ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2025

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது

தினசரி தியானம் எடுத்து முடித்த பிற்பாடு நாம் செய்ய வேண்டியது


சங்கடமோ சலிப்போ கோபமோ குரோதமோ தொழிலில் சோர்வோ இது எல்லாம் வரும் பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்துவதற்கு
1.அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை ஒரு நிமிடம் எண்ணிவிட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று கண்ணிலே ஏங்க வேண்டும்.
 
அடுத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
அப்படிச் செலுத்தி விட்டால் அந்தச் சங்கடமோ பிறருடைய கோபமோ பிறருடைய நோயோ அது எல்லாம் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
 
1.எங்கள் தொழில் சீராக நடக்க வேண்டும்
2.நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
3.நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.இதைப் போன்று வாழ்க்கையில் நம் ஆன்மாவை ஒவ்வொரு நொடிப் பொழுதும் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
 
எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் யாம் பதிவு செய்திருக்கின்றோம்.
 
நம்மைத் திட்டியவனை திட்டினான் திட்டினான் என்று எண்ணும் பொழுது அனுடைய நினைவு எப்படித் தொடர்ந்து வருகின்றதோ துரோகம் செய்தான் பாவி என்று அவனை எண்ணினால் நம் காரியங்கள் எப்படி அன்று கெடுகின்றதோ அவனுக்கும் கெடுகின்றதோ அதைப் போல்
1.நீங்கள் எப்போது அருள் சக்திகளை எண்ணினாலும்
2.உங்கள் எண்ணத்தால் அந்த சக்திகளை நீங்கள் எளிதில் கவர முடியும்… உங்கள் எண்ணம் உதவி செய்யும்.
 
தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றார்களே…!” என்று நாம் எண்ண வேண்டியது இல்லை… எண்ணக் கூடாது.
 
துரு நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் அவருடைய அறியாத தீமைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இப்படித் தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
ஏனென்றால் தீமை செய்வோரைப் பார்த்து இப்படிச் செய்கின்றானே என்று ண்ணினோம் என்றால் அவன் உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையை அது கெடுக்கின்றது.
 
ஆகவே அப்படி அது நமக்குள் வராதபடி இந்த முறைப்படி சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.த்தகைய நிலைகள் வந்தாலும் இது போன்று கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்து வந்தால் பிறருடைய தீமை நமக்குள் புகாது.
 
இருவர் சண்டை இட்டு கொண்டிருந்தாலும் கூட இதைப் போன்று உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்கைமைகள் அகல வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தால் போதுமானது.
 
அதை விடுத்து விட்டு
1.ஏன் இப்படிச் சண்டை இடுகிறார்கள்…? என்று அதை அழுத்தமாக எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டையிடும் உணர்வை வளர்த்துவிடும்.
 
சொல்வது அர்த்தமாகிறதல்லவா.
 
இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்து சேருகின்றது. அதை மாற்றுவதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி இது போன்ற பயிற்சிகளைக் கொடுப்பது. உங்கள் வாழ்க்கையையே தியானமாகக் கொண்டு வர முடியும்.
 
கையிலோ உடலிலோழுக்குப்பட்டால் உடனே தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. விஷமான பொருளோ அசிங்கமான பொருளோ நம் மீது பட்டால் உடனடியாக அதை நாம் தூய்மைப்படுத்துகிறோம் அல்லவா.
 
இதே மாதிரித் தான் உடனுக்குடன் உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம். கொடுத்ததைச் சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றால் ஜோசியமோ ஜாதகமோ மந்திரம் எந்திரம் எந்த மாயமும் தேவையில்லை.
 
1.யாம் சொல்லிக் கொடுக்கக்கூடிய முறைப்படி செய்தால்
2.உங்களாலேயே அதை மாற்றிக் கொள்ள முடியும் எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.
 
உங்கள் வியாபாரத்திலும் இது போன்ற அருள் உணர்வுகளைப் பாய்ச்சி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுக்குப் பொருளைக் கொடுத்தால் வியாபராமும் சீராகும்.
 
எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
 
எந்தத் துறையாக இருந்தாலும் இதே போன்று அருள் உணர்வைப் பாய்ச்சி அங்கே இனைக்கும்படி செய்து
1.அனைவருக்கும் இதைக் கிடைக்கும்படி செய்து வந்தால் எல்லாமே மகிழ்ச்சியூட்டும் நிலையாக வளரும்.
2.இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
 
இதன் வழி நீங்கள் கடைப்பிடிக்கப்படும் பொழுது தைச் செய்து பார்க்கும் பொழுது
1.அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் என்னிடம் கேளுங்கள்
2.அதற்கு என்ன வழி…? என்று நிச்சயமாக வழி காட்ட முடியும்.