
கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி
கணவன் மனைவி இல்லாது தனித்த மனிதனாக விண் சென்றால் அது வளர்ச்சி இல்லாதது. “முனி” என்ற
நிலையையே அடைகின்றது.
1.அப்படி முனி என்ற நிலையில் வளர்ச்சி இல்லை என்றால் கடுகளவே இருக்கும். நாளடைவில் அது தேய்பிறை ஆகிவிடும்.
2.தேய்பிறையாகி அந்த ஒளிக்கற்றைக்குள் அது கலந்து “மற்றதற்கு
உணவாக ஆகும் தன்மையே அங்கேயும் வருகின்றது…”
கணவன் மனைவி என்ற இரண்டற இணைந்தால் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும்
மகிழ்ந்திடும் உணர்வுகள் வருகின்றது. இங்கே எப்படி மகிழ்ந்து வாழ்கின்றோமோ…
நாம் இப்போது விண் செலுத்தும் ஆத்மாக்கள் அங்கே இரண்டறக் கலந்தாலும்
1.மனைவியுடன் கலந்தால் அது வளர்ச்சிக்கு பெறும்.
2.இணைந்து வாழும் வளர்ச்சியாகி என்றும் ஜீவனுடன் இருக்கும்.
சாமியார்கள் என்று சொல்பவர்கள் திருமணம் ஆகாத நிலையில் அவருக்குப் பின்
இனவிருத்தி இல்லை. எந்த உணர்வின்
தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் அவன் மடிவான். அவன்
வளரும் தன்மை இல்லை. அவன் வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களும்
மனைவி இழக்கும் நிலை தான் வரும். இவனும் அதற்குமேல் வளராத
நிலையைத் தான் அடைய முடியும்.
சாதுக்களாக இருந்து திருமணம் ஆகாதபடி நான் பெரிய முனிவனாக இருக்கின்றேன். குடும்பப் பந்தம் இல்லாது செல்கின்றேன்
என்று சொன்னாலும் அவர்கள் யாரும் மீள முடியாது.
மடாதிபதிகள் திருமணமாகாது இருக்கலாம். அன்று அரசன் காட்டிய வழியில் அவன் இயற்றிய சட்டத்தைக்
காக்கும் காவலாளிகள் தான் மடாதிபதிகள்.
காரணம் திருமணமானால் பிள்ளைகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள் என்று இப்படிப்
பிரித்து உருவாக்கி விட்டார்கள். அவர் வழியில்… அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும்
என்றும்
1.அருள் பெறத் தவம் இருக்கின்றேன் எனக்கு மனைவி
வேண்டாம் மக்கள் இருந்தால் இந்த நிலை வராது என்று இருந்தால்
2.இவரைப் போன்று மடையர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
3.நமது குருநாதர் அதைத் தான் சொல்வார்.
சொத்துக்காக சுகத்திற்காக வருகின்றார்கள். நாம் போற்றுகின்றோம்… ஆட்சி புரியும் நிலையில்
அந்தந்த மதத்திற்குக் குருவாக வரும் பொழுது குருவின் அருளைப் பெறுவதற்காக தவறுகள்
பல செய்கின்றார்கள்.
நமது குருநாதர் உலகில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் தெளிவாக எனக்குக்
காட்டினார். மனிதனால்
தன் உடலின் இச்சையைத் தான் வளர்க்க முடிகின்றது.
மதத்தின் அடிப்படையில் அவன் ஆட்சி புரிய எண்ணினால் அந்தச் சட்டத்தை இயற்றும் காவலன் தான். மதத்தைக் காக்கும் காவலாளிகளாகத் தான் அவர்கள் செயல்பட்டுக்
கொண்டுள்ளார்கள். மக்களை அவர்கள் வழியில் வழிப்படுத்தும் நிலைகள் தான் வருகின்றது.
ஆனால்
1.இயற்கையின் உண்மையின் இயக்கத்தின் நிலையை அறிந்து
2.மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை
மதங்கள் சிந்திப்பதில்லை.
மதங்கள் காட்டிய நிலையில் அவன் காட்டும் ஆண்டவன் தான் கடைசி முடிவு. ஈகையும் இரக்கம் கொண்டு பிறருக்கு நீ
உதவி செய் என்று சொல்லும் பொழுது அவன் இரக்க பாவத்தை ஈகையுடன் கேட்டறிந்தால் அந்த
உணர்வுகள் அவனுக்குள் வந்தால் இந்த விஷங்கள் அவனுக்குள் மாறி இவன் அழியும் நிலையாக
மீண்டும் இந்த புவிக்குள் சுழலும் நிலை தான் வருகின்றது. பிறவியில்லா
நிலை அடைவதில்லை.
மதத்தின் அடிப்படையில் வருபவர்களால் தன் மதத்தைக் காக்க உதவும்.
ஆனால்
1.ஞானிகள் காட்டிய நிலைகள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் அவன் வளர்ந்து ஒளியின்
சரீரமாகப் பெற்ற
2.அவனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.அந்த உணர்வின் துணை கொண்டு நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலை பெற முடியும்.
அந்த நிலையை அடைவது தான் மனிதனின் கடைசி நிலை.