
அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்
அன்று புலையர்கள் என்று மலைவாழ் மக்களாக காடுகளில் விலங்குகளுடன்
வாழ்ந்தவர்கள் விஷத்தன்மைகளை முறிக்கும் ஆற்றல்களையும் தான் நுகரும் வேதனை கொண்ட சக்திகளிலிருந்தும் விடுபடும் சக்தி பெற்றிருந்தார்கள்.
1.மற்ற எதிர் நிலையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது…?
என்றும்
2.மூலிகைகளின் மணத்தை நுகர்ந்து அதன் இயக்கம் எவ்வாறு…? என்றும் அறிந்துணர்ந்து
3.அதை வைத்து
நோய்களை மாற்றி அமைத்தார்கள்.
ஆபரேஷன் செய்வதற்கு இன்று மனிதனை
நினைவிழக்கச் செய்வது போன்று ஒரு பச்சிலையை எடுத்து உடலின் அந்தப்
பாகத்தில் வைத்து தடவி விட்டால் அந்த இடத்தில் உணர்ச்சிகள் இருக்காது.
அதைக் கிழித்து அவன் எலும்பை இணைத்துக் கொண்டு வரும் வரையிலும் இப்படித் தப்பிக்
கொண்டார்கள்.
காடுகளின் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்தவர்கள் மிக விபத்தான நிலைகள்
ஏற்பட்டாலும் சில பச்சிலைகளின் சாறுகளை எடுக்கின்றார்கள்.
1.பெரிய எறும்புகளை எடுத்துப் பிண்ணை (PIN) வைத்துத் தைப்பது போன்று
2.இரண்டு குடலையும் வைத்து எறும்பை வைத்துக் கடிக்க வைக்கின்றார்கள்
3.அதற்குப் பின் எறும்பின் தலையைக் கிள்ளி விடுவார்கள்.
4.இது இறுக்கிப் பிடித்த பின் சேர்ந்து விடுகின்றது.
5.இன்று தையல் போடுகின்றோம்… ஆனால் அக்காலங்களில் இந்த
முறைப்படி செய்தார்கள்.
6.அந்த எறும்பின் உடலின் விஷத்தின் அமிலங்கள் இதனுடன்
கலந்த பின் இரண்டறக் கலந்து விடுகின்றது.
7.இதனின் உணர்வுகள் அதனை இணைத்துக் கொண்டு பச்சிலை என்ற மூலிகைகள் ஒன்றுடன்
ஒன்று தசைகளை இணைத்து விடும்.
இன்று அபூர்வமாகப் பல ஆபரேஷன்களைச்
செய்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இதைக் காட்டிலும் அன்றே
நுணுக்கமாகச் செய்துள்ளார்கள்.
கேன்சர் நோயாக இருந்தாலும் அதற்கு இதே பச்சிலைகளை எடுத்து கேன்சர் உண்டான இடங்களில் அதை
நேராக பாய்ச்சப்படும் பொழுது
1.எங்கே அந்த விஷத்தின் வேர்கள் வருகின்றதோ அங்கே கறுக்கப்படுகின்றது.
2.இது சென்றபின் அந்த விஷத்தை முறித்து விடுகின்றது…
கேன்சர் நோயையும் நீக்கினார்கள்.
அந்தக் காலத்தில் ராஜ வைத்தியம் செய்தவர்கள் எல்லாம் அரசர்களுக்கு மட்டும்
செய்வார்கள்.
மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் அன்று
செயல்படுத்தினார்கள்.
இதை எல்லாம் கண்டுணர்ந்த புலஸ்தியர்கள் அதைச் செய்தார்கள்.
1.ஆனால் நானும் பார்த்தேன் குருநாதர் உணர்வால்…!
2.அன்றைய
மலைப் பகுதி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…?
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் துணை கொண்டு எப்படித் தீமைகளை நீக்கினார்கள்…?
4.எப்படி நோய்களைப் போக்கினார்கள்…? என்று அறிந்து கொண்டேன்.
ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு தன் நாடு நான் அரசன் என்ற நிலை வரும் பொழுது
இருப்பதை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டும் என்று போர் முறைகள் வந்தது. அரசர்கள் எல்லாம் இப்படித்தான்
வாழ்ந்தார்கள்.
தன் ஆசையின் உணர்வால் மற்றொன்றை அழித்து மிருகங்களைப் போன்று “மற்றவர்களுடைய நிலையைப் பறித்துத் தான் சுகமாக வாழ வேண்டும்” என்று
செயல்படுத்தினார்கள்.
அதன் வழிப்படித் தான் இந்த உலகமே இன்றும் மாயையில் சிக்கிக் கொண்டு மனித உடலின்
இச்சைக்கே வருகின்றது. அரசன் தான்
வாழப் பல முறைகளைக் கையாண்டான்.
அதன் வழிகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற இந்த உண்மையை
நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
விஞ்ஞானத்தால் பூமிக்குள் பல நச்சுத்தன்மைகள் அடைந்து விட்டது. சாக்கடையின் கழிவிற்குள் பன்றி தன்
உணர்வைப் பாய்ச்சி நஞ்சினைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்ல உணர்வினை எவ்வாறு
நுகர்கின்றதோ அதைப்போல
1.நீங்களும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நஞ்சினைப் பிளந்து தீமைகளிலிருந்து
விடுபட்டு
2.நல்ல உணர்வுகளை நுகரும் சக்தி பெற்று பேரருள் என்ற உணர்வுகளை உருவாக்கி
3.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் ஒளியின் சரீரமாக வேண்டும்.
பன்றி நஞ்சினை நீக்கி நஞ்சற்ற நிலைகளைச் சுவாசித்து நல்ல உணர்வுகளான பின்… நஞ்சால் உடலான நிலைகளைப் பிளந்து
விட்டு நஞ்சினைப் பிளந்திடும் உணர்வுகள் கொண்டு மனிதனாகப் பிறக்கச் செய்தது.
மனிதனான பின்… உணவாக உட்கொள்ளும் உணவிற்குள்
வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது மனித உடல்.
அதைப்போல நமக்குள் வரும் நஞ்சினை நீக்கும் ஆற்றலை “நம் எண்ணத்தால்”
எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி நீக்கிப் பழகியவர்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதன் வழியைப் பெற… உங்களுக்குள்
பதிவாக்கும் உபதேசத்தின் நிலை கொண்டு
1.இந்தப் பிரபஞ்சத்தில் கலந்த நஞ்சினை உங்கள் எண்ணத்தின்
வலு கொண்டு பிளந்து
2.நஞ்சிற்குள் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள்
நுகர்ந்து… உங்களுக்குள் அதைச் சேர்த்து
3.நஞ்சால் கவர்ந்த உடலை நீக்கிய பின்… உயிரான ஒளி
கொண்டு ஒளியின் சரீரமாக இணைந்து வாழ்ந்திடவும் வளர்ந்திடவும் முடியும்.
கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… யார் ஒருவர் இந்த உணர்வினை
வளர்க்கின்றார்களோ… அவர்கள் முழுமையான வளர்ச்சி அடைய
முடியும். அத்தகைய நிலையை நீங்கள் எல்லோருமே பெற மகரிஷிகளை வேண்டுகின்றோம்.