ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2017

“உன் மனைதை ஏன் வாட்டுகின்றாய்...? என்று குருநாதர் என்னிடம் கேட்டார் – பின் மன பலம் கொடுத்தார்

ஒரு சமயம் நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லும் பொழுது, எத்தனையோ விபரீத நிலைகள் ஏற்படுகின்றது. அப்பொழுது எனக்குள் பயம் உருவாகின்றது.

என் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஊரில் இருக்கின்றதே…! அவர்களை நான் எப்படி பாதுகாப்பது…? அவர்கள் என்ன ஆனார்களோ…? என்ற இந்த எண்ணம் வருகின்றது.

என்னை அங்கே இமயமலையிலே பனி உறையும் தன்மையிலே குருநாதர் என்னை இருக்கச் செய்திருக்கின்றார்.

ஆனால் அந்த நேரத்தில் குருநாதர் சொன்ன நிலையை மறந்தபின் எனக்குள் குளிர் தாங்க முடியவில்லை.
1.அவர் சொன்ன உணர்வை நான் எடுத்தேன் என்றால்
2.என்னைப் பாதுகாக்கும் சக்தி வருகின்றது.
3.ஆனால் குடும்பப் பற்றை நான் எடுக்கும் பொழுது இந்த குளிரின் தன்மை அதிகமான பின் உடலே இறையத் தொடங்கிவிட்டது.

இன்னும் ஒரு நொடியானால் என் இரத்தமே உறைந்துவிடும். பின் யாம் மடிந்துவிடும் நிலை வருகின்றது.

ஆகவே என் ஆசை எதிலே நிற்கின்றது?

என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும். “அவன் அப்படி இருக்கவேண்டும்…, இப்படி இருக்கவேண்டும்… என்று எண்ணுகின்றேன். ஆனால் அவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்கும் நேரத்தில் குருநாதர் என்னிடம் கேட்டார்.

இப்பொழுது நீ இதையெல்லாம் எண்ணுகின்றாய்…! இந்த உடலை விட்டுப் போய்விட்டால், நீ எதை செய்யப் போகின்றாய்…? ஆக இதற்கு முன்னாடி இருந்தவர்கள் (வாழ்ந்தவர்கள்) ஆசைப்பட்டவர்களெல்லாம் இருக்கின்றனரா…?

இந்த வாழ்க்கையில் உனக்குப் பொன்னடி பொருளும், எது சொந்தமாகின்றது? “எதுவுமே…” சொந்தமில்லை.

“சொந்தமில்லாததற்கு… ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்…?” என்று வினா எழுப்பினார்

குருநாதர் என்னிடம் அவர்கள் நலம் பெறவேண்டும். அருள் ஒளி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் உயரவேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து.
1.இந்த உணர்வின் நினைவாற்றல் அவர்களை இயக்க உதவும்,
2.அது, வலுவான நிலைகளை “அங்கே உருவாக்கும்”.

நீ இங்கிருக்கும் நிலைகளில்… வேதனையையும் வெறுப்பும் கொண்டேயானால் உன் உடலைச் சார்ந்தவர் உணர்வுகளிலும் இதுவே பாயும்.

நண்பனுக்குள் நன்மை செய்தான் என்று எண்ணும்போது விக்கலாகின்றது, நன்மை நடக்கின்றது.

நண்பனுக்குள், பகைமை என்ற உணர்வுகள் தோன்றும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான்… “உருப்படுவானா…?” என்று எண்ணினால் உணவு உட்கொண்டாலும் புரை ஓடுகின்றது. ஒரு தொழில் செய்தாலும் அங்கே சீராகச் செய்யாதபடி தவறுகள் நடக்கின்றது.

உன் உயர்ந்த உணர்வின் தன்மை உன் மக்கள் பெறவேண்டும் என்றும் அருள் ஒளி பெறவேண்டும் என்று அருளை நினை. உனக்குள் பெருக்கு, உணர்வைப் பாய்ச்சு.

இந்த உடல் உனக்குச் சொந்தமில்லை அவர்களுக்கும் சொந்தமில்லை.

இன்று எந்தச் செல்வம் தேடி வைத்தாலும்
1.இப்பொழுது உன் உயிர் இறைந்தது.
2.நீ இந்த உடலை விட்டுப் போய்விட்டால் இந்தப் பொன்னடி பொருளைப் பற்றி நீ நினைக்கப் போகின்றாயா…?
3.அல்லது அவர்களைக் காக்கப் போகின்றாயா…?

நீ எதை  நிலை கொள்ளவேண்டும்? எவ்வாறு நீ இயக்க வேண்டும்? என்பதை குருநாதர் அங்கே இமயமலையில் வைத்துத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே நாம் எதற்காகவும் இந்த மனதை வாட்ட வேண்டியதில்லை. எத்தகைய சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நல்லாதாக வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். 

நம் உணர்வு நம்மைக் காக்கும். மற்றவரையும் காக்கும் நிலையாக இயக்கும்.