ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ
மத்தியிலிருக்கும் உயிரின் பால் கண்களின் நினைவைச் செலுத்த வேண்டும். நான் தான்
அவன் அவன் தான் நான் என்ற நிலையில் உயிருடன் ஒன்ற வேண்டும்.
எந்த உணர்வு மோதினாலும் கண்ணின் நினைவு புருவ
மத்திக்குச் செல்ல வேண்டும். (வெளியிலிருந்து கவர்ந்தாலும் உள் முகமாக உயிருடன்
ஐக்கியமாக வேண்டும்)
தன் உணர்வின் தன்மையை
1,தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும்
2.தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு
3.உயிருடன் தொடர்பு கொண்டு விண்ணின் ஆற்றலைச்
சுவாசித்து,
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம்
வெளிப்படுத்தும் பேரருளைப் பெற்று
5.அந்த உணர்வின் தன்மையை நம் (உயிரின்)
சுழற்சிக்குள் இருக்கச் செய்ய வேண்டும்.
6.புருவ மத்தியில் ஒளிப் பிழம்பைக் காணலாம்
பேரொளியாக மாறும்.
இதுதான் “காயகல்ப சித்து” என்பது. அந்த நிலை
பெற்றவர் தான் போகமாமகரிஷி.
தன் உயிராத்மாவைப் பிரபஞ்சம் முழுவதும் படரச்
செய்து அவர் தம் உணர்வின் தன்மையை ஒளியாக்கிச் “சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக
ஒளியின் சரீரமாக…” விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.
1.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த
2.போகமாமகரிஷியின் அருள் உணர்வை நமக்குள்
சேர்த்தால்
3.”என்றும் அழியா ஒளிச் சரீரமாக” நாமும்
வாழலாம்.