
கூட்டுத் தியானம் மிக மிக அவசியம்… ஏன்…?
எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானிக்கப்படும் பொழுது அந்தச் சக்தியை
எல்லோருக்கும் கிடைக்கச்
செய்ய வேண்டும்.
வீட்டிலே கவலை சஞ்சலம் மேல் வலி இடுப்பு வலி இது போன்று எத்தனையோ நிலைகளைச்
சந்திக்க நேர்கின்றது. இருந்தாலும்…
1.கூட்டுத் தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரே ஏக்க அலையுடன் நாம்
தியானிக்கிறோம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி… மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
எல்லோரும் ஒன்று போல் சொல்கின்றோம்.
இது அனைத்தையுமே காந்தப்புலன்கள் கவர்ந்து கொள்ளும்.
1.ஒவ்வொருத்தருடைய உடலில் இருக்கக்கூடிய துன்ப நிலைகளை மறந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒன்று போல் எடுத்து ஏக்க உணர்வுடன் பதிவு
செய்யப்படும் பொழுது
3.எப்படிப் பல விதமான சத்துகள் உடைய செடிகள் பல குணங்கள்
ஒன்றுடன் ஒன்று சேர்த்து அது உயர்ந்த மரம் செடிகளாக விளைகின்றதோ
4.பல விதமான பொருள்களைச் சேர்த்துக் குழம்பை ருசியாகச் சமைத்து மகிழ்ச்சியாக
உணவாக உட்கொள்வது போன்று
5.கூட்டு தியானத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இதைப் போன்று சொல்லி
6.ஒருவருக்கொருவர் இந்த உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது எல்லோருடைய உணர்வின்
மணமும் ஒன்று சேர்கின்றது.
காரம், புளிப்பு
இனிப்பு துவர்ப்பு அனைத்தும் சேர்த்து ருசியாகுவது போன்று இந்த வாழ்க்கையில் எந்த
நிமிடத்திலும் எந்த நேரத்திலும் கூட்டுத் தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை கலந்து எடுத்துக் கொண்டால் நம்
வாழ்க்கையில் சுவை மிக்க நிலைகளாக உருவாக்க இது உதவும்.
அந்த சந்தர்ப்ப நிகழ்ச்சியை ஏற்படுத்தத் தான் இந்தக் கூட்டு தியானம். கூட்டுத் தியானம் இருப்பதே
அதற்குத்தான்.
1.பல சங்கடமான எண்ணங்கள் இருந்தாலும் அது அனைத்தும் ஒன்று சேர்த்து
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று ஒரே உணர்வுடன் ஒலியை
எழுப்பப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகிவிடுகிறது.
3.பதிவு செய்து அந்த எண்ணத்தை நமக்குள் வலுப்படுத்துவதற்குத்
தான் இந்தத் தியானம்.
கூட்டு தியானம் இருந்து பழகிக் கொண்டவர்கள் உடலை விட்டு உயிரான்மா பிரிந்தாலும் கூட… அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச்
சரீரம் பெற வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து நாம் கூட்டு ஐக்கியமாக இருந்து விண்
செலுத்தப்படும் பொழுது மீண்டும் இந்த உடல் என்ற கூட்டிற்குள் செல்லாதபடி தடுத்து… ஒளிச் சரீரம் பெறும் நிலைக்கு “நாம் உந்தித்
தள்ளலாம்…”
அதற்குத்
தான் கூட்டுத் தியானங்களில் சப்தரிஷி மண்டலத்தினை நினைவுபடுத்தி அந்த
உணர்வுடன் உங்களை இணைக்கின்றோம்.
சிறு துளி பெரு வெள்ளம். அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் எடுத்து கூட்டு தியானங்களில் ஒரே நிலையில்
இருந்து… உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்
அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தி தள்ளி அங்கே இணைக்க முடியும். அப்போது அவர்கள் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
1.கடும் தவம் இருந்தோ வரம் வாங்கியோ எடுப்பதற்குப் பதிலாக
2.இராக்கெட்டை உந்து விசை கொண்டு விண்ணிலே ஏவி அங்கிருக்கக் கூடிய
ஆற்றல்மிக்க சக்திகளை அறிந்துணர்வது போல
3.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு தியானத்தின் மூலமாக
4.உடலை விட்டு பிரிந்த உயிரான்மா இன்னொரு உடல் பெறாதபடி ஒளிச் சரீரம் பெறும்
தகுதிக்கு அங்கே உந்திச் செலுத்தலாம்.
அப்படி அல்லாதபடி கடும் ஜெபம் இருந்து நான் தனித்து விண்ணுக்குப் போவேன்
என்றால் அது முடியாது. ரிஷித்தன்மை
பெற்றவர்களும் இதைப் போன்று மக்கள் மத்தியிலே விண் செல்லும் மார்க்கத்தை அங்கே
ஊட்டி அவ்வாறு தான் அவர்கள் விண் சென்றார்கள்.
இந்த தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால் அந்த
ஆன்மாக்களை நாம் உந்தி விண் செலுத்தி விடுகின்றோம். நாம் இந்தப் பூமிக்குள் இருந்தால் மீண்டும்
உடலுக்குள் தான் வர வேண்டி வரும்.
அதிலிருந்து தப்புவதற்குண்டான வழியைத்தான் இங்கே உபதேசிக்கின்றோம். “இது ஞானிகள் கண்ட அறவழி…”
மந்திரத்தைச் சொல்லி சொர்க்கலோகம் போகலாம் என்றால் அந்த மந்திரத்தால்
அடுத்தவன் கையிலே சிக்கித் தவிக்க வேண்டி வரும். அப்படிப் போக வேண்டும் என்ற விருப்பம்
இருந்தால் அப்படி நீங்கள் செல்லலாம்.
இல்லை… கூட்டுத் தியானம்
இருந்து யாம் என் சொல்லும் முறைப்படி விண்ணுக்கும் செல்லலாம். ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்.
1.இந்த உடல் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைக் கழற்றி எறிந்து விட்டு
2.அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றால் அது உங்கள் மனதைப் பொறுத்துத் தான் உள்ளது.
ஆக அந்த மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கும்போது உங்கள் வாழ்க்கையில்
வரக்கூடிய இடையூறுகள் நீங்கும். அதற்குண்டான சக்திகளைத் தான் மீண்டும் மீண்டும்
உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
1.சாமி
ஏதோ சொல்கிறார் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
2.இப்பொழுது நாம் உங்களைத் தேடி வந்து தான் இதைக் கொடுக்கின்றோம்.
நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்த சக்தியைப் பெற முடியும் என்ற வாக்கினையும்
பதிவு செய்கின்றோம்…
பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!
அதே சமயத்தில்
இப்பொழுது நன்றாக இருக்கின்றோம்… திடீரென்று உடலை
விட்டுப் பிரிய நேர்ந்தால் “அய்யய்யோ இறந்து
விட்டாரே… இப்படி ஆகிவிட்டதே…!” என்று யாரும்
எண்ண வேண்டியதில்லை.
தியானத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று விண் செலுத்தினால்
1.ஜிர்…ர்ர்… என்று அந்த ஆன்மா மேலே
போய்விடும்
2.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) அவசியம் தேவை.
அதைச் செய்வதை
விடுத்து விட்டு அழுகிய சரீரத்திற்கு முக்கியத்துவம்
கொடுத்து “இங்கே புதைக்கலாமா…? அங்கே
புதைக்கலாமா…? சமாதி கட்டி அழகுபடுத்தலாமா…?” என்று யோசனை செய்து கொண்டிருந்தால் இந்த புவியின் பற்றுக்குள் தான் வர வேண்டி வரும்.
1.இந்த நாய் எப்படியோ போகின்றது… அது பூராம் குப்பை… என்று தூக்கி எறிந்து விட்டு
2.உயிராத்மா அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைய
வேண்டும் நிலையான நிலைகள் பெற வேண்டும் என்று
3.அங்கே கொண்டு போய் விண்ணிலே செலுத்த வேண்டும்.
இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்…! உடலிலிருந்து தான் உயிராத்மா அழியா ஒளி உடல் பெற முடியும். ஏனென்றால் இந்த உடல் அழியக்கூடிய சமாச்சாரம் தான்.
உயிராத்மா
மெய் ஒளி பெற வேண்டும்… அது தான் முக்கியம்…!
மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இந்த உடல். அது மண்ணுடனே மண்ணாக மக்கட்டும். மண்ணிற்குள் இருந்து எடுத்த சத்தை உயிர் ஒளியாக மாற்றிய பின் விண்ணுலகம் செல்ல வேண்டும்
எல்லோரும் அந்த ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.