ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2017

ஈவு இரக்கமற்ற நிலையில் மனிதனைக் கொன்று புசிக்கும் “தீவிரவாதம்… தோன்றக் காரணம்…!”

தீவிரவாதிகள் என்று உருவாகி இரக்கமற்றுக் கொல்கின்றார்கள் என்று சொன்னாலும் அந்தத் தீவிரவாதம் இன்று ஒவ்வொரு நாட்டிலும் உருவாகிவிட்டது.

தீவிரவாதத்தின் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வந்துவிட்டது.
1.மனிதனுக்கு மனிதன் கொன்று ரசித்து வாழ்வதும்
2.மனிதனுக்கு மனிதனே புசித்து வாழும் தன்மை வந்துவிட்டது.

இந்த  தீவிரவாதிகளும் கொன்றதைச் சும்மா விடுவதில்லை. அவனைப் பழி தீர்த்து அவனைத் தின்று நான் இரசித்து நான் வாழ்கின்றேன் விழுங்கி விடுவேன் என்று செயல்படுத்துகின்றனர்.

இது எதனால் வந்தது? எப்படி வந்தது?

அதாவது ஒரு காலத்தில் இந்த ஆசியாக் கண்டத்திலே இஸ்ரேல் என்ற நாட்டில் யூதர்கள் இதைச் செயல்படுத்தி வந்தார்கள்.

யூதர்களுக்குள் போர் வந்தால் பெண்களும் சரி ஆண்களும் சரி உன்னைக் கொன்று உன் ஈரலை நான் விழுங்கப் போகின்றேன் என்று சொல்வதோடு மட்டுமல்ல மற்றவரைக் கொன்று அந்த ஈரலைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள்.

வெறித் தன்மையான ஊறப்பட்ட இந்த உணர்வுகள் கொண்டுதான் ஆண்களானாலும் பெண்களானாலும் “உன்னைக் கொன்று… உன்னை நான் முழுமையாகவே விழுங்குவேன்…!” என்று கொன்று தின்றார்கள்.
1.அத்தகைய உணர்வுகள்… அங்கே பரவப்பட்ட நிலைகள் தான்
2.இன்று உலகம் முழுவதற்கும் பரவிக்கொண்டு இருப்பது.

புது வருடம் ஒன்றாம் தேதி அவர்கள் தத்துவத்தை வழக்கமாக அந்த நாளாக வைத்து இவர்கள் கொண்டாடும் நேரத்தில்
1.தீமை என்று உணர்த்தி தீமையிலிருந்து விடுபட வேண்டும்
2.புது வருடம் மகிழ்ச்சியான வருடம் (“HAPPY NEW YEAR”) அவர்கள் சொன்னாலும்
3.அந்த யூத வம்சம் தான் இரக்கமற்றுக் கொன்றது… ரசித்து வாழ்ந்தது….!

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானிகள் மகரிஷிகள் நமக்கு உணர்த்தியது:-
1.ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று.
2.நாம் சுவாசிக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி நமது உயிர் ஈசனாகின்றது.
3.அவன் அமைத்த கோட்டை தான் இந்த உடல்
4.இந்த கோட்டையை நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
5.அவனுக்குள் ஒன்றி அவனாகவே ஆகவேண்டும்.

அவனுடன் ஐக்கிமாக வேண்டும் என்றால் விண் சென்ற மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து அணுவாக உருவாக்கியே ஆகவேண்டும்

“என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…” என்று உயிரோடு ஒன்றி “ஒளியென்ற நிலை” நாம் பெற வேண்டும்.

இன்றைய உலகில் எது எப்படி இருந்தாலும் அந்த அகஸ்தியன் உணர்வு ஒன்றுதான் இந்த உலகை இருளில் இருந்து மீண்டும் மீட்கும். 

இது நிச்சயம்...!