
“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!
தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து
வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த
உடலில் இருக்கப் போகின்றது…!
உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள்
மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.
அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி
செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த
உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.
சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை
எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று
தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.
இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத
உருவை உயிர் உருவாக்கும்.
இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.
விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும்.
ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு
அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள்
மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து
நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும்
அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.
“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட
வேண்டும்.
எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும்
சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை
எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா
ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க
வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.
நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான
உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக
மாறுகிறது.
ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று
அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச்
செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள்
என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.