்.
ஆகவே
நாம் சதா சிவமாக்க வேண்டியது எது?
இருளை
அகற்றி அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலில் “இருளை
அகற்றிடும் அருள் ஞானத்தைச் சதா சிவமாக்கிக் கொண்டேயிருத்தல்” வேண்டும்.
நமது
உணர்வுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து நம்
வாழ்க்கையில் என்றும் ஏகாந்த நிலை என பேரருள் பேரொளி என ஆகி என்றும் பிறவியில்லா
நிலை அடைய இது உதவும்.
அகஸ்தியன்
துருவனாகி திருமணமாகி இரு மனமும் ஒன்றாகி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து
இருண்ட உலகை அகற்றிப் பேரருள் பேரொளி என ஆன அந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும்
என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
1.அகஸ்தியர்
அவர் வாழ்ந்த காலங்களில் எதை எதையெல்லாம் நுகர்ந்தாரோ
2.அந்தத்
தாவர இனங்களின் நறுமணங்களும்
3.தீமைகளை
நீக்கிடும் பச்சிலைகளின் மணங்களும் இங்கே வரும்.
நீங்கள்
தியானிக்கும் பொழுது பல விஷத் தன்மைகளும் விஷமான உணர்ச்சிகளையும் தீமைகளை
நீக்கிடும் அல்லது அடக்கிடும் “அருள் மணங்கள்” உங்களுக்குள் வரும்.
இவை
அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று தீமையை அடக்கி அருள் ஞானத்தைப் பெருக்க உதவி
செய்யும்.
உங்கள்
மனைதை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான “அந்தப்
பேரருளுடன் இணைத்து…” அந்தப் பேரருளைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன்
தியானியுங்கள்.
1.சர்வ
பிணிகளையும் அகற்றிடும் அருள் சக்தியாக
2.அகஸ்தியன்
கண்ட பல மூலிகைகளின் மணங்கள்
3.இப்பொழுது
உங்களுக்குள் வரும்.
அதை
ஏங்கிப் பெற்று நமக்குள் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களை அகற்றிடும் அருள் ஞான
சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.
ஓ...ம்
ஈஸ்வரா குருதேவா என்று நம் உயிரை வேண்டி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வெளிப்படும்
பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அவ்வாறு
துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கித் தியானித்துப் பேரருளை உங்கள் உடலில்
உருவாக்குங்கள். பேரருளைப் பெருக்குங்கள்.
அகஸ்தியன்
பெற்ற “பல அற்புத சக்திகள்” இப்பொழுது இங்கே வெளி வந்து கொண்டிருக்கின்றது. அதை
நுகர்ந்து உங்கள் உடலுக்குள் உள்ள இரத்த நாளங்களுக்குள் இணைக்கச் செய்யுங்கள்.
இருளை
அகற்றி உலகை அறிந்து மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அருள் ஞான வழியில்
வாழ்ந்திடும் வாழச் செய்யும் மன உறுதியும் அருள் ஞானத்தைப் பெறச் செய்யும் ஆற்றல்
உங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதிலும் படர்ந்து கொண்டுள்ளது.
1.தாவர
இனங்களின் பல மூலிகை மணங்கள்
2.இப்பொழுது
நீங்கள் பெறுகின்றீர்கள்.
அகஸ்தியமாமகரிஷிகளின்
அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித்
தியானியுங்கள்.
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கித் தியானித்து
அன்னை தந்தையர் உடல் முழுவதும் படரச் செய்து நமக்காகப் பட்ட துயரினை அகற்றச்
செய்து பேரருள் பெறவேண்டும் என்று அன்னை தந்தையரை ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள்
அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன்
பெற்ற அற்புத சக்திகளைப் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை இது. தொடர்ந்து செய்து
வந்தால் எத்தகையை தீமைகளையும் பிணிகளையும் போக்க முடியும்.
நம்
பார்வையால் பேச்சால் மூச்சால் மற்றவர்கள் தீமைகளும் பிணிகளும் தோஷங்களும் அகலும்.
செய்து பாருங்கள்.