உங்கள் குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். வணங்கவில்லை
என்றால் குழந்தையை அழைத்து அம்மாவையும் அப்பாவையும் ஏன் வணங்கவில்லை…? என்று கேளுங்கள்.
அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில்
ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்
1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில்
உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு நீங்கள் அருளாசி வழங்குங்கள்.
அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக்
கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில்
தான் உண்டு.
ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து
தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச்
சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும்
நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு நம்முடைய வீடு… நம்முடைய சகோதரர்கள்… நம் விவசாயம்
என்ன…? நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்…? என்று நாம்
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளிடம் குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச்
சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்து பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.
1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் இச்சைகள் இணைக்கப்படும் பொழுது சில
நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன்… இவ்வாறு செய்கிறாய்…? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று சிறிது காலம்
நாம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.
ஏனென்றால் நாம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அடுத்து நாம்
எண்ணியபடி படிப்பில் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள்
நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.
1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய
மெய் வழியில் வளர்க்க வேண்டும்.
1.ஞானக் குழந்தைகளாக உருவாக்கி
2.உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக…” வளர்த்துப் பழக வேண்டும்.