ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2017

பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்

ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ தன்னைச் சுற்றி கூட்டைக் கட்டி அதற்குள் தான் சிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட விடுபட வேண்டும் என்று வலிமையான உணர்வுகளைச் சுவாசிக்கின்றது.

கூட்டின் வழியாக அது புற நிலைகளைப் பார்த்து இப்படி அடைபட்டுவிட்டோமே என்று எதை எதை எண்ணிப் பார்க்கின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தும் புழு சுவாசிக்க நேர்கின்றது.

அந்த உடல் நலிந்து சிதைந்து கூடு போல ஆகிவிடுகின்றது. குறுகிய காலத்தில் அந்த உயிர் நுகர்ந்த உணர்வுகள் அதற்குள் பொறிகளாகி பறக்கும் உணர்வு பெற்று அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது.

அந்தத் தட்டாண் பூச்சி அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப அடுத்த உருவங்கள் மாறிப் பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இதே போன்று தான் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது மனித உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்ரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும். 

பறக்கும் நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் போய் நிற்கும்.