ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 18, 2020

மூகாம்பிகை என்ற மூன்று சக்தியின் இயக்கத்தைப் பற்றி கோலமாமகரிஷி உணர்த்திய உண்மைகள்


மூகாம்பிகை என்றால் மூன்று சக்தியின் தொடர்பு கொண்ட இயக்கம். ஒரு உயிரணுவிலும் அதே இயக்கமாகத் தான் இயக்குகின்றது. பூமியிலும் அதே நிலைகள் கொண்டு தான் இயங்குகின்றது.

1.பூமி சுழலும் போது வெப்பம் (1) ஆகின்றது
2.சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தால் ஈர்ப்பு சக்தி (2) வருகிறது.
3.அந்த ஈர்க்கும் சக்தியால் தான் எதைக் கவர்ந்து கொள்கின்றதோ (3) அதன் செயலாக
4.இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமி இயங்குகின்றது என்ற நிலை தான் “மூகாம்பிகை” என்பது.

ஆக... தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுவே மணம் ஞானம்.

அதே பொல் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு அந்த இயக்கத்தால் வெப்பமாவதும்... அந்த இயக்கத்தினால் ஈர்ப்பு சக்தியாவதும்... ஈர்ப்பால் தனக்குள் கவர்ந்து எத்தகைய நிலையைத் தன்னுடன் இணைத்து அது இயங்குகின்றதோ அந்த இயக்கமே மூன்று சக்தி... “மூகாம்பிகை” என்று பெயர் வைத்தார்கள்.

அதனுடன் இணைக்கும் பொருள் எதுவோ... அப்பொருளின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது...? என்பதனையே கோலமாமகரிஷி மக்களுக்குத் தெரியப்படுத்தியது. ஆகவே அதற்குப் பெயர் மூகாம்பிகை என்று வைத்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்திற்குப் பெயர் பராசக்தி அதனுடன் இணைத்து இயங்கும் சக்தியின் பெயர் லட்சுமி. என்றும் இவை அனைத்தும் சூரியனைக் கடந்து வெளி வரப்போகும்போது விஷம் இயக்கச் சக்தி... இந்த மூன்றும் சேர்த்து அது ஒரு சக்தியாகின்றது.

இயக்கத்தின் நிலைகள் கொண்டு சூரியன் சுழற்சியாகும் போது உருவாகும் வெப்பம் பராசக்தி என்றும் அதனுடன் இணைந்த காந்தத்திற்குப் பெயர் லட்சுமி என்றும் அதைக் கடந்து அந்த விஷத்தின் நிலையைத் தனக்குள் அது கவர்ந்து வரப்படும்போது ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

மூன்று சக்திகள் கொண்டு இயங்குவதால் அதையும் மூகாம்பிகை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் நம் உயிரின் இயக்கம்...
1.தான் கவர்ந்து கொண்ட மணம்... ஞானம் என்ற நிலையில்
2.எதன் நிலைகள் கொண்டு அது கவர்கின்றதோ
3.அதன் இயக்கமாகத் தான் இயங்குகின்றது என்ற இந்த நிலையை நாம் உணர்வதற்குத்தான்
4.மூகாம்பிகை ஆலயமாக வைத்தார் கோலமாமகரிஷி.

 இந்த கோலமாமகரிஷி. கடும் தவத்தால் கண்டுணர்ந்து தனக்குள் விளைய வைத்த சக்தியால் மண்ணாகி அணுக்களின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்றும் தனக்குள் கவர்ந்துணர்ந்த நிலை. இருப்பினும் அது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் கண்டுணர்ந்து உணர்த்தப்பட்ட உணர்வுகள் தான்...!

1.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகள் அனைத்தும் இன்று நம் பூமியில் படர்ந்துள்ளது.
2.அதை நுகர்ந்தவர்கள் அனைவருமே மகரிஷிகள் ஆகின்றனர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் அனைத்து சக்தியையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெறுபவர் எவரோ அவர்கள் அனைவரும் “மகரிஷி ஆகின்றார்கள்...!”

அதனால் தான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்வது...! அர்த்தமாகிறதல்லவா...!

 மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே இருந்தாலும் பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும் போது
1.அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்
2.உணர்ந்தபின் அதை நீக்குதல் வேண்டும்.
3.அதாவது இன்று தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
4.ஆனால் தெரிந்த உணர்வுகள் நம் உடலிலே இணைந்திடக் கூடாது அதை நீக்கிடல் வேண்டும்.
5.தீமைகள் எதுவோ அதனை நீக்கி... நன்மையின் பயன் எதுவோ.. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிடல் வேண்டும்.

காரத்தைத் தனித்து நாம் உணவாக உட்கொண்டால் காரத்தின் வேக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவையோடு இணைக்கும் பொழுது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்... பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தாலும்... உணர்ந்த அச்சக்திகளை எல்லாம் நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம்... ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீவினையாகச் செயல்படும் நிலைகளை மாற்றிடல் வேண்டும்.

பிறர் தீமையைக் கேட்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபட நாம் உதவி செய்கின்றோம் ஆனாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் கேட்டுணர்ந்தபின் அடுத்த கணம்...
1.நம் முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நாம் கவர்ந்து
2.நமக்குள் அடுத்து தீமை விளைவிக்கும் நிலையை
3.அந்தத் தீமை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

அதைத்தான்... அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கற்றுணர்ந்த உணர்வுகளை கோல மாமகரிஷி கவர்ந்து அன்றைய மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் எவ்வாறு எடுத்துரைத்தாரோ அதனை நாம் கவர்ந்து கொண்டால் நம்மில் இருக்கும் தீமைகளை அகற்ற இது உதவும்.