
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குணத்திலும் உணர்விலும்… மகரிஷிகள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்
நீங்கள் ஏதேனும் வேலையாக வீட்டிலிருந்து வெளியே செல்கின்றீர்கள் அல்லது ஒரு தொழிலைத்
தொடங்குகின்றீர்கள் என்றால்… அது சமயம்
1.அகஸ்திய மாமகரிஷிகளையும்
2.அவர் துருவ மகரிஷியான
நிலையையும்
3.துருவ நட்சத்திரமான
நிலையையும்
இந்த மூன்று நிலைகளையும் ஏங்கி எண்ணுங்கள்.
அதனின் உணர்வுகளை நாங்கள்
பெற வேண்டும்
என்று எண்ணியபின் உங்கள் தொழிலைச் செய்யத் தொடங்குங்கள்.
இந்த முறையில் நீங்கள் பதிவு செய்யும் ஞான வித்துக்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கருவாக வளர்ச்சி பெற்று… நீங்கள் எதை எண்ணிப் பதிவு செய்தீர்களோ அந்தச்
சக்தியைப் பெறக்கூடிய தகுதியை… அத்தகைய உணர்வின் அணுக்களை இரத்த நாளங்களில் பெருக்குகின்றது.
1.முதலில் கரு
முட்டையாகின்றது.
2.பின் அதனின் உணர்வின் தன்மையை எண்ண எண்ண அவைகள் அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.
உதாரணமாக… கோழி முட்டையிட்ட பின் அதை அடைகாத்து அதன் உணர்வின் தன்மை கொண்டு அங்கே வெப்பமாக்குகின்றது. அதன்பின் அந்த வெப்பத்தின்
துடிப்பு கொண்டு
கருவின் துணை கொண்டு குஞ்சாக விளைகின்றது.
குஞ்சாக வெளி வந்த பின் தாய்க் கோழி எதைத் தன் உணவாக எடுத்துக் கொண்டதோ அதே உணவைக் குஞ்சும் தன் உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.
இதைப் போன்று
1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களை நுகரச் செய்த உணர்வுகள் அனைத்தும் உங்களிடத்தில் கருவாக உருவாகின்றது.
2.அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களில் நினைவுபடுத்தும் பொழுது அந்த உணர்வின் அணுக்
கருமுட்டைகள் வளர்ச்சி பெறுகின்றது.
அதாவது… நீங்கள் இதே எண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… அது உங்களுக்குள் “அடைகாக்கப்படுவது…”
போன்றதாகி விடுகின்றது.
கோழி தான் இரை தேடுவதற்கு வெகு தூரம் சென்றிருந்தாலும் தன் குஞ்சின் நினைவு கொண்டு தான் முட்டையிட்ட அதே
இடத்திற்கு வந்து
அடைகாக்கின்றது.
அதைப் போன்று நீங்கள் எந்தத் தொழிலுக்குப் போவதாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்துப் பழகிக்
கொண்டால்
1.அடிக்கடி நினைவுபடுத்தி அந்தச்
சக்தியை நீங்கள் பெறும் போது அடைகாப்பது போன்று ஆகி
2. மகரிஷிகளின் அருள்
சக்தியை உங்களுக்குள் வளர்க்கும் திறந் பெறுகின்றீர்கள்.
கோழி தான் இரை தேடும்
பொழுது
தன் குஞ்சுகளைக் கூவி அழைத்துத்தான் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கிறது.
அதைப் போன்று நமக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் அணுக் கருவாகி விட்டால்
1.இதனின் உணரச்சியின்
கிளர்ச்சிகள் நமது இரத்த நாளங்களில் கிளம்பும் பொழுது
2.நமது உயிர் அந்த
உணர்வுகளை இயக்கி
காற்றில் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
3.கண்கள் வழியும் காதுகள் வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வு வழியும் கவர்ந்து
4.நமது உடலுக்குள்
பரவச் செய்து அந்த ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றது.
நாம் அருள் மகரிஷிகள்
காண்பித்த அருள் வழியில் நடந்தால் அது நமக்குள் வளர்ச்சி
பெற்ற
பின் நம்முடைய நினைவாற்றல் “மாமகரிஷி அகஸ்தியன்…” சென்ற பாதையில் செல்லும்.
நமது வாழ்க்கையில்
எத்தகைய விருப்பு
வெறுப்புகளை நுகர்கின்றோமோ அது நமக்குள் கருவாகி விடுகின்றது. உதாரணத்திற்கு நாம் ஒன்றுமே செய்ய வேண்டாம்.
ஒருவர் தாக்கப்படுவதை
உற்று நோக்கி
அதனின் அச்ச உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அச்சத்தின் உணர்வுகள் நமது உடலில் “ஊழ்வினை…” என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.
நாம் நுகர்ந்தறிந்த
உணர்வுகள்
நமது இரத்த நாளங்களில் கருவாக உருப்பெற்றுவிடுகின்றது.
இப்படிப் பதிவாகி… பதிவானதை மீண்டும் நினைவுபடுத்தினால் அதனின் உணர்வுகளை நாம் நுகரும் சக்தி பெறுகின்றோம்.
அப்படி நுகரும் சக்தி
பெற்றபின்
அந்த உணர்வுகளை நமது உயிர் உடல்
முழுவதும் சுழலச் செய்கின்றது.
அந்த உணர்வுகள் நமது
இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அணுக்கருக்களின்
தன்மையினை அடைகின்றது. நமது உடலில் கருவான அணுக்களுக்கு வீரியம் ஊட்டுகின்றது.
1.வேதனைப்படுவோர்
உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் முதலில் சில காலம் தெரியாது.
2.இந்த அச்சுறுத்தும்
உணர்வுகள்
நுகர்ந்தது அடைகாப்பது போன்று அந்த அணுக்கருக்கள் வளர்ந்து விட்டால்
3.குஞ்சு தன் இரைக்காக
கத்தும் பொழுது தாய் கோழி கூற்று பரப்பித் தன் குஞ்சுக்கு இரை கொடுப்பது போன்று
4.நமது உயிர் உணர்வின் ஒலி அலைகளை எழுப்பிச் நமது சிறுமூளை பாகத்திற்கு
எட்டச் செய்கின்றது.
பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு கண்களுக்கும் செவிகளுக்கும்
மூக்கிற்கும் உடலுக்கும் கிளர்ச்சிகளை
உந்தி
அதன் வழி சுவாசிக்கச் செய்து அதனின் எண்ணத்தை நமக்குள் பெறச் செய்து நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்து நமது உடலில் உள்ள அணுக்கருக்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்து உதவுகின்றது.
காலையில் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுதோ தொழில் ஆரம்பிக்கும் பொழுதோ அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி கூட்டினோம் என்றால் அதை அடைகாத்தது போன்றதாகின்றது.
அவ்வாறு அடைகாத்து
அந்த உணர்வின் தன்மை குஞ்சாகப்படும் பொழுது
1.நம்மையறியாமலே நமக்குள்
அந்த மகரிஷிகள் பால் எண்ணங்கள் செல்லும்.
2.இதனின் உணர்வுகளை
நமக்குள் வளர்த்து விட்டால் நாம் எண்ணுவதற்கு முன்பே அந்த உணர்வைக் கூட்டி
3.அருள் உணர்வுகளைப்
பெறும் அந்த உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
மகரிஷிகளின் அருள்
உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ண எண்ண அதனின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அடைகாப்பது போன்று காத்து (திரும்பத்
திரும்ப நுகரும்
உணர்வுகள்) அந்தக் கருக்கள் நமக்குள் விளைந்து கொண்டேயிருக்கும்.
ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் நம்முள் குஞ்சுகளானாலும்
1.அடுத்தடுத்து நாம்
தியானத்தில் எடுக்கும் போது இவைகளெல்லாம் கருக்களாகின்றன.
2.பின் நினைவாக்கப்படும் பொழுது அது வளர்ச்சி அடைந்து
கொண்டே, இருக்கும்.
இப்படி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும்…
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… ஒவ்வொரு குணத்திலும்…
ஒவ்வொரு உணர்விலும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும் (இது முக்கியமானது).
அந்த மகரிஷிகள் எவ்வாறு உயிருடன்
ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இன்று சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்களோ அந்த அரும் பெரும் சக்திகளை நமக்குள் அணுக்கருக்களாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத்தான் இதை
உபதேசிப்பது
2.அந்த நிலைகளை அனைவரும்
அடைவதற்கு
எமது அருளாசிகள்.