ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2026

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்


அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் ராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.
 
1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.
 
அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.
 
பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… ருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.
 
அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.
 
பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.
 
உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.
 
ராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.
 
தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதிறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!
 
அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.
 
1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!
 
யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞாப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.
 
பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.
 
எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.