ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2017

மகரிஷிகளைப் பற்றி இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதே நாம் தெரிந்து கொள்ள முடியும்

பெரும்பகுதியானவர்கள் நாம் என்ன நினைக்கின்றோம்…!

நான் எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கின்றேன்.. அறிந்திருக்கின்றேன்… எல்லாம் செய்திருக்கின்றேன். ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லும் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

1.படித்த என்னாலேயே இதைப் பின்பற்ற (FOLLOW) முடியவில்லையே…!
2.சாதாரணமானவர்கள் எப்படிப் பின்பற்ற முடியும்…! எப்படிப் புரிந்து கொள்ள முடியும்…! என்று முடித்துக் கொள்கிறோம்.

பிறரை எண்ணி இப்படித் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் நிலைக்குத்தான் இது நம்மை அழைத்துச் செல்லும்.

சிறிய குழந்தைகள் பள்ளிக்கே சென்றிருக்காது. ஒரு மூன்று அல்லது நான்கு வயது உள்ள குழந்தைகள் டி.வி.யைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

டி.வி.யில் பாடும் பாட்டையெல்லாம் அந்தக் குழந்தை பாட ஆரம்பிக்கும். அதில் ஆடிய ஆட்டமெல்லாம் ஆட ஆரம்பிக்கும்.

நம்மால் அந்த மாதிரி ஆடிக் காட்டவும் பாடிக் காட்டவும் முடியுமோ…!

ஏனென்றால் அந்தக் குழந்தை
1.கூர்மையாகக் கவனித்தது.
2.அந்த உணர்வுகள் அதற்குள் பதிவாகின்றது.
3.அதையே மீண்டும் செயலாக்குகின்றது.

அதைப் பார்த்துவிட்டு என் குழந்தையைப் பாருங்கள்…! டி,வி.யைப் பார்த்துவிட்டு அப்படியே… பாடுகின்றது… ஆடுகின்றது…! என்று நாம் புகழ் பாடுவோம்.
குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அது அங்கே இயக்குகின்றது.

“குழந்தைப் பருவம்” மாதிரி ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அவர்கள் (ஞானிகள்) செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்வோம்.
2.அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கூர்மையாகப் பதிவாக்கினால் அது வரும்.

பதிவாக்காதபடி மற்றவர்களை எண்ணினால் என்ன ஆகின்றது?

“எங்கே நாம்…! எத்தனையோ புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்… அதில் உள்ளதை ஒன்றும் இவர் சொல்லவில்லை… இவர் (என்னமோ) புதிதாகச் சொல்கிறார்…!

நம்மால் ஒன்றும் பின்பற்ற முடியவில்லையே…! படித்தவர்களுக்கெல்லாம் அது தான் முன்னாடி நிற்கும். இவர் சொல்வதை எல்லாம் “அதை எப்படிப் பார்ப்பது?” என்ற எண்ணம் தான் வரும்?

பள்ளியில் நாம் படிப்படியாகப் படித்துத்தான் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். விஞ்ஞானியாக ஆனதும் அப்படித்தானே.

மெய்ஞானிகளைப் பற்றி சாமி உபதேசிக்கும் அருள் உணர்வுகளை எல்லாம்
1.”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால்
2.இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்.
3.அதற்குண்டான மெய் உணர்வைப் பெறவும் செய்யலாம்.